உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

நற்றிணை தெளிவுரை


'ஏதி லாளனும்' என்ப; போதுஅவிழ்
புதுமணற் கானல் புன்னை நுண்தாது
கொண்டல் அசைவளி தூக்குதொறும், குருகின்
வெண்புறம் மொசிய வார்க்கும், தெண்கடல்
கண்டல் வேலிய ஊர் 'அவன்
பெண்டு'என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே!

திருத்தமாக வடிக்கப்பெற்ற சுதிரினையிட்டு முறுக்கிய வலிய கயிற்றைக் கொண்ட பெருவலையினை, இடிக்குரலைப்போல ஆர்த்தெழும் அலைகளையுடைய கடலிடத்தே இடும் பொருட்டாக. தோணி நிறைந்துபோமாறு பெய்யப்பெற்ற வலையைக் கொண்ட தோணியினை, அடக்குதற்கரிய களிற்றினை அடக்கிச்செலுத்தும் பரிக்கோற்காரர் தன்மைபோலப் பரதவர் கடலினிடையே செலுத்திச் செல்வர். சிறுபூக்களையுடைய ஞாழல் மரங்களைக் கொண்ட அத்தகைய பெரிய கடற்கரை நாட்டினனாகிய நம் தலைவனை, நமக்கு அயலானாயினான் என்றும் ஊரார் கூறுவர். புதுமணற்பரப்பிலேயுள்ள கானலிடத்துப் புள்னையினது மலர்ப்போது, இதழவிழ்கின்றதனாலே அமைந்த நுண்ணிறப் பூந்தாதினை வீசுகின்ற கீழ்காற்று மோதி எடுக்குந்தொறும், குருகினனது வெள்ளிய முதுகுப்புறமானது மூடி நிறையுமாறு சொரிந்திருக்கும் தெளிந்த கடற்பரப்பிடத்தேயுள்ள, தாழை மரங்களை வேலியாகக் கொண்ட இவ் ஊரானது. அப்பரத்தையினையே அவன் கிழத்தியென அறிந்ததாயும் இருக்கின்றது. இந்தச் சொற்களை இனி மாற்றியமைத்தல் என்பது எவர்க்கும் அரிதாகும். ஆதலால் இனி அவருறவை யாமும் ஒருபோதும் விரும்பேம் என்பதாம்.

கருத்து : 'இனி அவர் அவளுடனே யாயினும் இன்புற்று வாழ்க' என்பதாம்.

சொற்பொருள் : கதிர் – வலையை முறுக்கும் கம்பி. வன்ஞாண் – வலிய நூற்கயிறு. காழோர் – பரிக்கோற்காரர்; குத்துக்கோற்காரர். சிறையருங் களிறு – அடக்கிக் கட்டுப்படுத்துதற்கரிய மதகளிறு. குருகு – நாரை. கண்டல் – தாழை. பெண்டு – இற்கிழத்தி

விளக்கம் : 'பெருவலை நிரையப் பெய்த அம்பியை ஒடக்கோவிட்டுச் செலுத்தும் பரதவரது தோற்றம், காழோர் சிறையரும் களிற்றினை அடக்கிச் செலுத்தினாற்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/147&oldid=1678212" இலிருந்து மீள்விக்கப்பட்டது