180
மறைமலையம் 6
(பக். 50) குழைமலிந்த - தழை நிறைந்த. மாதவி - வேனிற் கால மல்லிகைக் கொடி : குருக்கத்திக் கொடி யெனலும் ஆம்.
ஆராயற்பாலது - ஆராய்தற்குரியது.
(பாட்டு) கைமேற் றலைவைத்
செறிக்கின்றெனே.
இதன் பொருள் : கைமேல்தலை வைத்து இரவில் கிடக்க கைமேல் தலையை வைத்துக்கொண்டு இராப்பொழுதிற் படுத்துக் கிடக்கையில், கடைக்கண் நின்று பெய்நீர்-என் கண்ணின் கடைகளிலிருந்து சொரியும் நீரின் வெப்பமானது, அழற்ற - சுடுதலால், நிறம் திரிவான பெருமணிகள் மொய் பொன் கடகம் - தம் நிறம் மாறின பெரிய இரத்தினங்கள் நெருங்க அழுத்திய பொன்னாற் செய்த எனது தோள்வளை யானது, வில் நாண்தழும்பு உற்ற முனை நழுவி வில்லின் நாண்கயிறு பட்டு வடுவாகிய இடத்தினின்றுங் கழன்று, செய்யில் உரிஞ்ச - எனது முன் கையில் வீழ்ந்து உராய்தலால், பலகால் எடுத்துச் செறிக்கின்றென் - அதனைப் பலமுறையும் மேல் உயர்த்தி அஃதிருந்த இடத்திற் சேர்ப்பிக்கின்றேன் என்றவாறு. எ : அசை.
ப
த
6
-
முழங்கை மணிக்கட்டுக்கு மேலுள்ள கையின் பகுதியே தோள் எனப்படும்; அதன்கண் மகளிரேயன்றி ஆடவரும் பண்டை நாளிற் கடகம் அணிதல் வழக்கம்; விற்பிடிக்கும் கை இட து கையே யாதலால் வில்லின் நாண் உரைசித் துஷியந் தனுக்குத் தழும்பு உண்டான இடம் ம் இடது தோளின்கண் உளதென்பது பெற்றாம். அவ்விடத்தில் அணிந்திருந்த கட கடகம் அவனது உடம்பின் மெலிவால் அவ் விடத்தைவிட்டு நழுவி முன்கையில் வந்து விழுதலும் பெறப்படும். அவன் தன் கையைத் தொங்கவிட்டு உலாவு கையில் மேலுள்ள கடகங் கீழ் நழுவிமென்பது உணரற் பாற்று. அவனது கையிலுள்ள அக் கடகத்திற் குயிற்றிய மணிகள் ப்போது நிறம் மாறி யிருத்தற்குக் காரணம், அவன் இரவிற்றுயில் கொள்ளானாய்ப் படுக்கையிற் கிடந்து சகுந்தலையை நினைந்து ஆற்றனாந் தோறும் அவன் கண்களினின்று பொழியும் நீரின் வெம்மை படுதலேயாம்; என்று அவன் ரவின்கட் பட்ட
ப