உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு னது - என்று வாதிட்டு வெற்றிபெறுவது, வருணாஸ்ரம வக்கரபுத்தியின் வஞ்சக விளைவே அன்றி, புதிய அரசியல் சட்டம் புகுத்த நினைக்கும் மக்களாட்சிக் கோட்பாடா காது. புதிய இந்திய அரசியல் சட்டம் காண விரும்பும் இந்தியப் பிரஜை- குடிமகன்- இன்னமும் நாட்டில் தோன்றவில்லை. தன்னை ஒரு இந்தியன் என்று, இங்குள்ள ஒவ்வொருவரும் நினைத்துக் கொள்ளும் மனவளம் அல் லாடியார் போன்றாருக்கும் தோன் றவில்லை என்பது வெள் ளிடைமலை. அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா, முதலி யார், ரெட்டியார், பிள்ளை, நாயுடு, நாய்க்கர் என்ற ஜாதீ ஃயக் கண்களோடுதான், எந்த விஷயத்தையும் நோக்கு கிறார்கள். வீட்டிலும் நாட்டிலும் இதே கோக்குத்தான். நீதி மன்றத்திலும் சட்ட புத்தகத்திலும் தான் 'இந்தி யன்' என்ற ஏற்பாடும், 'தனி மனிதன்' என்ற தத்துவமும் ஒவ்வொருவர் மீதும் வலுக் கட்டாயமாகத் திணிக்கப் பட்டு இருக்கிறது. எனவே, அல்லாடியார் உள்பட அனை வரும், ஜாதீய உணர்ச்சியை ஒழித்து, இந்தியா' என்ற நோக்கும்,அதற்கான போக்கும் கொள்ளுகிற வரையில். புதிய அரசியல் கோட்பாட்டின்படி, பிரஜா உரிமை பாது காப்புக் கேட்பது, மனித தர்மத்துக்கு அப்பாற்பட்ட தாகும். 'இந்தியன்' அல்ல அல்லாடியார். அதற்கு இன் னும் தன்னைத் தகுதியுடையவராக ஆக்கிக்கொள்ளவில்லை

48


48