உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

187


முடையவராக வேண்டி மார்பணங் குறுநரை அறியாதோன் என்க. 'அலராமற் குவிந்த கொத்தையுடைய புன்னைக்கண்ணே புலால் நாற்றத்தையுடைய நீர் தெறித்தரும்பிய சேர்ப்பன்' என்றதனால், புன்னையிடத்துத் தோன்றிய புலால் நாற்றத்தைப் பூவிரிந்து கெடுக்குமாறு போல, வரைந்து கொண்டு, களவின் வந்த குற்றம் வலிகெட ஒழுகுவன் என்பது உள்ளுறை" என இச்செய்யுளுக்கு நல்லதொரு விளக்கமும் அவர் தருவர்.

95. நெஞ்சம் பிணித்தவள்!

பாடியவர் : கோட்டம்பலவனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தலைமகன் பாங்கற்கு, 'இவ்விடத்து இத்தன்மைத்து' என உரைத்தது.

[[து–வி.) இயற்கைப் புணர்ச்சி பெற்றானாகிய ஒரு தலைவன், பின்னர்ப் பாங்கனின் உதவியினை நாடியவனாக அவனுக்குத் தன் காதல்பற்றி அறிவிப்பதாக அமைந்தது இச் செய்யுள்.]

கழைபாடு இரங்கப் பல்லியம் கறங்க
ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று
அதவத் தீங்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக்
கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்து எழுந்து, 5
குறக்குறு மாக்கள் தாளம் கொட்டும்அக்
குன்றகத் ததுவே, குழுமிளைச் சீறூர்
சீறூரோளே, நாறுமயிர்க் கொடிச்சி,
கொடிச்சி கையகத்ததுவே, பிறர்
விடுத்தற்கு ஆகாது பிணித்தஎன் நெஞ்சே. 10

மூங்கிற் குழலினது இனிய இசையானது ஒலிக்கவும், மற்றும் பலலகையான வாச்சியங்களின் ஒலிமுழக்கமும் முழங்கவுமாகக் கூத்தாடுகின்றாள் ஆடுமகள். அந்த ஆடு மகளானவள், முறுக்கமைந்த புரியையுடைய வலிய கயிற்றின் மேலாகவும் நடந்து செல்வாள். அந்தக் கயிற்றின் மேலாக அத்திப்பழத்தின் இனிய கனியைப்போன்ற செம்முகத்தையும், பஞ்சுத் தலையையுமுடைய மந்தியது வலிய குட்டியொன்று தூங்கியபடி ஆடிக்கொண்டிருக்கும். அதனைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/188&oldid=1685981" இலிருந்து மீள்விக்கப்பட்டது