10
இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்
“அப்படியே, இதோ கொண்டு வருகிறேன்.”
“குழந்தையைத் தூக்கிக் கொண்டு போ—கடுகுடன் குழந்தையைக் கொண்டு வா.”
கெளதமி இறந்த குழந்தையைத் தூக்கித் தோளில் சுமந்து கொண்டு, விரைவாக நகரத்திற்குள் சென்றாள். நகரையடைந்தவுடன், முதல் வீட்டில் சென்று, “ஒரு பிடி கடுகு வேண்டும்” என்று கேட்டாள். வீட்டுக்காரி உடனே சென்று, கடுகு கொண்டு வந்து கொடுத்தாள். அப்போது கெளதமி, “அம்மா! உங்கள் வீட்டில் இதற்கு முன், யாரேனும் இறந்திருக்கிறார்களா?” என்று கேட்டாள்.
“ஏனம்மா கேட்கிறாய்? என் மாமனார் இறந்தார்; என் மாமியார் இறந்தார். இவர்களுக்கு முன்பு, இவர்கள் தாய், தந்தையர்கள் இறந்தார்கள்” என்று ௮வ்வீட்டுக்காரி கூறினாள்.
“அப்படியானால் கடுகு வேண்டாம்,” என்று சொல்லித் திருப்பிக் கொடுத்து விட்டு, அந்த வீட்டை விட்டு, அடுத்த வீட்டிற்குச் சென்றாள். அந்த வீட்டுக்காரியும் கடுகு கொடுத்த போது “உங்கள் வீட்டில் யாரேனும் செத்திருக்கிறார்களா?” என்று கேட்டாள் கெளதமை.
“போன வாரம் எங்கள் வீட்டு வேலைக்காரன் செத்துப் போனான்.”
“அப்படியானால், கடுகு வேண்டாம்; செத்தவர் வீட்டுக் கடுகு மருந்துக்கு உதவாது” என்று கூறி விட்டு, அடுத்த வீட்டிற்குள் நுழைந்தாள். :அவ்வீட்டுக்காரியும் கடுகு கொடுத்த போது, “உங்கள் வீட்டில் யாரேனும்