உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீட்டு நெருப்பை அயலாருக்குக்‌ கொடுக்காதே

15

கொவ்வைக்கனி (கோவைப் பழம்‌) போலச்‌ சிவந்து, மென்மையாக இருத்தல்‌. எலும்பழகு என்பது முத்துப்‌ போன்ற வெண்மையான பற்கள்‌ ஒழுங்காகவும்‌, அழகாகவும்‌, வரிசையாகவும்‌ அமைந்திருத்தல்‌. தோல்‌ அழகு என்பது உடம்பின்‌ மேனி அழகாகவும்,‌ செவ்‌வல்லி மலரைப்‌ போன்று மென்மையாகவும்‌ இருத்தல். இளமை அழகு என்பது பத்துப்‌ பிள்ளைகளைப்‌ பெற்ற போதிலும்,‌ ஒரே குழந்தை பெற்றவள் போல, உடம்பு தளராமல்‌ இளமையோடு இருத்தல்‌.

இவ்விதமாக, ஐந்து பண்புகளும்‌ ஒன்றாக அமையப்‌ பெற்ற பெண்ணைத்‌ தவிர, வேறு ஒருத்தியைத்‌ தான்‌ மணம் செய்ய முடியாதென்று அவன்‌ திட்டமாகக்‌ கூறினான்‌. ஆகவே, இப்படிப்பட்ட தன்மை வாய்ந்த பெண்‌ எங்கேனும்‌ இருக்கிறாளா என்று செல்வர் தேடலானார்‌. சிராவத்தி நகரம்‌ முழுதும்‌ தேடிப் பார்த்தார்‌. மணமகள்‌ கிடைக்கவில்லை. ஆகவே, அந்தணர்‌ சிலரை அழைத்து, இப்படிப்பட்ட சிறப்புகளை‌யுடைய மணமகள்‌, நல்ல குலத்தில்‌ பிறந்தவள்,‌ எந்த நாட்டிலாயினும்‌ இருக்கிறாளா என்று தேடிப் பார்க்கும்‌படி அனுப்பினார்‌. செலவுக்குப்‌ போதிய பொருளைப்‌ பெற்றுக்‌ கொண்டு, அந்தணர்கள்‌ பெண் தேடப்‌ புறப்‌பட்டார்கள்‌. நாடுகள் தோறும்‌, நகரங்கள் தோறும்‌ தேடிய பிறகு, சகேத நகரத்தையடைந்தார்கள்‌.

சகேத நகரத்திலே தனஞ்சயன்‌ என்னும்‌ செல்வர்‌ ஒருவர்‌ இருந்தார்‌. அவருக்கு அளவற்ற செல்வம்‌ இருந்தது. அவருக்கு ஒரே மகள்‌ இருந்தாள்‌. விசாகை என்னும்‌ பெயருடைய அவர்‌ மகள்,‌ மிகுந்த அழகுள்ளவள்‌. அதனோடு புண்ணியவர்த்தன குமாரன்‌