உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

141

(நன்னூல், பாயிரம், 48ஆம் சூத்திர உரை). “செய்வித்தானாற் பெயர் பெற்றன சாதவாகனம் இளந்திரையமென அவை” என்று இறையனார் அகப்பொருளுரையாசிரியரும் கூறுகிறார். இளந்திரையன் என்னும் சோழ அரசன் பெயரினால் இது இயற்றப்பட்டது போலும், இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

16. இறைவானறையூர்ப் புராணம்

தென்ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலூகாவில் இறைவானறையூர் இருக்கிறது. இவ்வூர் இப்போது எலவானாசூர் என்று வழங்கப்படுகிறது. இவ்வூர்ப் புராணத்தைப் பாடியவர் திருமலை நயினார் சந்திரசேகரர் என்பவர். இவர், திருவண்ணாமலை மெய்கண்ட சந்தானத்தைச் சேர்ந்த சத்தியஞான தரிசனிகளின் மாணாக்கர். இந்தப் புராணத்தைப் பாடியதற்காக இவருக்கு, இவ்வூர் ஆனந்த தாண்டவன் வீதியில் வீடு கட்ட மனையும், நிலமும் தானம். செய்யப்பட்டதை இவ்வூரிலுள்ள சாசனம் கூறுகிறது.2 தானம் செய்யப்பட்ட காலம் சக ஆண்டு 1432 (கி.பி. 1510) பிரமோதூத ஆண்டு புரட்டாசி மாதம் 25 ஆம் நாள்.

17. ஓவிய நூல்

ஓவியம் எழுதுவது பற்றிய ஒவிய நூல் ஒன்று இருந்ததென்பதை அடியார்க்குநல்லார் என்னும் உரையாசிரியர் கூறுகிறார். சிலப்பதிகாரம், வேனிற்காதை (25ஆம் அடி) உரையில் அவர் கீழ்வருமாறு எழுதுகிறார்:

66

"ஓவிய நூலுள் நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்குத லென்னும் இவற்றின் விகற்பங்கள் பலவுள; அவற்றுள் இருத்தல், திரிதரவுடையன வும் திரிதரவில்லனவுமென இருபகுதிய; அவற்றுள் திரிதரவுடையன; யானை, தேர், புரவி, பூனை (சேனை?) முதலியன; திரிதரவில்லன ஒன்பது வகைப்படும். அவை; பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படியிருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், புண்டிலம், ஏகபாதம் எனவிவை;

என்னை?

'பதுமுக முற்கட் டிதமே யொப்படி

யிருக்கை சம்புட மயமுகஞ் சுவத்திகந் தனிப்புட மண்டில மேக பாதம்

உட்பட வொன்பது மாகுந்

திரிதர வில்லா விருக்கை யென்ப

என்றார் ஆகலானும்.