உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

8 உதவிடும் குறிப்புகள் பலவும் ஒருங்கே அமைந்திட அமைந்ததித் தெளிவுரைப் பதிப்பே! இப்பதிப் பிரண்டு தொகுதிக ளவற்றுள் முதலாம் தொகுதி முதற்பாட் டதுமுதல் இருநூறு வரையும் கொண்டதல் திதுவாம். தமிழ்நலம் செழிக்கத் தக்கன என்றும் செய்வதில் உவந்திடும் சிந்தையர் பாரி செல்லப்பர் அவர்கள் செவ்விதாப் பதித்தே வழங்குவர் இதனை வாழ்த்துவென் அவருளம்! தமிழின் அன்பே தழைத்திடும் உளத்தினர் அனைவரும் விருப்புடன் வாங்கிக் கற்றே இத்தமிழ்ப் பணிக்கெனை மென்மேல் ஊக்கிச் செலுத்திட வேண்டுவென் சிந்தையில் நினைந்தே! என்னுளம் தனதாய்க் கொண்டெனை இயக்கும் இறைவி பராபரை இன்னருள் போற்றி வழங்குவென் இந்நூல்! வண்தமிழ் வளரநம் தமிழர் வாழ்கபல் லாண்டே! 63 70 75 புலியூர்க் கேசிகன் 1-9-1990

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/9&oldid=1627118" இலிருந்து மீள்விக்கப்பட்டது