உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

93


பூண்அணி ஆகம் புலம்பப் பாணர்

அயிர்ப்புக்கொண் டன்ன கொன்றைஅம் தீங்கனீ பறை அறை கடிப்பின் அறை அறையாத் துயல்வர வெவ்வளி வழங்கும் வேய்பயில் அழுவத்து எவ்வம் மிகூ உம் அருஞ்சுரம் இறந்து

நன்வாய் அல்லா வாழ்க்கை

மன்னாப் பொருட்பிணிப் பிரிதும்யாம் எனவே.


5

10

கனிகளைக்

முழக்கு அதனை

ஐயனே! கொன்றையின் அழகிய இனிய காணும் பாணர்கள், தாம் பறையினை அடித்து தற்குப் பயன்படுத்தும் குறுந்தடியாமோ என்று நோக்கி மயக்கங்கொள்ளுமாறு, அதன் தாழ்ந்த கிளைகள் பாறையிடத்தே சென்றுசென்று மோதியவாய் அசைந்தாடிக் கொண்டிருக்கும். அங்ஙனமாகக் காற்று வெம்மையுடனே வீசிக் கொண்டிருப்பதும், மூங்கில்கள் நிறைந்த பெரிய இடத்தை யுடையதுமான, வருத்தத்தை மிகுதியாகக் கொண்ட, கடத்தற்கு அரிதான காட்டு வழியைக் கடந்து போதலையும் நீர் நினைந்தீர். நன்மை வாய்த்தலில்லாத வாழ்க்சையினைத் தருவதான பொருளிடத்தே பிணிக்கப் பட்ட உள்ளத்தினராய், தலைவியது பூணிட்டு அழகுடன் திசழும் மார்பகமானது வருத்தமுறும்படியாக இவளை யாம் பிரிதும்' எனவும் கூறினீர். இவ்வுலகத்தே, தலைவி யோடு கூடிப் பெறுகின்றதான இன்பச் செவ்வியும், எய்து போக்கப்பட்ட கணையினது நிழலைப்போல. நாள்தோறும் விரைவிற் சென்று சென்று முடிவிலே முற்றவும் இல்லாதே போய்க் கழியும் இயல்பைக் கொண்டனவாம். இவற்றை, 'நீயிர் கண்டறிந்தவர் அல்லீர்' என் சொல்வதும் அரிதாகும். ஆதலின் அதனை நன்றாகப் பேணுகின்ற தகைமையினராக ஆவீராக!

கருத்து: 'இவளைப் பிரிதல் அறத்திற்கும் ஏற்காத ஒரு கொடுந்தன்மையது' என்பதாம்.

சொற்பொருள் : வைகல் - நாள் பேணீர்.பேணுந்தகை மையீர்: ஆயிர்ப்பு-மயக்கம் பறை பாலைக்குரிய கோட்பறை. துயல்வரல் - அசைந்தாடல். வெவ்வளி-

சூறை

வெம்மை கொண்ட கோடைக் காற்று. அழுவம் - காடு. நன்வாய் நன்மை வாய்த்தல்; நன்னெறியும் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/94&oldid=1627216" இலிருந்து மீள்விக்கப்பட்டது