-12-
டையவர்ளே என்று கூறுவார்களேயானால். அந்த நிலையில் அந்தப் பெயர் மாற்றத்திற்கு நாங்களெல்லாம் அவசியம் இசைந்து சொல்கிறோம் என்பதை இப்பொழுதே உறுதிகூறுகிறேன். 'திராவிடம்' என்ற சொல் இன்றைய நிலையில் உணர்ச்சியின், ஊக்கத்தின், தன் மதிப்பின், தனி நாகரிகத்தின் இருப்பிடமாக இருக்கிற காரணத்தாலும், அது தமிழ்ச்சொல்லே என்றுகொள்ள இடமிருக்கிற காரணத்தாலும் அதை நாம் வழங்குகிறோம். அதில் வெட்கப்படவோ, துக்கப்படவோ அவசியம் எதுவுமில்லை.
நாம் நம்முடைய நாட்டை அழகிய நாடு என்றே அழைக்கிறோம். மாநிலத்தில் அழகிய நாடாகத்தான் நமது திராவிடம் விளங்குகிறது. நமது நாட்டின் மூன்று புரத்திலும் அலைகடல்கள் முத்தமிட்டுத் தழுவி நிற்கின்றன: இரண்டு பக்கமும் கிழக்குத் தொடர்ச்சி மலையும். மேற்குத்தொடர்ச்சி மலையும்.வடக்கே விந்தியமும் இயற்கை அரண்களாக விளங்குகின்னற: மலைகளிலே நீரருவிகள்; நீரருவிகள் கானாறுகளோடு சென்று கலக்கின்றன,கானாறுகளின் இருமடங்கும் மலைச்சாரல்கள், அவைகளிலே யானைகள்; வானைவளைத்திடும் காடுகள் அவைகளில் உலகோர் புகழும் சந்தனமும், அகிலும்,எங்குபார்த்தாலும் சாலைகளும், சோலைகளும் ; அவைகளிலே மான்கள் துள்ளுகின்றன குயில் பாடுகின்றன; வற்றாத ஆறுகள் வளைந்துவளைந்து ஓடுகின்றன; அவற்றின் அருகெல்லாம் விளைவைப்பெருக்கும் வயல்கள்; கதிர்கள் விளையும் கழனிகள்; கடலிலே முத்து நிலத்திலே தங்கம், வெள்ளி இரும்பு போன்ற உலோகங்கள்; இவற்றை யெல்லாவற்றையும்விட பண்பட்ட நாகரிகத்தைத் தாங்கி நிற்கும் தமிழ் அதனை வழங்கும், மனவளம் படைத்த மக்கள்; இவ்வளவு அழகான பொருள்கள் காணப்படும் நாட்டை நமது நாட்டை ஏன் அழகிய நாடு என்று அழைக்கக்கூடாது?