உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

341


தலைவனும் தலைவியைவிட்டு நின்னுடனே இவ்விடத்திற்கு வருபவனாவான் என்பதாம். இதனால் தலைவனது காமத்தில் எளியனாக வண்டுபோல மவருக்குமலர் செல்லும் தன்மையையும் உணர்த்தினாள். தலைவனை அடைதலாலே தலைவி பெரிதும் மகிழ்ந்துவிடுதல் வேண்டா; அவன் பரத்தைமையிலே நாட்டமுடையவனாதலின் அவனோடு நெடுநாள் தங்கி இரான் என்பதுமாம்.

177. நீந்தும் நாள்!

பாடியவர் : .........
திணை : பாலை.
துறை : செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.

[(து–வி.) தலைமகன் வேந்துவினை மேற்கொண்டு செல்லற்குரிய ஏற்பாடுகளிலே ஈடுபட்டான்; அதனைக் குறிப்பால் அறிந்த தலைவி தன் தோழியிடத்தே அதனைக் கூறி இப்படிப் புலம்புகின்றாள்.]

பரந்துபடு கூர்எரி கானம் நைப்ப
மரந்தீ யுற்ற மகிழ்தலை அம்காட்டு
ஓதுக்கு அரும் வெஞ்சுரம் இறந்தனர் மற்றவர்
குறிப்பின் கண்டிலின் யானே நெறிப்பட
வேலும் இலங்கு இலை துடைப்பப் பலகையும் 5
நீலி சூட்டி மணிஅணி பவ்வே
பண்டினும் நனிபல அளிப்ப இனியே
வந்தன்று போலும் தோழி நொந்துநொந்து
எழுதுஎழில் உண்கண் பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே. 10

தோழி! நம் தலைவரின்கீழ்ப் பணியாற்றும் பிறரான படைமறவர் எல்லாரும். பரந்துபட்ட பெருந்தீயானது காட்டினை அழிக்க, மரங்கள் அனைத்தும் தீ வாய்ப்பட்டுகிடக்க, மகிழ்ச்சி நீங்கும் காட்டிடத்தே செல்வார், ஒதுங்கி நிற்றற்கும் நிழலற்ற வெம்மையுடைய சுரத்தின்கண்ணே சென்றுவிட்டார்கள். இவரிடம் தோன்றும் குறிப்புக்களாலே அதனை யாதும் உண்டுகொண்டேன். இவரும், ஒழுங்குபட வேலினையும் அதன் விளக்கங்கொண்ட இலைப்பகுதியினை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/342&oldid=1731819" இலிருந்து மீள்விக்கப்பட்டது