உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

நற்றிணை தெளிவுரை


பெருங்காடு இறந்தும் எய்தவந் தனவால்
'அருஞ்செயல் பொருட்பிணி முன்னி, யாமே 5
சேறும், மடந்தை!' என்றலின், தான்றன்
நெய்தல் உண்கண் பைதல் கூரப்
பின்னிருங் கூந்தலின் மறையினள், பெரிதழிந்து,
உதியன் மண்டிய ஒலிதலை ஞாட்பின்
இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும் 10
ஆம்பலம் குழவின் ஏங்கி.
கலங்கஞர் உறுவோள் புலம்புகொள் நோக்கே!

'மடந்தையே! செயற்கரிய செயலை என்பாற் செய்கின்ற பொருளார்வமாகிய பணியினை எண்ணினமாய், யாம் அதனை நாடிச் செல்வதற்கும் கருதுகின்றோம்' என்றேம். என்றதும், தன்னுடைய நெய்தல்மலர் மையுண்டாற்போலும் இருட்சிகொண்ட கண்கள் வருத்தத்தை அடைய, பின்னப்பட்டுத் தாழ்ந்திருக்கும் கரிய கூந்தலுக்குள்ளாகத் தன் முகத்தை அவள் மறைத்துக் கொண்டனள். பெரிதும் நெஞ்சழிந்த நிலையினளும் ஆயினள். உதியனானவன் சினந்து சென்ற அடர்ந்த பேரொலி கொண்ட போர்க்களத்தினது தலைப்பகுதியிடத்தே, இம்மென்னும் ஒலியோடே பெருங்களத்துக் குழலூதவோர் ஊதுகின்ற அழகான ஆம்பற்குழவினது இசையினைப் போல ஏங்குவாளும் ஆயினள். கலங்கித் துன்பத்தை அடைவோனாய அவளது தனிமை வருத்தத்தை மேற்கொண்டதான பார்வைகள்தாம் மறக்கற்பாலன அன்று!

மான், தன் தலையினை மேலெடுத்து வளைத்து உண்ணுதலினாலே, ஒரு பக்கமாக வளைந்து கிடக்கும் உயர்ந்த கிளைகளையும் புல்லிய அடியையுமுடைய இலந்தையினது. பொதிந்த புறத்தையுடைய பசிய காய்கள், கற்கள் பொருந்திய சிறுவழியிடத்தே, அவ்வழி நிரம்புமாறு உதிர்ந்துகிடக்கும் பெருங்காட்டினைக் கடந்து வந்தேம் வந்தும். அப் பார்வை எல்லாம் எம்பாலடையுமாறு வந்து சேர்ந்தனவே!

கருத்து : 'பிரிவினைக் கேட்டபோதே கலங்கிய அவளது நிலைதான், பிரிந்தபின் என்னாயிற்றோ?' என வருந்துவதாம்.

சொற்பொருள் : உழை – மான். அணந்து – தலையை மேலாக உயர்த்து நின்று; அண்ணாந்து. இறை வாங்கு –

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/223&oldid=1689922" இலிருந்து மீள்விக்கப்பட்டது