உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19-ஆம் நூற்றாண்டில் அச்சான இலக்கிய நூல்கள்

19-ஆம் நூற்றாண்டிலே அச்சுக்கூடம் வைக்கும் உரிமை நம்மவருக்குக் கிடைத்தபோது பழைய, புதிய நூல்கள் அச்சுப் புத்தகங்களாக வெளிவந்தன. அவை கணக்கிலடங்கா. பழைய இலக்கிய நூல்கள் முதல் முதலாக ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சுப் புத்தகமாக வெளிவந்தவற்றை இங்குக் காட்டுகிறேன். இதுவும் முழுவிவரப் பட்டியல் அன்று. இதில் பல நூல்கள் விடுபட்டுள்ளன. தெரிந்தவற்றில் சிலவற்றை மட்டும் கீழே தருகிறேன்.

ஆண்டு நூற்பெயர்,

ஆசிரியர் பெயர்.

பதிப்பித்தவர் பெயர்.

1812

1830

1834

1834

1835

திருக்குறள், நாலடியார்

நீதி நெறி விளக்கம்.

குமரகுருபர சுவா மிகள்

தஞ்சைவாணன் கோ வை, குன்றத்தூர் அட்டாவதானி

சொக்கப்ப நாவலர்

உரையுடன்.

பொன்வண்ணத் தந்தாதி.

புறப்பொருள் வெண்பா மாலை (மூலம்) ஐயன் ஆரிதனார்

ஆங்கில மொழிபெயர்ப் புடன் H. Stokes என்பவர் அச்சிட்டார், சென்னை.

புதுவை நயனப்ப முதலியார் பதிப்பு. சரஸ்வதி

அச்சுக்கூடம், 1843-இல்

மகாவித்துவான் மயிலை

பதிப்பு சென்னை.

கல்வி விளக்க

அச்சுக்கூடம் சென்னை.

'இலக்கணப் பஞ்சகம் என்னும் தொகுப்பில் தாண்டவராய முதலியார் பதிப்பித்தார், சென்னை.