உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

141

பொன்மறியின் கம்பிளியை நாடிவந்ததாக ஜேஸன் கூறியதும் அவன் திகைத்தான். “அன்பர்களே! நீங்கள் எத்தனையோ இடையூறுகளைக் கடந்து இறுதியில் அமைதியுடன் வந்து சேர்ந்ததாகக் கூறுகிறீர்கள். ஆனால், நீங்கள் இதுவரை கடந்தவை இடையூறுகளல்ல. இனித்தான் உண்மையான இடையூறுகள் தொடங்க இருக்கின்றன. அவற்றைச் சந்திக்கு முன் சென்று விடுங்கள்,” என்றான்.

ஜேஸன்

கேட்பதாயில்லை.

அயதிஸ் சொற்கள் கடுமையாயின. எச்சரிக்கும் முறையிலும் அச்சுறுத்தும் முறையிலும் அவன் அவர்கள் கடக்கவேண்டிய இன்னல்களை எடுத்துரைத்தான். "முதலில் பித்தளைக் குளம்புகளிட்டுத் தீ உமிழ்கின்ற இரண்டு காளைகளைக் கொண்டு நீங்கள் ஒரு வயலை உழவேண்டும். பின் வேதாளத்தின் பற்களை அதில் விதைக்க வேண்டும். விதைத்த இடத்திலேயே படைக்கலந் தாங்கிய கொடும் பூதங்கள் தோன்றிப் போருக்கு எழும். அவையனைத்தையும் அழிக்கவேண்டும். இத்தனையும் செய்தபின்தான் தங்கமயமான கம்பிளியைக் கைக்கொள்ள முடியும்," என்றான் அவன்.

பொன்மறியை நாடிப் புறப்பட்டபின் முதல் தடவையாக ஜேஸன் மனம் இடிவுற்றது. இடிவுற்றது. வெற்றி பற்றிய அவன் நம்பிக்கையார்வம் தகர்ந்தது. அன்றிரவு முழுவதும் அவன் பைத்தியம் பிடித்தவன்போல, அரண்மனையையடுத்த தன் மாளிகைப் புறவாரத்தில் முன்னும் பின்னும் நடந்து கொண்டி ருந்தான்.அவன்முன் அப்போது அழகுமிக்க ஒரு பெண்ணணங்கு நின்றாள். அத்தகைய அழகு உலகில் இருக்குமென்று அவன் அதுவரை கனவுகண்டதே கிடையாது.

அவளும் அதுவரை அவ்வளவு அழகும் வீரக்களையும் ஆணுருவில் இருக்குமென்று கனவுகண்டது கிடையாது.

அவள், மன்னன் அயதிஸின் புதல்வி மீடியா. மாயா வினியாகிய தன் தாயிடமிருந்து அவள் மந்திரங்கள் யாவும் கற்றுணர்ந்திருந்தாள். அதை அவள் யாருக்காகவாவது பயன் படுத்த வேண்டிவரும் என்று நினைத்ததில்லை. ஜேஸனிடம் அவள் கொண்ட பாசம் அங்ஙனம் அவற்றைப் பயன்படுத்த அவளைத் தூண்டிற்று.