உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு பிடி கடுகு

11

இறந்திருக்கிறார்களா?” என்று வினவினாள்‌. இதைக்‌ கேட்டவுடன்‌, ௮வ்வீட்டுக்காரியின்‌ கண்களில்‌ நீர்‌ தாரை தாரையாக வார்ந்தது. விம்மி, விம்மி அழுதாள்‌. “ஐயோ! மூன்றாம்‌ நாள்தானே என்‌ மகள்‌ இறந்து போனாள்‌; நல்ல வெண்கலச்‌ சிலை போல இருந்தாளே” என்று அழுதாள்‌. “அப்படியானால்‌ கடுகு வேண்டாம்‌” என்று கூறி விட்டு, அடுத்த வீட்டிற்குச்‌ சென்றாள்‌.

இப்படியே, அந்தத்‌ தெரு முழுதும்‌, வீடு வீடாக நுழைந்து கேட்டாள்‌. சில வீடுகளில்,‌ குழந்தைகள்‌ இறந்திருந்தன. சில வீடுகளில்‌, பெரியவர்கள்‌ இறந்திருந்தார்கள்‌. சில வீடுகளில்‌, கட்டிளமை வயதுடையவர்கள்‌ இறந்திருந்தார்கள்‌. சில வீடுகளில்‌ கருக்கொண்ட மகளிர்‌ இறந்திருந்தார்கள்‌. ஆனால்‌, சாகாதவர்‌ வீடு ஒன்றுமில்லை. கெளதமி அடுத்த தெருவில்‌ நுழைந்தாள். ஒரு வீடு விடாமல்‌ நுழைந்து, கடுகு கேட்டாள்‌. சாகாதவர்‌ வீடு ஒன்றேனும்‌ இல்லை. பல தெருக்கள்‌ சென்று, வீடு, வீடாகக்‌ கேட்டாள்‌. ஒரு வீடு கூட விடாமல்,‌ சென்று கேட்டுப்‌ பார்த்தாள்‌. வேண்டிய கடுகு கிடைத்தது; ஆனால்‌, சாகாதவர்‌ வீடுதான்‌ கிடைக்கவில்லை.

அவளுக்கு அப்போதுதான்‌ உண்மை புலப்பட்டது; சாகாத வீடு கிடைக்காது. ஆகவே தன்‌ குழந்தை பிழைக்க, மருந்துக்குக்‌ கடுகு கிடைக்காது என்பதை உணர்ந்தாள்‌. ஆனால்‌, ஏதேனும்‌ ஒரு வீடாவது இருக்காதா என்ற ஆசை அவள்‌ மனத்தில்‌ இருந்தது. ஆகவே, அவள்‌ அந்த சிராவத்தி நகரம்‌ முழுதும்‌, ஒரு வீடு விடாமல்,‌ நுழைந்து கேட்டுப்‌ பார்த்தாள்‌. சாகாதவர்‌ வீடு கிடைக்கவே இல்லை. எல்லா வீடுகளும்