உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆலாடு, ஆலம்பாறை, ஆலஞ்சேரி என்னும் ஊர்களும், இராமநாதபுரத்தில் உள்ள ஆலடி நத்தமும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடியும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆலம்பட்டியும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலவேலியும் ஆலமரத்துடன் தொடர்புடைய பெயர்கள் அல்ல; ஆலத்தின் (நீரின்) தொடர்புடைய பெயர்கள் என்று தெரிகின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பொழிலும், செங்கற் பட்டு மாவட்டத்தில் உள்ள ஆலங்காடும் (திருவாலங்காடு) உண்மை யில் ஆலமரத்தின் தொடர்பாகப் பிறந்த பெயர்களே; ஆலின் (நீரின்) தொடர்புடைய பெயர்கள் அல்ல. ஏனென்றால் அப்பெயர்களில் உள்ள பொழில், காடு என்னும் சொற்களே அவை ஆலமரத்தின் தொடர் புடையவை என்பதை வலியுறுத்துகின்றன.

சென்னை மாநகரத்தில் வன்னியர் தேனாம்பேட்டைக்கும் தியாகராய நகருக்கும் இடையேயுள்ள மலைச்சாலையின் மேற்குப் பக்கத்தில் ஆலமந்தாள் கோயில் என்று ஒரு சிறுகோயில் உண்டு. ஆலமந்தாள் என்பது ஆலமர்ந்தாள் என்பதன் திரிபு. இக்கோயிலின் அருகில் ஒர் ஆலமரமும் இருக்கிறது. ஆலமரத்துக்கு அருகிலே இருப்பதனாலே இந்தக் காளி கோயிலுக்கு ஆலமர்ந்தாள் கோயில் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று பலரைப் போலவே நானும் கருதிக்கொண்டிருந்தேன். ஆல் என்பதற்கு நீர் என்னும் பொருளும் உண்டு என்று அப்பொழுது எனக்குத் தெரியாது. ஆல் என்றால் நீர் என்பதை அறிந்த பிறகு, இக்கோயிற் பெயரின் உண்மைக் காரணம் தெரிகின்றது. ஆலமர்ந்தாள் கோவிலுக்கு அருகில் இப்போது நீர் கிடையாது.ஆனால், இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆலமர்ந்தாள் கோயிலுக்குப் பின்புறத்திலே மிகப் பெரிய நீர் நிலை இருந்தது. அந்த நீர்நிலைக்கு மயிலாப்பூர் ஏரி என்பது பெயர். அந்த ஏரியின் கரையில் தான் ஆலமர்ந்தாள் கோயில் இருந்தது. அந்த ஏரியின் கரைமேலே இக்கட்டுரையாளர் அக்காலத்தில் பலமுறை நடந்திருக்கிறார். இப்போது மயிலாப்பூர் ஏரி முழுவதும் மறைந்துபோய், தியாகராயநகர் என்று பெயர் பெற்றுத் தெருக்களும், வீதிகளும், வீடுகளும், கடைகளும் நிறைந்து பஸ்வண்டிகளும் மோட்டார் வண்டிகளும் ஓடிக்கொண்டு மக்கள் வாழும் நகரமாகக் காட்சியளிக்கிறது. இவ்வாறு தியாகராய நகராக மாறிப்போன மயிலாப்பூர் ஏரியின் கரையிலேதான் ஆலமர்ந் தாள் என்னும் பெயருள்ள காளிகோயில் இருந்தது. இன்றும் இருக்கிறது. ஆலமர்ந்தாள் என்னும் பெயரின் காரணம் இப்போது எனக்கு நன்கு