உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

நற்றிணை தெளிவுரை


சொற்பொருள்: திருமுகம் இறைஞ்சல் -தலை கவிழ்தல்; நாணத்தால் நேர்வது. கைம்மிகல் - கைகடத்தல், அடக்கவும் அடங்காது மிகுதல். 'பெரும்பெயர்க் கூடல் - பெரும் புகழுடையதான மதுரை.

விளக்கம்: 'புலி விளையாடிய புலவுநாறு வேழத்தின் சிவந்த மருப்புப் போன்ற கண்கள்' என்றான், அவள் சினத் தோடு தன்னை நோக்கினதால்; அச் சினந்தணிந்து அருளோடு நோக்குதலையும் யாசிக்கின்றான். 'அரண்தலை மதிலராகவும். அவரது முரசுகொண்டு ஓம்பரண் கடந்த செழியனின் கூடலன்ன தோள்' என்றது, 'என் வலியழித்து என்னைத் தனக்கு ஆட்பட வருத்துதலன்றித் தான் எனக்கு வாய்த்தல் எளிதாயிராத தோள்நலம்' என்பதனால். ஆகவே, அவளாகவே மனமிரங்கி அருளுதல் வேண்டும் என்பதுமாம்.

மேற்கொள்: 'மெய் தீண்டி நின்ற தலைவன், யான் தழீ இக்கொண்டு கூறினால் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இறைஞ்சி நின்று நாணத்தாற் கண்ணைப் புதைத்தி்'யென இடையூறு கிளத்தலைக் கூறிக், 'காமங் கைம்மிகின் தாங்குதல் எளிதோ'வென, 'நீடு நினைத்து இரங்கலை'க் கூறிப், 'புலியிடைத் தோய்ந்து சிவந்த கோடு' போல என்னிடத்துத் தோய்ந்து காமக்குறிப்பினாற் சிவந்த கண்ணெனக் கூடுதலும் கூறிற்று' என. இச்செய்யுளை எடுத்துக்காட்டி நச்சினார்க்கினியர் கூறுவர். (தொல். பொருள்.சூ.10. உரை).

இச்செய்யுளை 'இடந்தலைப்பாடு' என்னும் துறைக்குப் பேராசிரியர் காட்டுவர் (தொல். பொருள். சூ.498 உரை).

இச்செய்யுளை, இயற்கைப் புணர்ச்சிக்கண், தலைவன் தலைவியைச் சொல்வழிப்படுத்தல் என்னும் துறைக்கு மேற் கோளாகக் கொண்டு. 'தான் சொல்கின்ற சொல்லின் வழி அவள் நிற்குமாறு படுத்துக் கூறுதல்' என்பர் ஆசிரியர் இளம்பூரணனார் (தொல். பொருள். சூ. 98 உரை).

பிற பாடங்கள் : 'புலி விளையாடிய புகர்முக வேழம்", ஆண்டலை மதிலர்.'

40. கள்வன்போல வந்தான்!

பாடியவர் : கோண்மா நெடுங்கோட்டனார். திணை: பாங்காயினார் கேட்பப் மருதம். துறை: தலைமகட்குப் பரத்தை சொல்லியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/81&oldid=1627203" இலிருந்து மீள்விக்கப்பட்டது