உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

மதமும் மூடநம்பிக்கையும்


முதல் நுழைகிறவன் ஒற்றைக் கண்ணணாக இருந்தாலும் ஓடிந்த கையனாக இருந்தாலும், வணங்கிய முதுகினனாக இருந்தாலும் வளைந்த காலனாக இருந்தாலும் அல்லது ‘அப்பலோ' போல முழு அழகுவாய்ந்தவனாக இருந்தாலும் அவன் கவலைப்படுவதில்லை. குடும்பத்திற்கு எவ்வித குறைபாடும் தோன்றாத நிலையில்கூட, வேற்றுப் பூனைக்கு இடமளிக்க மறப்பதால், ஒன்றும் நேராது என்பதை அவன் அறிவான். ஒரு முக்கியமான மனிதன் இறந்து படப்போகிறான் என்பதற்காக, முழு நிலவு நாளில் ஆந்தையொன்று அலறிக்காட்டாது என்பதை அவன் அறிவான் மக்கட் கூட்டம் எல்லாம் இறந்து பட்டாலும்கூட, வால்நட்சத்திரங்களும், கிரகணங்களும் வரத்தான் செய்யும் என்பதை அவன் வானவில்லைக் கண்டோ அல்லது வடக்கே இருளைக் கிழித்துக்கொண்டு வெளிச்சம் வெளிப்படுவதைக்கண்டோ அவன் அஞ்சுவனங்களும் வரத்தான் செய்யும் தில்லை. மனிதசமுதாயத்தைச் சிறிதளவும் பொருட்படுத்தாமலேயே இவையெல்லாம் நிகழ்கின்றன என்பதை அவன் அறிவான். வெள்ளங்கள் அழிவையுண்டாக்கும். புயற்காற்றுகள் பாழ்படுத்தும், நில அதிர்ச்சிகள் விழுங்கும் என்பதையெல்லாம் அவன் உறுதியாக உணர்கிறான். நட்சத்திரங்கள் ஒளிவீசும், உலகைச்சுற்றி இரவும் பகலும் ஒன்றையொன்று தொடர்ந்து கொண்டேயிருக்கும், பூக்கள் தம் நறுமணத்தைக் காற்றில் கமழச் செய்யும். காலை மாலை வேலைகளில், மேகங்கள் நிறைந்திருக்கும் பொழுது, ஒளி ஏழுநிற வானவில்லை, மக்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமலே வானத்தில் தீட்டும் என்பதை யெல்லாம் அவன் உறுதியாக அறிகிறான்.

நல்ல சிந்தனையும், தெளிவான உணர்வும் உடைய மனிதன் சரத்தான் வாழ்கிறான் என்பதை நம்பமாட்டான். அவன் உறுதியாக உணர்கிறான், பேய்களும், பூதங்களும், பிசாசுகளும், கெட்ட ஆவிகளும், அறியாமையும் அச்சமும் கொண்டவர்களின் கற்பனையுள்ளத்தில் தான் வாழ்கிறார்கள் என்பதை மிகக் கீழ்த்தரமான கட்டுக்கதைகளெல்லாம்