உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு வரையறுத்தி வற்புறுத்துகிறது. கீதாசிரியன் இதனை போதிக்கிறான்,உயர்ந்த ஞானம் என்று. இதற்குப் பெயர் தர்மம் ! இதனைச் செய்-அதனைச் செய்யாதே என்று ஒவ்வொரு குலத்துக்கும், கடமைகள் இன்னின்ன என, தேவ கட்டளை இருக்கிறது. உரிமை ஒரு குலத்துக்கும் கிடையாது, பார்ப்பனர் நீங்கலாக. கடமையைச் செய்யத் தவறினால் கடுந்தண்டனை யுண்டு. மூக்கறுத்தல் நாக்கறுத்தல் - காதைக்குடைந் தெடுத்தல்-- கண்ணைக்குத்திக் குருடாக்கல்--புட்டத் தைச் சிதைத்தல்-கால் கைகளைத் துண்டித்தல்- தண் டனையின் பட்டியலில் காணப்படும் சில, இவை! முதல் குலத்துக்கு இது விதி விலக்கு. வேதனின் முகத்திலே பிறந்ததால், அவர்களை, இந்தக் கொடுமை அண்டுவதில்லைஅண்டவும் துணிவது இ இல்லை. மனுவின், காருண்ணியம் நிறைந்த விசித்திர திருஷ்டி இத்தண்டனைகள்- இல்லை -சட்ட திட் கள் - நல்ல தீர்ப்புகள் ! ஓரவஞ்சனை - பாரபட்சம் - அக்கிரமம் - கயமை என்றெல்லாம் கூறுவர், இதனை, நீதியின் இலட் சணம் அறிந்தோர், நோமையின் தன்மை தெரிந்தோர், மனிதப் பிறவியின் பெருமை உணர்ந்தோர். மனுவிஷ யத்தில் இவ்வளவும் வெறும் பழிச்சொல்லாகி விடுகிறது. அதனைத் தீண்டுவதும் இல்லை இந்த அறுவெறுக்கத்

தகுந்த குணவிசேஷங்கள் !


32