உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




138

||--

அப்பாத்துரையம் - 22

ஈடுபட்டான். அப்போது அவன் எவ்வளவு கவர்ச்சிமிக்க தோற்றத்துடன் பொலிந்தான் என்று அவள் வியந்து பாராட்டினாள். தோட்டத்தின் வாயிற் படியை அவன் அணுகிய சமயம் மடக்குச் சட்டங்களைத் திறந்த அதே பணிநங்கை வெளியே வந்து அவனருகே நடந்தாள். அவள் அணிந்திருந்த மெல்லிய பச்சைச் சாயல் வாய்ந்த பாவாடை இடத்துக்கும் காலத்துக்கும் மிகப் பொருந்தியதாயிருந்தது. அதன் தொங்கல் குஞ்சங்கள் அவள் நடையின் நய நெகிழ்வுகளை நன்கு எடுத்துக் காட்டின. கெஞ்சி அவள் பக்கம் திரும்பி அவள் அழகு வடிவை உற்று நோக்கினான். 'இங்கே மூலையில் இருக்கும் கம்பி வேலி மீது சிறிது உட்காருவோம்' என்று அவள் மெல்லக் கூறினாள்.

'எவ்வளவு நாணமுடையவளா யிருக்கிறாள் இவள்? தோள் மீது புரண்டு விழும் இவள் கூந்தல் எவ்வளவு மனதுக்கு உகந்ததாயிருக்கிறது!' என்று அவன் வியந்தான். வியப்பு ஒரு பாடலாக அவன் வாய்மொழியில் மிளிர்ந்தது.

கருத்தற்று மலர்நின்று மலர்தாவும் போக்குடைய வண்டல்லேன் யான், எனினும்

காலை ஒளி தேங்கிடும் இக்

கதிர்வட்ட மலர் கொய்யக்

கருதாது அமைகில, என்

கைவிரல்கள் இவ்விடத்தே!

இவ்வாறு பாடிக்கொண்டே அவன் அவள் கையை மெல்லப் பற்றினான்.

பண்பில் பயின்ற எளிமையுடன் அவளும் பாடலாகவே மறுமொழி பகர்ந்தாள்.

"மூடுபனியின் திரையகலு முன்பே

காலைமலரின் கன்னிமையைத் துய்க்கக்

‘கருதி நீ மெல்ல விரைதியோ, காவருகே!'

தன்னைக் குறித்தோ பொதுப்படையாகவோ இருவழியும் பொருள்படும்படி திறமையாக அவள் கெஞ்சியின் பாராட்டுக்கு நயம்பட எதிர் பாராட்டளித்தாள்.