உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

27


[(து வி) தலைவி விரும்பியவண்ணம் அவளைத் தலைவ னுடனே ஒன்றுசேர்த்த பின்னர், தோழி, 'இவளை என்றும் பேணிக் காப்பாயாக' என, அவனிடம் ஓம்படுத்துக் கூறுவ தாக அமைந்த செய்யுள் இது.) அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும் பொன்னேர் மேனி மணியின் தாழ்ந்த நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும், நீத்தல் ஓம்புமதி பூக்கேழ் ஊர! இன்கடுங் கள்ளின் இழையணி நெடுந்தேர்க் கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீ இயர் வெண்கோட்டு யானைப் போஓர் கிழவோன் பழையன் வேல்வாய்த் தன்னநின் பிழையா நன்மொழி தேறிய இவட்கே. 5 பூக்கள் கெழுமிய ஊரை உடையவனே! இனிப்புடை யதும் கடுப்புடையதுமான கள்ளுணவையும், ஆபரணங் களால் அழகுபடுத்தப்பெற்ற நெடிய தேர்களையும் உடை யவர், வலிமிக்க சோழவேந்தர்கள். அவர்கள், கொங்கு நாட்டாரைப் பணியச் செய்வித்தலின் பொருட்டாக, வெளிய கோட்டினையுடைய போர்க்களிறுகளை மிகுதி யாகக் கொண்டிருந்தவனும், 'போஓர்' என்னும் ஊருக்குரிய வனுமான, 'பழையன்' என்னும் குறுநிலத் தலைவனை ஏவினர். போரிடையே வெற்றியுற்று வந்த பழையனின் வேற்படையானது, தன் தொழிலிலே தப்பாது விளங்கி, அவனுக்கு வெற்றியைக் தேடிந்தந்தது. அங்ஙனமே, பிழை யாது நிலைபெறும் நின்னுடைய நன்மைதரும் சொற் களைக் கேட்டு, அவற்றை உண்மையே' எனத் தெளிந்தவள் இவள். இவளுக்கு, அண்ணாந்து உயர்ந்த வனப்பினைக் கொண்ட கொங்கைகள் தளர்ச்சியுற்றுப் போயின வானாலும், பொன்னையொத்த மேனியிடத்துக் கருமணி போலத் தாழ்ந்திருக்கும் நல்ல நெடிய கூந்தலானது நரையோடு முடிக்கப்பெறும் தன்மையை அடைந்தாலும், வளைக் கைவிடலின்றிக் காத்தலை நீயும் பேணுவாயாக! கருத்து: 'இளமை நோக்கி இவளைக் காதலிக்கும் நீதான் முதுமையினும் இவளைக் கைவிடலின்றிக் நி காத்தலைப் பேணும் லையான மாறாக் காதலன் பினனாகத் திகழ்வாயாக' என்ப பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/28&oldid=1627150" இலிருந்து மீள்விக்கப்பட்டது