உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

நற்றிணை தெளிவுரை


யிலே பலருங்காண அவனை இல்லிடத்து வரக்கண்டாள் தோழி. அவன் வரைந்து வருதலான செய்தியை யூகித்தாளாகத் தலைவிபாற் சென்று இவ்வாறு கூறுகின்றாள்.]

நீ உணர்ந் தனையே தோழி! வீஉகப்
புன்னை பூத்த இன்நிழல் உயர்கரைப்
பாடு இமிழ் பனிக்கடல் துழைஇப் பெடையொடு
உடங்கிரை தேரும் தடந்தாள் நாரை
ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன் 5
மேக்குஉயர் சினையின் மீமிசைக் குடம்பைத்
தாய்ப்பயிர் பிள்ளை வாய்ப்படச் சொரியும்
கானலம் படப்பை ஆனா வண்மகிழ்ப்
பெருநல் ஈகைநம் சிறுகுடிப் பொலியப்
புள்ளுயிர்க் கொட்பின் வள்ளுயிர் மணித்தார்க் 10
கடுமாப் பூண்ட நெடுந்தேர்
நெடுநீர்ச் சேர்ப்பன் பகல்இவண் வரவே?

தோழி! ஒலி முழக்கினையுடையதும் குளிர்ச்சியானதுமான கடலிடத்தே சென்று துழாவித், தன் பெடையோடுங் கூடியதாக ஒருங்கே இரை தேடி வருகின்ற நெடுங்கால்களையுடைய நாரையானது. மெல்வியதாய்ச் சிவந்த சிறிய கண்களைக் கொண்ட சிறுமீனைப் பற்றியதும், இனிதான நிழற்பரப்பைக் கொண்ட உயரமான கரையிடத்தேயுள்ள மலருதிரப் பூத்திருக்கும் புன்னை மரத்திடத்து, மேலோங்கி உயர்ந்துள்ள கிளையின் மேலுள்ள கூட்டிலேயிருந்தவாறு, பசியினாலே தாயை அழைத்தபடி கூவியிருக்கும் குஞ்சினது வாயுள் வீழுமாறு கொண்டு சொரிதலைச் செய்யும். அத்தன்மையதான கடற்கரைச் சோலையினையும், அழகிதான கொல்லையினையும். கெடாத வளமிக்க உணவினையும், பெரிதான நல்ல ஈகைப் பண்பினையும் உடையதான நம் சிறு குடியிருப்பும் அழகு பெற்றது. அங்ஙனம் அழகு பெறுமாறு, புள்ளினம் ஒலித்தாற்போலச் சுழன்று முழக்கும் வளவிய ஒலியையுடைய மணிமாலையினை அணிந்த, கடிதாகச் செல்லும் குதிரை பூட்டிய நெடுந்தேரிணை ஊர்ந்தானாக, நெடிதான கடற்கரைக்குரிய தலைவனான நம் சேர்ப்பனும், பசுற்போதிலேயே இவ்விடத்து விரைந்து வருகின்றனன். இதனை நீயும் உணர்ந்தனையோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/181&oldid=1684104" இலிருந்து மீள்விக்கப்பட்டது