உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லின் இதழ்கள்/பதிப்புரை

விக்கிமூலம் இலிருந்து

பதிப்புரை

ந்நூலை எழுதியுள்ள ஆசிரியர் திரு. நீலமணி அவர்கள் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அன்னை தெரேசாவின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதி குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தங்கப் பதக்கத்தையும்— இன்றைய இலங்கையின் கொந்தளிக்கும் நிலைமையையும்; அங்கு வாழும் தமிழர்களின் கண்ணீர்க் கதையையும் மையமாகக் கொண்டு, அத்தப் பயங்கரச் சூழ்நிலையில் பரிதவிக்கும் குழந்தைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய “தென்னை மரத் தீவினிலே” என்ற நூலுக்காக குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் வெள்ளிப் பதக்கத்தையும்—

“கவிமணியின் கதை”க்காகத் தமிழக அரசின் பரிசையும்; சிறந்த சிறுகதைக்காக இலக்சியச் சிந்தனைப் பரிசையும் பெற்றவர்—

புல்லின் இதழ்கள் என்னும் இந்தப் புதினம், கலைமகளில் தொடர் கதையாக வந்த போதே பல்லாயிரக் கணக்கான வாசகர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளது. இதை எங்கள் பதிப்பகத்தின் மூலம் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.

எங்களின் இந்த நூலுக்கு சிறப்பானதொரு சிறப்புரை வழங்கி ஆதரித்துள்ள உயர்திரு. டாக்டர். கலைஞர் அவர்களுக்கும்—

இசை உலகில் பெரும் புகழ் பெற்று, இன்றைய இளங் கலைஞர்களுக்கு வழி காட்டியாய்த் திகழும் சங்கீத கலாநிதி டாக்டர் செம்மாங்குடி ரா. ஸ்ரீனிவாசய்யர் அவர்களுக்கும்—

இந்த நாவலை வெளியிட எங்களுக்கு அன்போடு அனுமதி அளித்ததோடு - அதற்கான மூவண்ண முகப்புப் பட பிளாக்குகளும் கொடுத்துதவிய பெருந்தகை கலைமகள் அதிபர் உயர்திரு. ரா. நாராயணஸ்வாமி அவர்களுக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜானகி நீலமணி