உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை. புல்வாயின் எலும்புகள், குகை வாயிலே குவிந்து கிடக்கக்கண்ட, புலிக்குட்டிகளிடம், தாயைப் பழித்தது கூறும் தன்மை இருக்க முடியுமா? தாயிடத்திலே தனி மதிப்பும், தாயின் திறத்திலே தளராத நம்பிக்கையும் புலிக்குட்டிகளுக்கு இருப்பது இயற்கைதானே? புலியின் பசிக்கு இரையாகியதால், தாயைப் பறி கொடுத்து, துன்பத்தில் சிக்கித் துடிதுடிக்கும் புள்ளி- மான் குட்டிகளுக்குத் தங்களை இக்கெதிக்களாக்கிய புலியிடம், அன்பா பிறக்கும்? ஆசையா தோன்றும்? அச்சமும் அசூயையும் தானே புலிக்குட்டிகளின் உள்ளத் தில் நிரம்பி இருக்கும்? பார்ப்பனர். ர் படிக்கலாம், பாடலாம், ஆடலாம், ஆண் பெண் வேற்றுமையின்றிக் கூடலாம், குவாம், பாடு படாமல் பிறர் உழைப்பாலே வாழலாம். வளமாக வாழ்க்கை நடத்தலாம். சூத்திரருக்கு இந்த உரிமை கிடையாது. இதுபற்றி எண்ணவும் கூடாது.எண்ணு வது மகாபாதகம்- இம்மையிலும் கடுந்தண்டனை மறு மையிலும் நரகவேதனை உண்டு. சம்பூகன் ஒரு சூத்திரன். பார்ப்பனருக்கு மாடு போல் உழைப்பதை மறந்தான். காட்டில் சென்று தவம் செய்து, பிறவிப் பெருங்கடல் நீந்தும் பெரும் பணியில் ஈடுபட்டான். சம்பூகன் பிறவாப் பெரியோனை நினைத்துக் கடும்புலிவாழும் காட்டில் கணமூடி உட்கார்ந் தான், அயோத்தி, நகர அக்ரகாரத்தில் பார்ப்புனக் குழந்தை ஒன்று முடிவாகக் கண்ணை மூடிவிட்டது.

38


33