96
மறைமலையம் -6
(துறவிகளும் போய்விட்டார்கள்.)
(அரசனுந் தன் நினைவு சாபத்தால் மறைவுண்டு சகுந்தலையைப் பற்றி ஆழ்ந்தெண்ணிக் கொண்டிருக்கின்றான்.)
(திரைக்குப் பின்னே)
புதுமை! புதுமை!
அரசன் : (உற்றுக்கேட்டு) அங்கே என்ன நடந்திருக்கலாம்? (புரோகிதர் வருகின்றார்.)
புரோகிதர்: (வியப்போடு) பெருமான்! மிகவும் வியக்கத் தக்கதான ஒரு நிகழ்ச்சி உண்டாயிற்று.
அரசன் : எப்படி என்ன?
புரோகிதர் : கண்ணுவ முனிவரின் மாணாக்கர்கள் திரும்பிச் செல்கையில் அப் பெண் தன் கைகளை உயர எறிந்து ஓலமிடப் புகுந்தாள்.
அரசன் : அப்புறம் என்னை?
புரோகிதர்
- உடனே
அப்ஸரஸ்
தீர்த்தத்திற்கு
அருகாமையில் பெண் வடிவுடைய ஓர் ஒளியுருத் தோன்றி அவளைத் தூக்கிக்கொண்டு சென்றது.
(எல்லாரும் இறும்பூதடைகின்றார்கள்.)
அரசன் : சுவாமி! அப் பொருளைத்தான் நாம் முன்னரே வெளிப்படையாய் விலக்கி விட்டோமே; இன்னும் அதனை வீணாய் எண்ணிப் பார்ப்பானேன்?
புரோகிதர் : (அரசனை நோக்கி) உமக்கு வெற்றி சிறக்க! (போய்விட்டார்.)
அரசன் : வேத்திரவதி! நான் மனக்கலக்க முற்றிருக் கின்றேன். படுக்கை யறைக்குப் போகும் வழியைக் காட்டு.
வாயில் காவலன் : பெருமானே! இவ்வழியே வாருங்கள். (வழிகாட்டிச் செல்கின்றாள்)