உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

தமிழ் இலக்கிய வரலாறு

2. "உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. 3. "உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்(று) உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

4. "மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்.

5.

'இருட்டறை மூலையில் இருந்த குமரி குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி மருட்டி அவனை மணம்புரிந் தாளே.

99

99

(704)

(705)

(2251)

(1488)

சிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டனுட் பத்தாவதான திரு மந்திரம் ஒழுகிசையுள்ள இழுமென் மொழியால் விழுயியது நுவலும் கலிமண்டிலத்தால் (விருத்தத்தால்) இயன்றது; பிற்காலத் தமிழ்ச் சிவக் கொண்முடிபு நூலனைத்திற்கும் உலவா மூலக் களஞ்சியமாகவுள்ளது; ஆறு தந்திரம் என்னும் பகுப்பு களைக்

கொண்டது.

திருமூலர் சித்தர் வகுப்பைப் சேர்ந்தவர்; வெள்ளிமலை யினின்று திருவாவடுதுறை வந்து சேர்ந்தவராகச் சொல்லப் படுவர்.

மூவர் தேவாரம்

கி. பி. 6ஆம் 7ஆம் 8ஆம் நூற்றாண்டிடைப்பட்ட, அப்பர் என்னும் ருநாவுக்கரசு நாயனார், ஆளுடைய பிள்ளையார் என்னும் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவரும், தமக்கியன்றவாறு சிவநகர்தொறும் சென்று சிவபெரு மான் வழுத்தாகப் பாடிய இசைப்பாட்டுப் பதிகங்களின் திரட்டு, தேவாரம் எனப்படும். மூவரும் பாடிய பதிகங்கள் மொத்தம் ஓரிலக்கத்து இருபதினாயிரம் என்பது மரபுவழிச் செய்தி.

மூவரும் உலகைவிட்டு நீங்கியபின், தில்லைச்சிற்றம்பலப் பூசாரியர் தேவாரப் பதிக ஏடுகளை யெல்லாம் தொகுத்து ஓர்