உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

109


என்றது. அவனுக்குரிய மலைநாட்டினின்று இழிந்துவரும் காட்டாறு அதுவாதலால், 'தாம் அவ்விடத்திற்கு வந்திருப்பது அவ்வாறு கூறிய அன்னையின் அருளினாலே தான்' என்றதாம். அவள் அன்புடையாள் ஆதலின், தலைவன் வரைந்துவரின் மறாது மணத்திற்கு இசைதலும் நேர்வள் என்பதுமாம் "மருந்தும் ஆகும்' பனியும் தீர்குவள்' என்றாள் எனச் சொல்லியவாற்றால், வுறவை அன்னை அறிந்தனள் என்பதைப் பெறவைத்தனள்.

54. குருகே கூறாய் !

பாடியவர்: சேந்தங் கண்ணனார். திணை : நெய்தல். துறை: காமமிக்க கழிபடர் கிளவி.

( [து-வி.) தலைவனை

நெடுநாட் கண்டு இன்புறப் பெறாது. நோய்மிகுந்த தலைவி, கடலிலே இரைதேடிப் பின் அவனூர்ப் பக்கமாகப் பறந்து செல்லும் நாரையை விளித்து, இவ்வாறு கூறுகின்றாள்.]

வளைநீர் மேய்ந்து கிளைமுதல் செலீ இ

வாப்பறை விரும்பினை ஆயினும், தூச்சிறை

இரும்புலால் அருந்தும்நின் கிளையொடு சிறிதிருந்து கருங்கால் வெண்குருகு! எனவ கேண்மதி: பெரும்புலம் பின்றே, சிறுபுன் மாலை; அதுநீ அறியின் அன்புமார் உடையை; நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, உன்குறை இற்றாங்கு உணர உரைமதி - தழையோர் கொய்குழை விரும்பிய குமரி ஞாழல் தெண்திரை மணிப்புறம் தைவரும் கண்டல் வேலிநும் துறைகிழ வோற்கே!

5

10

கரிய கால்களையுடைய வெண்ணிறக் குருகே! நின் சுற்றத்தோடும் சென்று கடல் நீரிடத்தே மேய்ந்துவிட்டு, தாவிப் பறத்தலினை விரும்பினையாய் உள்ளனை. ஆயினும், தூய சிறகுகளையுடையவும், மிக்க புலவைத் தின்னுபவும் ஆகிய நின் சுற்றத்தோடும் சிறிது நேரம் தங்கியிருந்து, என் சொற்களையும் கேட்பாயாக. சிறுமையும் புன்மையும் கொண்ட இந்த மாலைக் காலமானது எனக்குப் பெருவருத் தத்தைத் தருகின்றது. அதனை நீ அறிந்தால், என்பால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/110&oldid=1627232" இலிருந்து மீள்விக்கப்பட்டது