உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்

செத்தவர்‌ வீடுகள்தான்‌. சூரியன்‌ மறைந்தான்‌; இருள்‌ சூழ்ந்தது. இருளைப்‌ போக்க வீடுகளிலும், தெருக்‌களிலும்‌ விளக்கேற்றினார்கள்‌.

கெளதமையின்‌ மனத்தில்‌ இருந்த மன மருட்சி—இறந்தவர்‌ பிழைக்க மருந்து உண்டு என்னும்‌ .அறியாமை—நீங்கி விட்டது. பிறந்தவர்‌ எல்லோரும்‌ இறக்கிறார்கள்‌. அகவை முதிர்ந்தவர்‌ என்பது மட்டும்‌ அன்று. நடுத்தர அகவையுள்ளவர்‌, கட்டிளைஞர்‌, சிறுவர்‌, குழந்தைகள்‌ எல்லோரும்‌ . இறக்கிறார்கள்‌- இறந்தவர்‌ மறுபடியும்‌ பிழைப்பது இல்லை என்கிற உண்மை அவள்‌ மனத்தில்‌ தோன்றிற்று. அவள்‌ நேரே சுடுகாட்டிற்குச்‌ சென்றாள்‌. தன்‌ தோள் மேலிருக்கும்‌ குழந்தையின்‌ உடலை அடக்கம்‌ செய்தாள்‌. பிறகு நேரே பெருமான்‌ புத்தரிடம்‌ வந்து அவர்‌ காலில்‌ விழுந்து வணங்கி, எழுந்து நின்றாள்‌.

“குழந்தாய்‌! கடுகு எங்கே?”

“கொண்டு வரவில்லை. கிடைக்கவில்லை.”

“ஏன்‌?”

“பெருமானே, நான்‌ மட்டுந்தான்‌ என்‌ குழந்தையைப்‌ பறி கொடுத்தேன்‌ என்று தவறாக எண்ணினேன்‌. என்‌ குழந்தை மேல்‌ இருந்த அன்பினாலே, இறந்த குழந்தையைப்‌ பிழைக்க வைக்க, மருந்து இருக்கும்‌ என்றும்‌ தவறாக எண்ணினேன்‌. தாங்கள்‌ என்னுடைய மன நோய்க்கு, உண்மையான மருந்து கொடுத்துப்‌ போக்கி விட்டீர்கள்‌. உலகத்திலே சாகாதவர்‌ ஒருவரும்‌ இலர்‌. (கணக்கெடுத்தால்‌, செத்தவர்‌ தொகைதான்‌ மிகும், சாகாதவர்‌ தொகை குறைவாக இருக்கும்‌.)