உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மொழிப் போராட்டம்

கொள்ளலாம். ஆனால் "இந்திதான் இந்தியாவின் தேசியமொழி" என்று வலியுறுத்தும்பொழுதுதான் மாறுபாடு எழுகிறது.

.

இரண்டு சொற்றொடர்களுக்கு முள்ள பொருள் களை நுணுகி ஆராய்ந்தால் வேற்றுமை இருப்பது விளங்கும். ஒருவன், முன்பின் தான் அறியாத மற்றொருவனை அழைத்து, மூன்றாவது ஆள் ஒரு வனைச் சுட்டிக்காட்டி "அவன் மனிதன் " என்று சொல்லுவானேயானால், வந்தவன் "இதற்குத்தானா என்னைக்கூப்பிட்டாய்" என்று சற்று சலிப்போடு கூறி அலட்சியமாக அப்புறம் செல்வான். மீண்டும் அவனை அழைத்து "அவன்தான் மனிதன்" என்று மறுபடியும் சொல்லிக் காட்டுவானேயானால் அழைத்தவனைப் பற்றி அருகே வருபவன் சந்தே கப்படுவான். அவன் சந்தேகம் முதல் மனிதனைப் பைத்தியக்காரனாக் காட்டினால் கேலிச்சிரிப்பு சிரிப் பான்; போவார் வருவாரை அழைத்து அவர்க ளோடு சேர்ந்துகொண்டு எக்கொலி கொட்டி நகைப்பான். இரண்டாவது மனிதனுடைய சந் தேகம் முதல் மனிதனைப் போக்கிரியாகக் காட்டி னால், தன் உடலில் வலிவு இருக்கும் வரையில் அவனை நையப் புடைப்பான். “ மூன்றாவது மனி தனைக் காண்பித்து அவன்தான் மனிதன் எனக் கூறுகிறாயே! அதுவும் என்னைக் கூப்பிட்டு ஏன் சொல்லவேண்டும்? என்னைப் பார்த்தால் மனித னாக உனக்குத் தோன்றவில்லையா ? நான் என்ன ஆடா, மாடா? ஏண்டா மடையா ? உனக்கென்ன மதிகேடா ?" என வசைச்சொற்களைக் கூறத்