உள்ளடக்கத்துக்குச் செல்

இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்/கர்ப்பக் குறியறிந்த தாய் மரணம்

விக்கிமூலம் இலிருந்து

பதினான்காவது அதிகாரம்


கர்ப்பக் குறியறிந்த தாய் மரணம்

திருவல்லிக்கேணியிலுள்ள வீட்டில் நாங்கள் குடி புகுந்து ஒரு வாரமாயிற்று. என் சிற்றப்பா எங்களுக்கான வசதிகளைக் கூடுமான வரை செய்து கொண்டிருந்தார். எனக்கு—என் தாய்க்குக் கூட அவர் உதவியையே கடைசி வரை எதிர்பார்த்து, வாழ்க்கை நடத்துவதென்பது சிறிதும் கர்ப்பக்குறி யறிந்த தாய் மரணம் 233

பிடிக்கவில்லை. நான் எங்காகிலும் போய் முயன்று. பார்த்து என் தாயைக் காப்பாற்ற வேண்டுமென்ற உறுதி கொண்டேன். - * - - .

நான் இவ்வாறு மனதில் முடிவு செய்தேனே யொழிய என் உடல் கிலே அதற்கு இடத்தரவில்லை. சில நாட்க ளாகவே, என் தேகம் சரியான நிலையிலில்லை. அடிக்கடி அயர்வு ஏற்பட்டு வந்தது. படிப்படியாக என் உடம்பு பலவின மடைந்து வருவதாக உணர்ந்தேன். இந்த விட் டுக்கு வந்ததற் கப்புறம் இருந்தாற்போலிருந்து மயக்கம் வர ஆரம்பித்தது. உணவு சரியாகப் பிடிப்பதில்லை. மீறிச் சாப்பிட்டாலும், வாந்திவரத் தொடங்கியது. இந்நிலையில் நான் ஒன்றை நினைக்கவோ, செய்யவோ முடியவே யில்லை. நாளெல்லாம் படுத்துக்கொண்டேயிருந்தால் சுகமா யிருக்கும்போலிருந்தது. எனது அசதி கிலே யைக் கண்டு என் தாய் துடி துடித்தாள். உடம்பு என்ன பண்ணுகிறது. என்பதை யறிய டாக்டரிடஞ் செல்வதற்குக்கூடக் கதியில் லேயே என்று ஏங்கினுள். -

ஒருநாள் அதிகாலே நான் படுக்கையைவிட்டு எழுச் திருக்க முயன்றேன். உடனே மயக்கம் போட்டு அதன் மீதே விழுந்துவிட்டேன். இச்சப்தத்தைக் கேட்டு தாழ்வா ரத்தில் ஏதோ வேலையாயிருந்த என் தாய் ஓடிவந்து ஆடை யொருபுறம் காைெரு புறமாய் அலங்கோலமாகக் கிடந்த என்னே வாரி யெடுத்துச் சிரம ப்ரிகாரஞ் செய்தாள். அப் போதும் என்னல் படுக்கையைவிட்டு எழ முடியவில்லை. எனவே என் தாய் பக்கத்து வீட்டிலிருந்த கமலம்மாளைக் கூப்பிட்டு வந்து என்னைக் காண்பித்தாள்.

வயது. சென்ற அந்த அம்மாள் என்னைக் கூர்ந்து கவ. னித்துவிட்டு என் காயை ஆச்சரியமாகப்பார்த்து என்.

16 234 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

ன்ம்மா! உனக்கு இது தெரியவில்லையே?-ஆமாம். இந்தக் குழந்தைக்கு இன்னும் கலியாணமாக வில்லையாக்கும் என் றல்லவோ நான் நினைத்திருந்தேன்?-உன் மகளுக்கு விவாக மாப்விட்ட சமாசாரத்தை ஏன் என்னிடம் கூறவில்லை. லாஷ்மியம்மா! நாங்க ளெல்லாம் அதைத் தெரிந்து கொள் ளப் படாதா?’ என்று கேட்டாள். -

என் தாய், என்ன அம்மா! நீங்கள் சொல்வதே எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே' என்று சந்தேகத் தோடு வினவினுள். w .

இச்சமயத்தில் எதிர்வீட்டு ஜகதாம்பாளும், அவள் மக ரூம், புவனவுக்கு என்ன உடம்பு என்று கேட்டுக் கொண்டே வந்தனர். -

கமலாம்மாள் இவர்கள் வந்ததையுங் கவனியாமல் என் தாயை நோக்கி என்ன விளங்கவில்லை? புவன கர்ப்பமாக வன்ருே இருக்கிருள்? கர்ப்பக் குறிகள் தான் நன்முகத் தெரிகிறதே! பெண்ணுய்ப் பிறந்தவர்களுக்கு இது கூட்வா தெரியாது? அதுவுக் காயறியாத சூலா!............” என்று நீட்டிப் பேசிள்ை. - - -

இவ்வார்த்தையைக் கேட்டதும் . நான் துணுக்கும் றேன். என் தாய் துள்ளி யெழுந்து, என்ன என்ன! கர்ப்பமா? புவனவா கர்ப்பமாக இருக்கிருள்? இதென்ன கொள்ளை, ஐயோ கடவுளே...........! என்று கூறி யலறிய வண்ணம் மூர்ச்சித்து விழுந்தாள். பக்கத்தி லிருந்தவர்கள். என் தாயைத் தாங்கிப் பிடித்தனர். என் தாயின் உடல் துவண்டது. . - -

என் தாயின் நிலையைக் கண்டதும், நான் மெய்ம் மறந்து.'ஆ' அம்மா......" என்று அலறிக் கொண்டே எழுந்தேன். ஆனல் என் தலே கிறு கிறுத்தது. கர்ப்பக்குறி யறிந்த தாய் மரணம் 235

இதற்குள் ஜகதாம்பாள் கமலாம்மாளைப் பார்த்து என்ன அம்மாமி உடம்பு சில்லிட்டு விட்டதே! இந்தம் மாளைக் கீழே படுக்கவைத்து ஆஸ்வாஸப் படுத்துவோம் * * 峰* 心* 物 * * * * ....” எனக் கூறிய வண்ணம் என் தாயைப் படுக் கையில் கிடத்த முயன்ருள். அச்சமயத்தில் கமலாம்மாள் உடல் நடுங்கியதை நான் கவனித்தேன். இருவருமாகச் சேர்ந்து என் தாயைப் படுக்க வைத்தனர்.

பின்னர். கமலாம்மாள் என் தாயைச் சந்தேகத்தோடு நோக்கி விட்டு, ஜேகதா! சீக்கிரம் ஜலம் கொண்டு வாடி! முகத்தில் தெளிக்கலாம்.................... ’ என்ருள். தம் முந், தானேயால் என் காய் முகத்தில் விசிறிக்கொண்டே கமலம் மாள் சோர்ந்து உட்கார்ந்திருந்த என்னைக் கடைக்கண் ளுல் கூர்ந்து நோக்கினுள். - - ко -

ஜகதாம்பாளின் மகள் ருக்மணி என்னருகில் வந்

தமர்ந்து என்னைச் சேர்த்தணேத்த வண்ணம், புவன பயப் படாதே அம்மாளுக்கு ஒன்று மில்லை. காலையில் கன்.தட் டிப் போய்விட்டது. வயசாய் விட்டதோ இல்லையோ ப்ரி காரஞ் செய்தால் சீக்கிரம் மூர்ச்சை தெளிந்தெழுந்து விடு வார்கள் அழாகேயம்மா .................... பாவம்! நன்குப்

வாழ்ந்த குடும்பம்” என்று எனக்குத் தேறுதல் கூறினுள்,

இதற்குள், ஜகதாம்பாள் ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டு வந்தாள். கொஞ்சங் கையில் நீரை யெடுத்து என் தாயின் முகத்தில் தெளித்தாள். * -

ஜகதா! வாயைத் திறந்து உள்ளுக்குங் கொஞ்சம் திர்த்தங் கொடு” என்று கமலம்மாள் கூறிய வண்ணம் என் தாய் உடுத்தியிருந்த ஆடைகளைத் தளர்த்திவிட்டுக் கெர்ண் டிருந்தாள். 236 இவ்வுலகைத் திரும்பிப் யாரேன்

பாத்திரத்தை யெடுத்து நீரை வாயில் விட முயன்ற ஜகதாம்பாள், எதையோ திடீரெனக் கண்டு மருண்டவள் போல் 'ஐயையோ பல் கூடக் கிட்டி விட்டதே அம்மாமி! * * * * * * * * * * * * * * * * * * * * பேச்சு மூச்சில்லையே?........................என்ன தான் மூர்ச்சை போட்டு விழுந்தாலும், இவ்வளவு செய்தும் இத்துனே நேரமாகவா எழுந்திராமல் இருப்பார்கள்? அதென்னமோ அம்மாமி எனக்கு ஒன்றுமே புரியவில்லை * * * * * * * * * * * * " என்று தடுமாற்றத்தோடு பேசினுள்.

கமலம்மாள் வாயைத் திறக்காமல் அப்படியே உட் கார்ந்த விட்டாள். ருக்மணி என்ன என்ன பல் கிட் டிப் போய் விட்டதா!........ "என்று கேட்டுக் கொண்டே எழுந்து சென்று தன் தாயின் முகத்தையும் கமலம்மாள் முகத்தையும் மாறி மாறிப் பார்த்து விழித்து நின்ருள்.

ஜகதாம்பாளின் கடைசி வார்த்தை என்னே மிகவுங் கலக்கிவிட்டதென்றே சொல்லவேண்டும். எனக்கிருந்த உடற் சோர்வும், மயக்கமும் எங்கேயோ பறந்து போய் விட்டன. உணர்ச்சி வசப்பட்ட நான் ஒரே ஆவேசத் தோடு துள்ளி யெழுந் தோடினேன். என் தாயின் மீது விழுந்து அலறினேன். 'அம்மா அம்மா!...* 3. என்று கூவிய வண்ணம் என் தாயைப் புரட்டிப் பார்த் தேன். "அம்மா எழுந்திரேன் பேச்சு மூச்சில்லாமல் கீழே விழுந்துகிடக்கிருயே! என்மேல் உனக்குக் கோபமா........... 娜*台碑罗融然够战 ’ என்று மீண்டும் குழந்தைபோல் வாயில் வந்தவாறு பிதற்றிப் புலம்பினேன்.

கமலம்மாள் மற்றிருவரையும் பார்த்து, ஊஉம்! போச்சு; அவ்வளவுதான்!” என்று கூறிக் கையை விரித் தாள். கலக்கத்தில் அவளது பேச்சு எனக்குப் பரிபாஷை யாகத் தோன்றியது. • கர்ப்பக்குறி யறிந்த தாய் மரணம் 237

இச்சமயம் என் சிற்றப்பா, என்ன என்ன இது விப ரீதம்!” என்று பரபரப்புடன் கேட்டுக்கொண்டே உள்ளே துழைந்தார்.

என்னமோ லக்ஷ்மியம்மாள் குழந்தை புவணுவுக்கு மயக்கம் தலையெடுக்க வொட்டாது சுற்றி யடிக்கிறது என்று சொல்லி, எங்களைக் கூப்பிட்டு வந்து காட்டிஞர்கள். கடைசியில் அந்தம்மாளே இருந்தாற்போலிருந்து மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டார்கள். நாங்களும் என்னென் னமோ சைத்தியோபசாரமெல்லாம் பண்ணினுேம்; ஒன்ரு அம் பலன் காணப்படவில்லை. அரை மணி நேரத்துக்கு மேலாகியும் இன்னும் மூச்சுப் பேச்சில்லை. ஜலங்கூட உள் ளுக்கு இறங்கவில்லே....................... ....உடம்பு என்னமோ பண்ணுகிறது என்று படுக்கையிலேயே கிடந்த குழந்தை புவன மனக் காளாது அழ ஆரம்பித்துவிட்டது. பாவம்! கஷ்ட மின்ன தென்றே தெரியாது செல்வமாய் வளர்ந்தது. உலகத் தெரியாது. குழந்தைக்குப் பச்சை உடம்பு, அதை பலட்டிக்கொள்ள வேண்டாம் என்று சொல்லுங்கள் எனப் பதில் கூறிய வண்ணம் எழுந்து கின்ருள். அவருக் குப் பின்னே ஜெககாம்பாளும் ருக்மணியும் மறைந்து கின்ருர்கள்.

கமலம்மாள் கூறிய விவரத்தைக் கேட்டதும் என் சிற்றப்பா திகைத்து கின்றுவிட்டார். இரண்டொரு விநாடி களுக்குப் பிறகு, அவர் ஓடி வந்து என் தாயைக் குனிந்து பார்த்தார். மூக்கில் கை வைத்துக் கவனித்தார். உடனே ஏதோ உண்மை தெரிந்துகொண்டவர்போல், ஐயோ! அண்ணி! நீயும் மோசஞ் செய்துவிட்டாயா!' என்று கத றிய வண்ணம் தலையி லடித்துக்கொண்டார். இவரது ________________

238 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன் வார்த்தையும் செயலும் எனக்கு மேலுங் குழப்பத்தை யுண்டுபண்ணியது. "ஐயோ! அப்பா! என்னப்பா இது! எனக்கு உண்மை சொல்லக் கூடாதா! அம்மாளுக்கு என்ன நேர்ந்து விட் டது! டாக்டரையாகிலும் போய் அழைத்துவாயேன்! அப்பா! ஏனப்பா! விழிக்கிறாய்! டாக்டருக்கு பீஸ் (Fees) கொடுக்க வேண்டுமே! எங்கே போவது!' என்று யோசிக் கிறாயா! அதற்கு என் கையில் இருக்கிற வளையல்களைக் கழற்றித் தருகிறேன். தயங்காதே அப்பா........என்னம்மா - என்னைப் பெற்ற அம்மா இப்படிக் கிடப்பதைக் காண எனக்குச் சகிக்கவில்லையே! இன்னும் என்ன அப்பா எண்ணுகிறாய்? சொல்லேன். வாயைவிட்டு என்னிடஞ் சொல்லேன்........” என்று கதறிப் பதறிப் பிரலாபித்தேன், நான் என் சிற்றப்பாவின் மீது விழுந்து அவரைப்பிடித் துக் குலுக்கித் தொந்தரவு செய்தும், அவர் சித்தப் பிரமை கொண்....வர்போல் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார். ' பிறகு அவர் ஏதோ பேசத் தொடங்கியவர் கமலம் மாள் முதலியவர்களைத் - திரும்பிப் பார்த்தார். அவர்கள் யாருங் காணப்படவில்லை. அவர்கள் எங்களுக்குத் தெரியா மலே மெல்ல நழுவிவிட்டார்களென்று தெரிந்தது. எனவே, அவர் ஒருவிதமாகத் தலையை யசைத்து விட்டுப் பின் என்னை கோக்கி, "அம்மா புவனா நீ அழாதே! அம்மாவைப் பார்த் துக் கொண்டிரு. நான் இதோ போய் டாக்டரை யழைத் துக்கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.. நான் ஒன்றும் தோன்றாமல் என் தாயின் பக்கத் கமர்ந்து அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னை யறியாமலே கண்களிலிருந்து நீர் பெருகி வழிந்த வண்ண மிருந்தது. கர்ப்பக்குறி யறிந்த தாய் மரணம் 239.

டாக்டரை பழைத்து வரச்சென்ற என் சிற்றப்பா வெகு நேரமாயும் இன்னும் வரக்காணுேமே என்று எண்ணி வருந்திக்கொண்டிருக்கையில் யாரோ வருங் காலடிச் சப் தம் கேட்டது. ஆவ லோடு திரும்பிப் பார்த்தேன். எங்கள் தெருக்கடியான சமயத்தில் வசிக்க இடமளித்து உதவி வரும் ஜனுர்த்தன நாயுடுவின் மனைவி மக்கள் நாலைந்து பேர் விச னங் குடிகொண்ட முகத்தினராப் வந்து கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டதும் எழுந்து 'அம்மா........... 'என்று கூறி எதிர்கொண்டோடுவதற்குள், அப்பெண்மணிகள் கன் றைக் கண்ட காய்ப் பசுவைப்போல் என்னிடம் தாவி வந்து என்னைக் கட்டிக்கொண்டு கோவெனக் கதறி யழுதனர்.

இக்கூக்குரலேக் கேட்டோ என்னவோ கமலம்மாள் முதலியவர்களும் அக்கம் பக்கத்திலுள்ள பெண்களும் வந்து கூடிவிட்டனர். பின்னர் ஜனுர்த்தன நாயுடு மகளிரில் இரு வர் கூடத்தின் நடுவில் ஒரு பாயை விரித்துப்போட்டு அதன் மீது என் தாயை எடுத்துக் கிடத்தினர். அப்புறம் எல்லோ ரும் என் காயைச் சுற்றி யுட்கார்த்து அழலாயினர். இச் செயலையும், அங்கு வந்தவர்கள் பேசிக்கொள்ளும் வார்த்தை களையுங் கேட்ட பிறகுதான், என் தாய் திடீரென எற்பட்ட மன அதிர்ச்சி தாங்கமாட்டாது இறந்துவிட் டாள் என நான் அறிந்தேன். இதை யறிந்ததும் நான், அம்மா என்னே விட்டா நீ போய்விட்டாப் ஐயகோ கடைசியாக என் கதி இப்படியா ஆகவேண்டும்! நமது சீருஞ் செல்வமும் போய்விட்டன. என்னே அருமையாக வளர்த்து, கல்வி புகட்டிய என் தந்தையும் போய்விட்டார்: அப்படியிருந்தும், என்னைப் பத்துமாதஞ் சுமந்து பெற்ற தாய்- எறும்பு நாடாவாறு இரவும் பகலும் கண் விழித்து காத்த அருமைக் காய்-பால் கினைந்தாட்டி வளர்த்த என் : 240 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

ஆருயிர்த்தாய் இருக்கிருய் என மனந்தேறி யிருந்தேனே! நீ இருக்கும் வரை எனக்கு ஒரு குறையும் வராது என்று எண்ணியிருந்தேனே! என் எண்ணத்தில் மண்ணேப்போட்டு விட்டாயே! இனி யாரை நம்பி உயிர் வாழ்வேன்! இவ்வுல கத்தில் யார் எனக்கு கதி!-அந்தோ! கடைசியாக என் குலா அம்மா! நீ உயிர் துறந்தாய். கான உன் உயிர்க்கு எமனுக இருந்தேன்? ஆ! நான் என் செய்வேன் ஆ!!...” என்று கதறியவண்ணம் மூர்ச்சையாகி விழுந்தேன்.

嶽 * , 嶽 疊

என் நெற்றியில் சில்'லென்று ஏதோ பட்டதுபோன்ற உணர்ச்சி யேற்பட்டதனுல் கண் விழித்தேன். என் பக்கத் தில் ஜனுர்த்தன நாயுடுவின் கடைசி மகள் பத்மாவதி நின் றிருந்தாள். கண் திறந்து பார்த்ததைக் கண்ட அவள், "புவனம்மா! எப்படி யிருக்கிறது உடம்பு ஏதாவது கொடுக் கட்டுமா?’ என்று பரிவாகக் கேட்டாள். -

நான் தலையை ட்யசைத்துவிட்டு எழுந்திருக்க முயன் றேன். பத்மாவதி கையமர்த்தி, அம்மா! நீ எழுந்திருக்கக் கூடாது என்று டாக்டர் உத்தரவு உடம்பு அலண்டு விடு மாம், என்ன வேண்டுமோ கேட்டால் நான் கொண்டு வந்து தருகிறேன்” என்று மரியாதையாகக் கூறிய வண் ணம், படுக்கையில் நழுவி விழுந்த ஐஸ் கட்டி மூட்டையை எடுத்து மீண்டும் என் நெற்றியில் வைத்தாள். ~

நான் பக்மாவதியின் பேச்சைச் செவியேற்காமல், 'என் அம்மா எங்கே? என் அம்மா எங்கே?........ 'என்று கேட்டுக்கொண்டே எழுந்திருக்க முயன்றேன். இதே சம ல் தான் படுத்திருந்த அறைக்கு வெளியில் பெருத்த

யத்தில், அழுகை யொலியும், ஜனங்கள் கூச்சலும், சங்கு முதலிய கர்ப்பக்குறி யறிந்த தாய் மரணம் 241

வாத்தியங்களின் ஒசையும் எக்காலத்தில் என் காதில் விழவே நான் துள்ளி எழுந்து, என்னத் தடுத்த பத்மா வதியை ஒரு புறம் தள்ளிவிட்டுப் பைத்தியக்காரிபோல் ஒடினேன்! வெளியில் நான் கண்டதென்ன என் தாயின் பிரேதத்தை அப்போதுதான் பாடையில் கொண்டுபோய் வைத்துக் கொண்டிருந்தனர். என் சிற்றன்னேயும், மற்றும் உறவினர்களும் நண்பர்களும் பாடையைச்சுற்றி பழுது கொண்டிருந்தனர். நான், அம்மா! உன்னே எங்கே துக்கிக்கொண்டு போகிருர்கள்?-ஐயோ! என் அம்மாவை என்னிடமிருந்து எங்கே கொண்டுபோகிறீர்கள்? பாவி களே! உங்களுக்கு இரக்கமில்லையா?" என்று கேட்டுக் கொண்டே ஓடிச் சூழ்ந்திருந்தவர்களே யெல்லாம் நீக்கிக் கொண்டு பாடையில் வைத்த என் தாயின் பிரேதத்தின் மீது விழுந்து முகத்தோடு முகம் வைத்துச் சேர்த்துக் கட் டிக்கொண்டு அழுதேன். இதற்குள் நாலந்து பெண்கள் மிகவுஞ் சிரமத்தோடு என்னைப் பிடித்துத் தாக்கி விட்டி லுள்ளே பழைத்துக்கொண்டு போய்விட்டார்கள். -:

அதிகம் விவரிப்பானேன்! என் தாயின் பிரேதம் அடக் கஞ் செய்யப்பட்டாய்விட்டது. அக்கம் பக்கத்திலுள்ள வர்களும், உள்ளுர் உறவினர்களும் போய்விட்டனர். என் பாட்டி வீட்டா ரனவரும் வந்திருந்தமையால் ஜனுர்த்தனம் நாயுடு குடும்பத்தினரும் சென்றுவிட்டனர். ஒவ்வொரு வரும் எனக்கு ஆறுதல் தேறுதல் கூறிவிட்டே போயினர். ஆனல், ஜனுர்த்தனம் நாயுடுவின் மனைவியும் பெரிய பெண் அணும் என்னிடம் முன்போல் அவ்வளவு பற்றுத லில்லாத வர்களாய்க் காணப்பட்டனர். கமலம்மாள் அவர்களிடம் என் நிலையைச் சொல்லியிருக்கவேண்டும். அதைப்பற்றி கான் அவ்வளவாகக் கவலை கொள்ளவில்லை. 242 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

நான் உடம்பு குன்றியுட்கார்ந்திருந்தேன். என் மனம் பலப்பல எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது. திடீ ரென அறைக் கதவு திறக்கப்படவே, சிந்தனை கலந்து தலை கிமிர்ந்து பார்த்தேன். என் முன்னே சிற்றன்னே மிடுக்காக இடுப்பில் கைவைத்து நின்றுகொண்டிருந்தாள். என் பாட் டியும், மற்று மிரு மகளிரும் அப்போதுதான் அறையினுள் வந்துகொண்டிருந்தனர். என்னே ஏளனப் பார்வையாகப் பார்த்துக்கொண்டிருந்த சிற்றன்னே உடனே அவர்கள் பக்கத் திரும்பி, அம்மா! பார்த்தாயா! உன் அருமைப் பேத்தி உட்கார்ந்திருக்கும் ஒய்யாரத்தை தன்னைப் பெற்ற தாய் போய்விட்டாளே என்ற கவலை கொஞ்சமாகிலும் இருந்தால் இவள் இப்படி இருப்பாளா பாவம்! சர்க்க ரைக்கட்டி அழுதழுது பாகாய் உருகிப் போகிறதென்று கண்ணிர் வடிக்கிருயே அம்மா!-இவள் பாசாங்குக்காரி யென்று முளையிலிருந்து கிளம்பிய போதே தெரியுமே!. ஊரார் மெச்சிக்கொள்ள இந்நேரங் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு கூத்தடித்தாள்'................ உம் அப்பா நாலு நாளானுைம் இவள் என்ன ஆட்டம் ஆடிகுள் என்ன ஆர்ப்பாட்டம் செய்தாள் இவள் வைத்ததுதான் சட்டம் எந்த விதமாய் இவள் தலை கவிழ்ந்து ஆடினுள்! அதுதான் கடவுளுக்குக்கூடப் பொறுக்கவில்லை. அந்தச் சமயத்தில் நாங்களெல்லாம் இந்தச் சிறுக்கிக்கு என்ன பயப்படுவோம் தெரியுமா அந்த மனுஷன்-அதான் இவள் அப்பன்-இவளேப் பூலோக ரம்பை யென்றும், காணக் கிடைக்காத கற்பகமென்றும் எண்ணி ஊரிலில்லாதபடி செல்லங்கொடுத்து வளர்த்து அவள் இஷ்டப்படியெல்லாம் ஆடினன். அதற்குமேல் இப்போது செத்த புண்ணியவதி இவளைத் தரையில் விட்டால் தவங்குலேந்து போகுமென்று கருதித் தலையிலே ஏந்திக் கொண்டிருந்தாள் இப்படி கர்ப்பக்குறி யறிந்த தாய் மரணம் 243.

யெல்லா மிருந்தால் பெண் அடங்காப் பிடாரியாய்ப் போவ தற்குக் கேட்கவா வேண்டும் அந்தச் செல்வமெல்லாம் இனிமேல் எங்கே?............................ ’ என்று ஆடிப்பாடிப் பேசினுள். -

இவ்வளவு துணிவாக என்னெதிரியிலேயே என்னே இடித்திடித்துப் பேசியது இதுவே முதல் தடவை யாக லால், என் சிற்றன்னே கூறிய சொற்களைக் கேட்டு நான் உடல் நடுங்கினேன். என் கண்களில் நீர் நிரம்பிப் பார் வையை மறைத்தது.

என் பாட்டி இடை மறித்து, அடி ஜகதா எண்டி. குழந்தையைக் கண்டு குலைகிருப் பாவம்! அது பொன்னே யும், பொருளையும், தகப்பனையும், கடைசியாக இப்போது பெற்ற தாயையும் பறிகொடுத்துவிட்டு எங்கித் தவிக்கிறது! அழாதே அம்மா அந்தக் கொள்ளிக்கண்ணி எதாகிலும் பிதற்றிக்கொண்டு போகிருள்! நீ கண்ணத் துடைத்துக் கொள்; அழாதே" என்று கூறியவண்ணம் தன் முந்தான் யால் என் கண்களைத் துடைத்துத் தேற்றினுள்.

இதைக்கண்ட என் சிற்றன்னே ஆத்திரமாக, குழந்தை குழந்தையைப் பார் கழுதைக்கு வயசாற்ைபோல் 22 வய தாச்சு. குதிர்போல வேறே வளர்ந்திருக்கு: குழந்தையாம். பால் குடிக்கிற குழந்தைக்கு பாவம் பாட்டி சிபார்சுக்கு. வந்து விட்டாள்! இன்னும் உங்களையெவ்லாம் இவள் மதித் தாளாகுல் நீங்கள் இவளைத் தலையில் தாக்கிக்கொண்டு ஆடு வீர்கள்!-நம் சிதம்பரநாதனே இவள் கலியானஞ் செய்து, கொள்ள மாட்டேனென்று சொல்லி அவமானப்படுத்தி: அனுப்பியதை இதற்குள் நீ மறந்துவிட்டாய்போலிருக்கு1. இவள் பண்ச் செருக்கும் படிப்புக் கர்வமுங்கொண்டு மன்மகன்போ லிருக்கும் அவனே கறிக் கள்ளினளே! 244 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

இப்போது எந்த மாப்பிள்ளை இந்தப் பிச்சைக்காரி-அதா தையை வந்து கலியானஞ்செய்துகொள்வான்? கடைசி யில் இவள் அவர்கள் காலிலேதானே வந்து விழவேண்டும்? அவர்கள் ஆதரவைத்தானே இவள் நாடவேண்டும்? இல்லா விட்டால் இவளுக்குப் போக்கிடமேது?-என்ன இருந்தா அம் இத்தறுதலையைச் சிதம்பரநாதன் கலியாணஞ் செய்து கொள்வானென்று நான் நினைக்கவில்லை? அத்தை இறந்து விட்டாளென்ற தந்திச் செய்தியைக் கண்டு கதறியவன் இம்மூதேவி முகத்தில் விழிக்கக்கூடா தென்றுதானே கம்மோடு வர மறுத்துவிட்டான்! அப்பேர்ப்பட்டவனு இவளேக் கலியாணஞ் செய்து கொள்வான்? அவன் மனமும் வெறுத்துப்போக்சு-இவள் கர்வத்தைக் கண்டு என்னதான் பணமிருந்தாலும் படிப்பிருந்தாலும் பெண் குய்ப் பிறந்தவளுக்கு இவ்வளவு அகம்பாவம் உதவாது அம்மா! இவ்வளவு குதித்தாளே அந்த வாழ்வு நிலைத்ததா! ........' என்று நீட்டி பேசிக்கொண்டே போனவள் என் சிற்றப்பாவின் வருகையை யறிந்து திடீரென்று நிறுத்தி விட்டு ஒன்றுக் தெரியாதவள்போல் அவரை எதிர்கொண் டழைக்கப் போய்விட்டாள். அவளைப் பின்பற்றி மற்றவர் களுஞ் சென்றனர். என் சிற்றன்னே இத்தனைநாள் அடக்கி வைத்திருந்த விஷத்தைக் கக்கிவிட்டாள்-வஞ்சத்தைத் தீர்த்துவிட்டாள் என்று அவள் பேசிய தோரணையிலிருந்து தெரிந்துகொண்டேன். இப்பேர்ப்பட்டவளுக்கு நான் கர்ப்ப முற்றிருக்குஞ் செய்தியும், அதேைலயே என் தாய் இறந்தாள் என்ற செய்தியும் தெரிந்தால் என்ன எவ்வாறு அலக்கழித்துப் பேசுவ்ாள்? என்ன செய்வாள்? என்று ஊகித்தபோது என் உடம்பேயன்றி உள்ளமும் நடுங்கியது.

என்னைத் தனியேவிட்டுச் சென்றவர்கள் அப்புறம் யாருமே--என் சிற்றப்பாகூட வந்து பார்க்கவில்லை. இரவு கர்ப்பக்குறி யறிந்த தாய் மரணம் 245,

8-மணிக்கு மரகதம் (சிற்றன்னேயின் கடைசிப் பெண்) என்னைச் சாப்பிட அழைத்தாள். இரண்டு நாளாக ஒன் றும் உட்கொள்ள வில்லையாயினும் எனக்குப் பசியில்லை யென்று கூறி யனுப்பிவிட்டேன். அதற்காக, யாரும் என்னே வேண்டவில்லை. அப்படியே தரையில் படுத்தேன். எனக்குத் தாக்கமே வரவில்லை. பசியும் கவலையும் வாட்டும் போது எனக்குத் தாக்கம் எங்கிருந்து வரும்? நான் பிறந்து வளர்ந்த அருமையும், கல்லூரி யனுபவமும், லண்டன் வாழ்க்கையும், ஒன்றன்பின் ைென்ருக எனக்கு ஏற்பட்ட துன்பமும், கடைசியாக யானடைந்த கிர்க்கதியான கிலே மையும் படக்காட்சிபோல் என் மனக்கண் முன் தாண்டவ மாடின.

இச்சமயத்தில் என் அறைக்குச் சமீபத்தில் யாரோ பேசுஞ் சப்தங் கேட்டுத் திடுக்கிட்டெழுந்தேன். கத வோரத்தில் போய் கின்று ஒற்றுக்கேட்டேன்.

'உன் அக்கா இறந்த இரகசியந் தெரியுமா?” :இதில் என்ன இரகசியம்? நாள் வந்து போளுள்." கநான்கூட முதலில் அப்படித்தான் நினைத்தேன். சாயங்காலம் நாயுடம்மா சொன்ன பிற்பாடுதான் சமா சாரங் தெரிந்தது. என்ன காலம்?” t விஷயத்தைச் சொல்லித் தொலையேன். சும்மா கீட்டு கிருயே! நாயுடம்மா சொன்ன சமாசார்மென்ன?”

'கம்ம புவன கர்ப்பமா யிருக்கிறதாம். இதை எதிர் விட்டுக் கமலம்மா தெரிந்து சொன்னதும் உன் அக்கா அலறிவிழுந்த விட்டாளாம். அவ்வளவுகாணும்.” * என்ன புவன? அந்தச் சிறுக்கியா கர்ப்பமாக இருக்

கிருள்? எனக்கு அப்பவே தெரியுமே!...” நான் தள்ளாடினேன். கதவின் மீதே சாய்ந்தேன். நானிருந்த அறை யெல்லாம் கலே கீழாகச் சுற்றுவதுபோல் எனக்குத் தோன்றியது. -

அவளை லேகில் விடுகிறேன பார்! பழிக்குப் - பழி வாங்குகிறேன், நான் செய்கிற........அவள் எங்கேயாகி லும் ஒடிவிடவேண்டும்.” -

"ஐயோ, கூச்சலிடாதே! உன் அம்மா........ விழித்திருக் கப் போகிருர்கள்?...-வெளியாருக்குத் தெரிந்தால் வெட் கக்கேடு.” - - -

அவ்வளவுதான் என் காதில் விழுந்தது. இதற்குள் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டேன். (மீண்டும் நான் உணர்ச்சி பெற்று எழுந்தபோது கோழி கூவியது. அறிவு தெளியவே பழைய நினைவுகள் ஒருங்கே வந்து என் மனத் தில் குவிந்தன. நான் தற்போதிருக்கும் கிலைமையைச் சிங் தித்துப் பார்க்கவே, 1.இனி, சிற்றன்னே முதலியோரிடையே ஒரு கணமும் இருக்க முடியாது. எங்கேயாகிலும் வெளி யேறி விடுவதுதான் கலம்" என்ற முடிவுக்கு வந்தேன். எனவே, நான் உடம்பு அயர்ச்சியாக இருந்தும் பொருட் படுத்தாமல் ஆடைகளைச் சீர்திருத்தி, தலைமயிரைக் கோதி முடித்துக்கொண்டு அறையைத் திறந்து மெல்ல்த் தல்ேயை நீட்டி வெளியே கவனித்தேன். எல்லாரும் நல்ல உறக்கத்தி லிருந்தது தெரிந்தது. உடனே நான் அடிமேலடிவைத்து நடந்து கூடம் முதலியவற்றைக்கடந்து புறக்கடைக் கதவை இசைபடாமல் திறந்தேன். தெருவில் யாராகிலும் நடமாடு கிருர்களா என்று சிறிது நேரம் கவனித்தேன். கிழக்க்ே அருளுேதயங்கூட இன்னும் ஆகவில்லை. யாகையால், பறவை பிராணிகளுடைய சந்தடிகூட் இல்லை. ஆகவே நான் கதவை வெறுமனே மூடிவிட்டுத் தெருவில் தேன். அதிகாலையில் வீசும் தூய குளிர்ந்த காற்று என் மீது பட்டதால், என் உடலயர்வெல்லாம் நீங்கிப் புத்துணர்ச்சி கொண்டேன். முந்தானையால் நன்றாக முக்காடிட்டுக் கொண்டு, நான் பல தெருக்களைக் கடந்து, தெற்குப் பக்கமாகச் சென்று கொண்டிருந்தேன்.