உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பவழ டோர், வங்கத்திலே இல்லை! அவர்மொழி, வங்க மக்கள் எவரின் விழியிலும் களிப்புத் துளி எழச் செய்ததேயன்றி, காய்ச்சலும் குளறலும், எழச் செய்யவில்லை. வங்கம் தாகூரை, உச்சிமோந்து முத்தமிட்டு, வாரி அணைத்து வாஞ்சனையுடன் கொஞ்சிற்று. இங்கோ? எவ்வளவு எதிர்ப்பு, எத்துணை வஞ்சனை, எவ்விதமான சதிகள்! பழி எத்துணை, பதைப்பு எவ்வளவு! சிங்கமென முழக்கமிட்ட சண் முகத்தைச் சீறிக் கடிக்கச்சென்ற செந்நாய்க் கூட்டமும், பாய்ந்து பிடுங்கச் சென்ற ஓநாய்களும்,நகைமுகங்காட்டி பகைச் செயல்புரிந்த நரிக்கூட்டமும், கொஞ்சமா? வங்கம், தாகூரை உயர்த்திடக் கண்டோம் தமிழகத்திலோ, சர் சண்முகத்தைச், சாணக்கியர்களும் குடிலர்களும் சாய்த்திட ஜல்லடம் கட்டியதையும், சரங்கள் பல தொடுத்ததையும் கண்டோம். வங்கத்தின் அணைப்பிலே, கவி தாகூர் வளர்ந் தார்! தமிழகத்திலே தருக்கரின் எதிர்ப்பிலே, தழைத்தது கொங்குநாட்டு வேங்கை! தாகூர், மாசு மருவற்ற வானத் திலே உலவிய முழுமதி; சர் சண்முகம், முகிலைக் கிழித் தெறிந்த முழுமதி! இத்தமிழரைக், கவியுடன் ஒப்பிட நான் ஒப்பேன்! கண்டனங்கள் எழுதி அலுத்த கரங்களும், கேலிப் படங்கள் வரைந்து அலுத்த பேனாமுனைகளும், சபித்துச் சலித்துப்போன திருவாய்களும், கனல்கக்கிக் கருகிப்போன விழிகளும், சுருக்குக்கயிறு வீசிச்சோர்ந்துபோன வலைவீசி களும், படுகுழிவெட்டி ஆயாசமடைந்த அரசியல் வெட்டி யான்களும் இன்று, சர் சண்முகம் அறிஞர் உலகிலே அரசு ஓச்சக்கண்டு, அயர்கின்றனர். ஒருகாலத்திலோ! ஏ,அப்பா! எவ்வளவு கேலி கிண்டல், என்னென்ன வசவுகள்! இவ்வ ளவுக்குமிடையே பூத்தமலர், அதனை, வளமிகுந்த வங்கத் திலே வாஞ்சனை எனும்நீர் பெய்து வளர்த்த தாகூரெனும் தமிழர்; பண்டைத்தமிழரை, தமிழ்வீரரை,நினைவூட்டும் தமிழர். வேறு உவமைகள் ஏன்? அவன் அன்று ஆற்றிய அறிவுரை, அகநானூற்று கவியை. எனக்கு நினைப்பூட்டுவானேன், என்று மீண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/47&oldid=1637233" இலிருந்து மீள்விக்கப்பட்டது