உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

நற்றிணை தெளிவுரை


சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப
வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப் 5
புகையுண்டு அமர்த்த கண்ணள், தகைபெறப்
பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர்
அந்துகில் தலையில் துடையினள், நப்புலந்து
அட்டி லோளே அம்மா அரிவை!
எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பு ஆன்று, 10
சிறுமுள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம்காண் கம்மே!

வளைந்த கொம்பினையுடைய எருமைகளின் இளநடையினையுடைய கன்றுகளைத் தூண்கள்தோறும் கட்டியிருக்கின்ற காணத்தகுந்த சிறப்பினையுடையது எமது நல்ல மனையாகும், இவ்விடத்தே, வளைந்த குண்டலங்களைக் காதுகளிலே இட்டிருப்பாளான, செழுமைகொண்ட செவ்விய பேதைமையினையும் உடையாளான எம் காதலியானவள், சிறிதான மோதிரம் செறிந்த தன் மெல்விரல்கள் சிவக்கும்படியாக வாழையினது நீர்மைகொண்ட இலையினை மிகவும் சிரமப்பட்டுக் கொய்து வகிர்ந்து கொணர்ந்து பரிகலம் இட்டனள். அட்டிலாக்கியபோது புகைபடிந்ததனாலே அமர்த்த கண்களை உடையாளான அவள், தகைமைபெறத் தன் பிறைபோன்ற நெற்றியிடத்தே துளிர்த்திருந்த சிறிய நுண்மைகொண்ட பலவான வியர்வுத் துளிகளைத், தன் அழகிய துகிலின் நுனியிலே துடைத்துக் கொண்டாளாக, நம்மீது புலவிகொண்டு, அட்டிற் சாலையிடத்தாளாகவும் ஆயினள். இது காலை விருந்தாய் வந்தாரும் எம்முடன் இல்லிடத்தே வருவாராக வந்தனராயின் அழகிய மாமை நிறத்திறத்தினையுடைய அரிவையாளான அவளின் கண்சிவப்பு மறைந்துவிடும். சிறு முட்களைப் போன்ற பற்கள் வெளிப்பட்டுத் தோன்ற இளமுறுவலைக் கொண்ட முகத்தினளும் ஆகிவிடுவாள். கை கொண்ட அம்முகத்தினை நாமும் காண்போமாக.

கருத்து : 'தலைவியது ஊடற்சினத்தை விருந்தினர் வந்ததால் இன்றேனும் மாறக் காண்போம்' என்பதாம்!

சொற்பொருள் : தடமருப்பு – வளைந்த கொம்பு: பெரிய கொம்பும் ஆம். மடநடை – இளநடை; தளர்ந்த நடை செய் – செய்ய: செவ்விதாம் பண்பு கொண்ட. சிறுதாழ் –

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/237&oldid=1690759" இலிருந்து மீள்விக்கப்பட்டது