உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

211


தின்பது யானையது இயல்பு இதனைப், 'பிடி பசிகளை இய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும்' (குறு-37 2-3) எனவரும் சான்றோர் கூற்றாலும் அறியலாம். வாகை நெற்றுப் போன்றே வெட்பாலை தெற்றும் ஒலிக்கும் என்பதனையும் இதனால் உணரலாம். பாலை நெற்றினது ஒலியானது அருவியின் இன்னொவி போலத் தொலைவிலுள்ளார்க்கு மயக்கந் தருவதுபோல், தன்னுடைய நெஞ்சத்துயரையும் தோழி சரிவர உணராளாய் மயங்கிக் கூறுபவளாயினள் என்பதுமாம்.

தன் நெஞ்சமே தனக்குத் துணையாக இராதபோது. தோழியோ தனக்குத் துணையாகித் தன் வருத்தத்தை மாற்றக்கூடியவுள் எனத் தோழியை நொந்துகொண்டதுமாம். 'நல்வினை செய்தார் நலமுறுவர்' என்னும் விதியினைக் காட்டுவாளாகித் தன் நெஞ்சினையும் தன்னையும் வேறுபடுத்திக்கூறி வருந்துகின்றாள் தலைவி.

உள்ளுறை : பிடி பாலையை உரித்து உண்டு கைவிட்டுப் போனதுபோலத் தலைவனும் தலைவியது நலத்தையுண்டு அவள் வாடி மெலிந்தழியுமாறு கைவிட்டுப் போயினன் என்பதாம். வளி தாக்க ஒலிசெய்யும் நெற்றத்தின் தன்மை போலக் காமநோயால் அலைக்கப்பட்டுப் புலம்பும் தன் புலம்பலும் பிறரால் இன்னொலியாகக் கருதப்படும் மயக்கத்தைத் தருவதாயிற்று என்பதுமாம். இதனைக் கற்புக்காலத்துப் பிரிவாகவும் கொள்வர்; கொள்ளல் சிறந்த பொருள்நலம் தருவதுமாகும்.

108. யான்தான் நோவேன்!

பாடியவர் : .........
திணை: குறிஞ்சி.
துறை : வரையாது நெடுங்காலம் தந்து ஒழுகவாற்றாளாய தோழி, தலைமகளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது.

[(து–வி) களவின்பத்தை மட்டுமே விரும்பியவனாகக் காதலன் நெடுங்காலம் வந்து போகத், தலைவியை மண வாழ்விலே ஈடுபடச் செய்து மனையறத்திலே ஒன்றுபடுத்தக் கருதிய தோழி, அதனை அவனுக்கு அறிவுறுத்தக் கருதிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

மலையயற் கலித்த மையார் ஏனல்
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணையக் கண்ட அம்குடிக் குறவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/212&oldid=1688293" இலிருந்து மீள்விக்கப்பட்டது