330
நற்றிணை தெளிவுரை
கண்கள் எனினும் பொருந்துவதாம், 'மார்புறப் படுத்தல் மரீஇய கண்' என்ற இனிமைப் பாட்டை உய்த்துணர்ந்து அநுபவித்தல் வேண்டும். 'ஆர்வ நெஞ்சமொடு அளைஇ' எனத் தனது பெருங்காதலையும் கூறுகின்றனள். மலைப் பகுதிக்கு மேய்தலுக்குச் சென்றவான ஆன் கன்றுகள் வீடு திரும்புங்காலை, அவற்றுடன் தனிமையுற்ற யானைக்கன்றும் சேர்ந்து வரும் என்று கொள்க.
உள்ளுறை : 'வேட்கை மிகுந்த பிடியானையானது மலைகளை ஏறிக் கடந்து, நீருண்டுவர அம் மலைகட்கு அப்புறமாகப் போதலும், அதனுடன் செல்லமாட்டாத கன்று, ஆன்கன்றுகளுடன் ஊருட்புகுந்து, சேரிப்பெண்டிரது நெஞ்சத்தைத் துணுக்குற வைக்கும்' என்றனள். அவ்வாறே பொருள் வேட்கை மிகுந்து தலைவியைத் தனித்து விட்டுச் சுரநெறியினை மேற்கொண்டு சென்றானாகத், தலைவி செயலற்றாளாய்த் தோழியருடன் கூடித் தன் துயரை ஆற்றுதற்கு முயல, அவள் நிலை கண்ட முதுதாயர் பலரும் நெஞ்சந்துணுக்குற்றுக் கலங்குவர் என்க.
172. நகை நாணுதும்!
- பாடியவர் : .........
- திணை : நெய்தல்.
- துறை : (1) பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. (2) குறிபெயர்த்தீடும் ஆம்.
[(து–வி) (1) பகற்குறிக்கண் வந்த தலைமகனை, அக் குறியிடத்துத் தாம் வருதற்கு நாணுவேம் எனக் கூறுதலின் மூலம், தலைவியை வரைந்து கொள்ளுதற்கு முயலுமாறு தூண்டுவாளாகத் தோழி இவ்வாறு கூறுகின்றனள். (2) 'இவ்விடம் எமக்கு ஒத்ததன்று; வேறிடம் ஒன்று குறிக்க' எனச் சொல்வதன்மூலம் வரைவுகடாதலும் ஆகும்.]
விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
'நெய்பெய் தீம்பால் பெய்துஇனிது வளர்த்தது
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
5