உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

73


உள்ளுறை : நாவற் கனி தலைவியாகவும் தும்பிகள் தோழியராகவும், ஞெண்டு தலைவனாகவும். இரைதேர் நாரை தமராகவும் கொள்க. நாவற்கனியைத் தம்மினம்

என்று மயங்கிக் காத்துச் சூழ்ந்த தோழியரினின்றும்,

அதனைத் தானடைந்து இன்புறுதற்கு உரியதென உணர்ந்த ஞெண்டானது பற்றித் துய்க்கத் தொடங்குவது, தலைவி யோடு தலைவன் கொண்டிருந்த களவுறவாகவும், அதனைக் கண்டு கலங்கிய தோழியரது பூசல், அதுகண்டு விலகியெழுந்து பூசலிட்ட வண்டினத்தின் பூசலாகவும் கொள்க. தமர் அறிந் தமை கண்டு தலைவன் நாரை வரக்கண்டு ஒதுங்கியது, ஞெண்டு ஒதுங்கியதற்கு ஒப்பாகும். நாரையும் முடிவில் ஞெண்டிற்கே விட்டு அகல்வதுபோலத் தமரும் தலைவனுக்கே அவளை மணத்தால் தந்து ஒன்றுபடுத்தினர் என்பதாம்.

கனியை

மேற்கோள்: 'களவுறவினாலே இன்புற்ற நிலையிலும், முறையாக மணந்து துய்க்கப் பெற்றோமில்லையே என்ற கவலையினாலே உண்டானது தலைவியின் வேறுபாடு என்றும், அதுதானும் மணவுறவினாலே நீங்கியது எனவும், இச் ச் செய்யுளைக் காட்டிக் கூறுவர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ. 150 உரை.)

'தலைமகன், தலைமகளிடத்தே இற்கிழமையை வைத்த விடத்து, அறத்தினானாதல் பொருளினானாதல் அவனுக் காகிய இசையும் கூத்தும் முதலியவற்றான் அத்திறத்தை மறத்தலும் நிகழும். அக்காலத்தே அவனைத் திருத்துதலின் பொருட்டாகத் தோழி இவ்வாறு கூறுதல் உண்டு' என்பார் இளம்பூரணனார். (தொல். பொருள். சூ 148. உரை.) இவ்வாறு கொள்ளின் செய்யுள் மேலும் பொருள்நயம் சிறத்தலையும் அறிந்து உணர்க.

36. எதனை இழந்தது!

பாடியவர்: சீத்தலைச் சாத்தனார். திணை : குறிஞ்சி. துறை: இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி கூறியது.

(து-வி.) வரைந்து மணந்துகொள்ளும் முயற்சியினை நினையாதானாகிய தலைவன் ஒருவனுக்கு அறிவுறுத்தக் கருதினளான தோழி, இவ்வாறு தலைவியிடம் கூறுவாள் போல. ஒரு சார் செவ்விநோக்கி ஒதுங்கிநிற்கும் அவனும் கேட்கக் கூறுகின்றாள்.]

15.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/74&oldid=1627196" இலிருந்து மீள்விக்கப்பட்டது