உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

தோங்குநீர் உலகிடை யாவரும்

நீங்கா இன்பமொடு நீடுவாழ் கெனவே!

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)

20. மண்வாழும் பல்லுயிரும் வானவரும் இமையவரும் கண்வாழும் மாநகர் கிளை அனைத்தும் களிகூர அந்தரதுந் துபிஇயங்க அமரர்கள் நடம்ஆட

இந்திரர்பூ மழைபொழிய இமையவர்சா மரையிரட்ட முத்தநெடுங் குடைநிழற்கீழ் மூரியர சரிவுணைமேல் மெய்த்தவர்கள் போற்றிசைப்ப வீற்றிருந்த ஒரு பெரியோய்!

(தாழிசை)

எறும்புகடை அயன்முதலா எண்ணிறந்த என்றுரைக்கப் பிறந்திருந்த யோனிதொறும் பிரியாது சூழ்போகி

எவ்வுடம்பில் எவ்வுயிர்க்கும் யாதொன்றால் இடரெய்தின் அவ்வுடம்பின் உயிர்க்குயிராய் அருள்பொழியும் திருவுள்ளம்

அறங்கூறும் உலகனைத்தும் குளிர்வளர்க்கும் மழை முழக்கின் திறங்கூற வரைகதிரும் செழுங்கமலம் நனிநாண

ஒருமைக்கண் ஈர்ஒன்பான் உரைவிரிப்ப உணர்பொருளால் அருமைக்கண் மலைவின்றி அடைந்ததுநின் திருவார்த்தை!

இருட்பார மினைநீக்கி எவ்வுயிர்க்கும் காவலென அருட்பாரம் தனிசுமந்த அன்று முதல் இன்றளவும் மதுஒன்று மலரடிக்கீழ் வந்தடைந்தோர் யாவர்க்கும் பொதுஅன்றி நினைக்குரித்தோ புண்ணிய! நின் திருமேனி!

(பேரெண்)

ஆருயிர்கள் அனைத்தினையும் காப்பதற்கே அருள் பூண்டாய்! ஓருயிர்க்கே உடம்பளித்தால் ஒப்புரவிங் கென்னாகும்!

தாமநறுங் குழல்மழைக்கண் தளிரியலார் தம்முன்னர்க் காமனையே முனந்தொலைத்தால் கண்ணோட்டம் யாதாங்கொல்!