உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு குழந்தையைப் பெற்றோன், தசரதராமனின் அனுமதி யின்றி அந்தப்புறம் சென்று, அடுக்குமா இராமா? உன் னுடைய ஆட்சியிலே இத்தகைய உற்பாதம் ஏற்பட லாமா? தர்மம் தொலைந்ததே! அதர்மம் கோலோச்சு கிறதே! சனாதனம் சாய்ந்ததே! சண்டாளத்துவம் உச் சம் பெறுகிறதே! சம்பூகன் தவம் செய்கிறான்! அவன் சூத்திரன்! அவன் கடமை தவம் செய்தல் அல்ல! ஆண்ட வனை அடைய அவன் முயற்சிப்பது அடாது! சுதர் மத்தைச் சுக்கு நூறாக்குகிறான்! சனாதனத்தைச் சீரழிக் கிறான்! பிராமணோத்தமர்களுக்குப் பணிவிடை செய்வ தன்றோ சம்பூகன் கடமை! சூத்திரனான சம்பூகன் குல தர்மத்தைக் கைவிட்டதால், ஜாதி ஆசாரத்தைத் துறந்த தால், அடிமை நிலையை உதறித் தள்ளியதால், தர்மம் கெட்டது... தர்மம் குலையவே, என் குழந்தை இறந்தது! சூத்திரனின் துடுக்கடக்குங்கள்! தவக்கோலம் கொண்ட தருதலையின் தலையை வெட்டி வீழ்த்துங்கள் / குல. தர்மத்தை மீறுவோருக்கு அது ஒரு படிப்பினையாக இருக்கட்டும் ! முன்பின் யோசிக்காதே! தவசியைக் கொல்லலாமா என்று தயக்கம்காட்டாதே தர்மசொரூபிநீ! அரசன் நீ[ அரசனின் கடமை அதர்மத்தை தர்மத்தை நிலைநாட்டுவது! தர்மம் இது என தத்து கூறுகிறது! அதனை துச்சமாக மதித்து நடந்து விட்டான் சம்பூகன்! போ! போ! தர்மத்தைக் காப்பாற்ற, தவம் செய்யும் சூத்திர சம்பூகனின் தலையை தயை தாட் சண்யம் பார்க்காமல் வெட்டி வீழ்த்து? தர்மாத்மா என்ற புகழுக்குரியவனாக, அப்பொழுதுதான், இராமா

34


34