உள்ளடக்கத்துக்குச் செல்

இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்/ஜன சமூகத்தை விட்டு வெளியேற்றம்

விக்கிமூலம் இலிருந்து

பதினைந்தாவது அதிகாரம்


ஜன சமூகத்தை விட்டு வெளியேற்றம்

நான் என்ன தைரியத்தினால், எங்கே போகும் நோக்கத்தோடு, வீட்டை விட்டு, உறவினரை விட்டுத் திடீரென வெளியேறினேன் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஏன்? எனது இளம்பருவ நண்பன்—காதலன் ஜான் கில்பர்ட்டினிடஞ் செல்லலாம் என்ற எண்ணத்தினால்தான். அவன் நான் வந்த இரண்டு வாரங்களுக்கெல்லாம், லண்டனிலிருந்து சென்னை வந்து சேர்ந்து விட்டான் என அறிந்திருந்தேன். ஆகையால், அவனிடஞ் சென்று, எனது நிலைமையெல்லாங் கூறினால், அவன் எனக்கு இனி ஆவனவற்றைச் செய்து காப்பாற்றுவான் என்பது என்னுடைய திடமான நம்பிக்கை. ஏனென்றால் நான் கர்ப்பமுற்றிருப்பதற்கு அவனே காரணமல்லவா! அத்துடன், அவன் என்னிடம் அளவிலாக் காதல் கொண்டிருக்கிறான் என்பது நான் இது வரை சொல்லி வந்த வரலாற்றிலிருந்து நீர் தெரிந்து கொண்டிருப்பீர். ‘ஜன சமூகம், அதிலும் இந்து சமூகம் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் கட்டுப்பாடுகளென்ன! சட்ட திட்டங்களென்ன!’ என்பவைகளை நான் இதுவரை ஊகித்தது கூட இல்லை. ஆகவே, என் எண்ணம் சித்தியாகுமா? எனது செயல் ஜன சமூகத்தால் எவ்வாறு மதிக்கப்படும்? ஜான் கில்பர்ட்டுக்கும் எனக்கும் உள்ள் தொட்ர்பு சரியானதுதான? என்பவைகளைப்பற்றி நான் சிங் தித்துப் பார்க்கவே இல்லை.

எனவே, நான் நேராக செந்தோமுக்குச் சென்று பலரை விசாரித்து ஜான் கில்பர்ட் இருப்பிடத்தை யடைங் தேன். மிஸ் கிரேஸும், கில்பர்ட்டும் என் விட்டுக்கு அடிக் கடி வந்திருக்கிருர்களே யொழிய, நான் அவர்கள் இருப் பிடத்துக்கு இதுவரை போனதில்லை. மிஸ் கிரேஸ் தன் மனதுக்கிசைந்த காதலனைத் தேர்ந்தெடுத்து விவாகஞ் செய்துகொண்டு அவளுேடு வாழ்கிருள் என்று ஜான் சொல்லி யிருந்தமையால், அவளே யெதிர் பர்த்து அங்கு செல்லவில்லை. நான் அவர்கள் வீட்டு வாயிலே யடைந்ததும் எதிர்ப்பட்ட ஆயா (பணிப்பெண்) வை நோக்கி ஜான் கில்பர்ட் இருக்கிரு ைஎன்று விசாரித்தேன். அவள் எனது அப்போதைய தோற்றத்தைக்கண்டோ என்னவோ முகத் தைச் சிடுகிடுத்து எதோ கூறி னன்னே அலட்சியப் படுத்தி விட்டுச் சென்ருள். - -

இதை உள்ளிருந்து தற்செயலாக கவனித்த துரைசானி (ஜான் கில்பர்ட்டின் தாயார்) உடனே வெளியே வந்து விநயமாகப் பேசித் தன் பணிப் பெண்ணின் அலட்சியத்துக் காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். பிறகு, நான் கில் பர்ட்டைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தபோது, அவர் வியப்பாக என்னை நோக்கிவிட்டு, உள்ளே அழைத்துக் கொண்டுபோய் ஒர் அறையில் நாற்காலியொன்றில் உட் காசவைத்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் ஜான் கில்பர்ட் வெளியேயிருந்து இயற்கையாகவுள்ள பெருமிதத்தோடு உள்ளே வந்தான். என்னைக் கண்டதும் திடுக்கிட்டான் என்பது அவனது மெய்ப்பாட்டிலிருந்து நான் அறிந்து கொண்டேன். - ஜன சமூகத்தை விட்டு வெளியேற்றம் 249

பிறகு ஜான் ஹாட் (Hat) டைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு, 'நீ யார்? யாரை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிருய்?" என்று அமர்த்தலாகக் கேட்டான்.

அவளது கேள்வி என்னேத் தாக்கி வாரிப்போட்டது. 'நான் யாரா? உனக்கு என்னைத் தெரியவில்லையா ஜான்? இங்கு உன்னை யன்றி வேறு யாரைத் தேடி வந்திருப்

என்னை மீண்டும் அவன் ஏற இறங்கப் பார்த்துவிட்டு அப்போதுதான் என்ன அடையாளங் தெரிந்துகொண்ட வன் போல் பாவனே செய்து, "ஓ! மிஸ். புவணுவா! என்ன சமாசாரம்? இவ்வளவு அதிகாலையில் என்னைத் தேடி வங் தது. சீக்கிரஞ் சொல். நான் அவசரமாக வெளியே போகவேண்டும்,” என்று துரிதத்தைக் காட்டிக் கூறினன்.

அவன் அப்போது என்னிடம் கடந்துகொள்ளும்

மாதிரி எனக்கு ஆத்திரத்தை யுண்டு பண்ணினுலும், என் கிலமையை யுத்தேசித்து அதை அடக்கிக்கொண்டு, நான்

லண்டனிலிருந்து வந்தது முதல் இதுவரை நடந்த சம்பவங்

களை விவரித்துக் கூறினேன். எனக்கு ஏற்கனவே இக்

சமாசார மெல்லாம் தெரியும்” என்று பொறுமையையிழந்து

கூறி என் பேச்சை படக்க முயன்றவன் எதையோ கிஜனத்

துக்கொண்டு பேசாமல் இருந்தான்.

நான் கடைசியாக, நான் உன் விருப்பப்படியே உன்னே நாடி வந்துவிட்டேன். நம்மிருவரிடையேயும், உள்ர்ந்து வந்த காதல் இப்போது பழுத்த பலன்கூடத் தந்துவிட்டது. அது நம்மைப் பிரிக்க முடியாதவாறு செய்து விட்டது, இனி தோன் தஞ்சம். நீ என்னைச் சிக்கிரம் கலியாண்ஞ் செய்துகொண்டுவிடு' என்று கூறினேன்.

கில்பர்ட், “What do you mean?” என்று உதட்டைக் கடித்துக் கொண்டு கூறினான். அவன் உடம்பு படபடத்தது. பின்னர் அவன் என்னை நோக்கி,

“அது முடியாது!… …அந்த எண்ணத்தை விடு… …உன் வழியைப் பார்த்துக் கொண்டு நட” என்று விட்டு விட்டுப் பேசினான்.

“என்ன! என்ன! மிஸ்டர் ஜான். அது முடியாதா? எது முடியாது?என்னைக்

கல்யாணஞ் செய்து கொள்வதா?’ என்று துடி துடிப்போடு ன்.ழுந்து நின்று கேட்டேன்.

"ஆம், ஆம். எவ்வாறு முடியும் நீயே யோசித்துப் பார்! நீஒர் இந்தியப் பெண். நான் லண்டனில் பெரிய குடும் பத்தில் பிறந்த ஆங்கிலேயன். உன் மதம் வேறு என் மதம் வேறு. இவ்வளவு வேற்றுமைகளுக் கிடையே நாம் எப்படிக் கவியாணஞ் செய்துகொள்ள முடியும்?”

அப்படியானல் நீயேன் என்னைக் காதலித்தாய்? என்னைக் கலியாணஞ் செய்துகொள்வதாகச் சொன்னப்? க்ான் லண்டனிலிருந்து திரும்பி வரும்போதுகூட என்ன வேண்டிக்கொள்ள வில்லையா?”

அதெல்லாம் நமது சிநேக முதிர்ச்சியில் பேசிய விளை யாட்டுப் பேச்சு. - -

என்னைக் கர்ப்பமு றச் செய்ததுகூட விளையாட்டுத் தான" -

. இதைக் கேட்டதும் அவன் முகம் பெரிதும் மாறுத லடைந்தது. எனினும், அத் தகவலேப் பொருட்படுத்தாதவன் போல் சாகலஞ் செய்து, அதிகம் பேசாதே, புவன! வெளியே போ!' என்று கடுகடுத்துக் கூறினன்.

நோன் என்ன கதி யடைவது; ஜான் சிறிது யோசித் துப் பார். நான் உன்னுடைய தொடர்பால் க்ர்ப்பமும் இருக்கும் இங்கிலேயில் என்ன வேறு யார் விவாகஞ்செய்து கொள்வார்கள்?" * 暹°. . . . .

‘Bloody Swine! Don’t speak hereafter Get out at once.” - - - -

ஐயோ கடைசியாக என் கதி இதுதான?-மிஸ்டர் ஜான் நீ.இத்தனை நாளாக என்னுடன் பேசியது-வாக் ஜன சமூகத்தை விட்டு வெளியேற்றம் 253

குறுதி கூறியது எல்லாம் பொய்தான நான் இல்லாது உயிர் வாழமாட்டேன் என்று நீ ஒரு முற்ை யன்று, பலமுறை கூறினயே! நீ இவ்வாறு மோசஞ் செய்வாயென்று கனவி லும் நி ைக்க வில்லையே!-கில்பர்ட்! கொஞ்சம் நிதானித்துப் பார் என் தாய் தந்தையர் சொத்து எல்லாம் போயும் என் காதலன் நீ இருக்கிரு யென்றன்ருே மனந்தேறியிருந் தேன், வந்தேன். ேேய என்னைப் புறக்கணித்தால் இவ்வுல கில் காப்பாற்றுவார் யார்? மன மிரங்கு கடவுளுக்குப் பயந்தாகிலும் என்&னக் கைவிடாதே,” என்று கூறி மண்டி யிட்டு அவன் கைகளைப் பற்றிக் கெஞ்சினேன்.

“Don’t touch me goose! get out!” grașrsa (335ml supré5& கூறிக் கில்பர்ட் என்னே உதைத்துத் தள்ளின்ை.

அவன் உதைத்த வேகத்தில் நான் தாரப்போய் விழுங் தேன். அவன் பூட்ஸ் காலால் உதைத்த உதை புட்டத்தில் பலமாகப் பட்டது. வயிற்றிலோ, இடுப்பிலோ அவ்வுதை விழுந்திருக்குமாயின் அன்றே எமனுல கடைத்திருப்பேன். இன்னும் இவ்வுலகில் நான் கஷ்ட நஷ்டங்களும், துன்பங் களும் அநுபவிக்கவேண்டி யிருக்கிறதே! அப்படி யிருக்க எப்படி எனக்குக் சாவு அவ்வளவு எளிதில் வரும்? பூட்ஸ் உதையினுல் எனக்கேற்பட்ட வலியைக்கூட நான் அச் சமயம் பொருட்படுத்தவில்லை. செல்வக் குமாரியாய்ச் சீர் சிறப்புடனிருந்த காலத்தில் வலிய சிநேகங்கொண்டு என் னேடு கூடிக் குலாவித் திரிந்த ஜான் கில்பர்ட், நானக் அவனே நாடியடைந்தும், எனது தற்போதைய கிராதரவான நிலையை அறிந்ததும், இவ்வாறு வாயில் வந்தபடி பேசி வைது உதறித் தள்ளியதை எண்ணிப் பார்த்தபோது என் வயிறு பற்றி எரிந்தது; இருதயம் வெடித்து விடும்போலிருச் தது; தேகத்தில் ரத்தங் கொதிப்பெடுத்தது; கலை சுற்றியது. இப்பூவுலகம்ே இருளட்ைந்துவிட்டது போலவும், தலே 254 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

கீழாகச் சுற்றுவது போல்வுக் தோன்றியது. தட்டித் தடு மாறி எழுந்து உட்கார்ந்த நான் மீண்டும் ஒருவித மயக்கத் தால் கீழே சாய்ந்து விடுவதுபோன்ற பலவீன உணர்ச் சியை யடைந்தேன். >

எனவே, என் நிலையைச் சமாளித்துக்கொண்டு எழுந் திருக்கச் சிறிது நேரமாயிற்று. நான் என் சிநேகிதையின் சகோதரன், இளம் பருவ நண்பன், என் அன்புடைக் காத லன்! என் ஆருயிர் நாயகன், எனது வருங்கால வாழ்க் கைத் துணைவன் என்றெல்லாம் எவனேக் கருதியிருந்தேனே, என் உடல், பொருள் இவைகளை ஆட்படுத்தியது மட்டு மல்ல, ஆவியையும் எவனுக்குத் தத்தஞ்செய்யக் காத்திருந் தேனே, அவன்-அந்த ஜான் கில்பர்ட் பரம வஞ்சகனய்கன்னெஞ்சக் காதகய்ை-நன்றி. கொன்ற பாதகனுய்ப் போய் அவன் இதுவரை தான் நடித்துவந்த ஆஷாடபூதி வேஷத்தைக் கலைத்து உண்மைச் சொரூபத்தோடு வெளிப் பட்டுச் சிறிதுங் கண்ணுேட்டமின்றி என்னைப் புறக்கணித்த பின்னர் அங்கு ஒரு கணமும் தாமதிக்க எனக்கு விருப்ப மில்லை; ஏற்கனவே உள்ள எனது குழப்ப நிலைமையும், நஞ் சினுங் கொடிய அவனது கடுஞ்சொற்களால் அடைந்த எனது மன நிலைமையுஞ் சேர்ந்ததன் பயனப் உண்டான உடல் தடுமாற்றத்தாலேயே அச் சிறு விநாடிகளும் கெருப் பின்மீது நிற்பதுபோன்றே துடிதுடித்து மனம் புழுங்கி னேன். சீக்கிரம் அவ்விடத்தைவிட்டு வெளியேறி விட வேண்டுமென்ற ஆணர்ச்சி என் தேகத்தைச் செயற் படச் செய்தது. தன்யில் கைகளை ஊன்றியவண்ணம் மெல்ல எழுந்து நின்று தட்டுத் தடுமாறி நடந்து அவ்வறையை விட்டு வெளியேறினேன். - இவ்வளவு நேரமும் ஜான் வேறு ஆக்கக் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டே கற்கிலேபோல் கின்றிருந்தான். அறையைவிட்டு வெளியேறும்போது, ஜன சமூகத்தை விட்டு வெளியேற்றம் 255

கடைசி முறையாக அவனே நேரக்கிவிட்டுச் செல்லவேண்டு. மென்று என் மனதில் சபலத் தட்டியது. ஆனல் அத்து ரோகியின் முகத்தை-பஞ்சமா பாதகன் முகத்தை--கடைக் கணிக்கவும் என் கண்கள் கூசின. எனவே, திரும்பிக்கூடப் பாராது நான் வெளியேறினேன்.

எனக்கு உலகமே வெறு வெளியாய்-சூனியமாகத் தோன்றியது. நான் இப்போது எங்கே போவதென்ற குறிக்கோளே யில்லாது ஆகாயத்தை அண்ணுந்து பார்த்த வண்ணம் மனம்போன போக்கில் நடந்து போய்க்கொண் டிருந்தேன். 'போகும் வழியில் என் எதிர்ப்பட்ட மக்கள் பலர் பேயை-பூதத்தைக் கண்டால் எவ்வாறு பயந்தோடு வார்களோ அதுபோன்று என்னைக் கண்டதும்-அணுகிய தும் திடுக்கிட்டு ஒதுங்கிச் சென்றனர்; சிலர் முகச் சுளிப் பால் தங்கள் அருவருப்பை வெளியிட்டனர். மற்றுஞ் சிறுவர் சிறுமியர் என்னைப் பைத்தியக்காரியென நினைத்துக் கொண்டார்களோ (எனது அப்போதைய அலங்கோல ఓు அப்பிள்ளைகளின் கண்களுக்குப் பைத்தியக்காரர்கள் தோற் றத்தை நினைவூட்டி யிருக்கவேண்டும்) என்னவோ, என்னேக் கண்டு கேலி செய்து கைகொட்டிச் சிரித்ததோ டல்லாது என்மீது கற்களையும் எறிந்து கும்பலாகப் பின் தொடர்ந்த னர். என்னை முன் பின்னறியாத-என் தகுதி இன்னதெனத் தெரியாத-இம்மக்கள் இவ்வாறு செய்தது எனக்கு ஆச் சரியமாகத் தேன்றவில்லை. என்ளுேடு கலாசாலையில் வாசித்த தோழிகளில் சிலரை நான் வழியில் சந்தித்தேன். ஆகவே, அவர்களே யணுகி ஏதோ பேச வாயெடுத்தேன். ஆனல், அவர்கள் என்னைப் பொருட்படுத்தாமல், என்ன இன்னரென்றே அறிந்துகொள்ளாதவர்கள்போல் பொது நோக்கு நோக்கிவிட்டுத் தூரச் சென்றனர்; அவர்க نتنق .. சிலர் என்னைப்பற்றி இழிவாகப் பேசி எளனஞ் ச்ெ 256 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

சென்றனர். இவர்களது செயல் முதலில் என்ன வியம் படையச் செய்ததாயினும், இணைபிரியா தோழனுயிருந்த ஜான் கில்பர்ட்டின் நன்றியற்ற செயலே நினைத்ததும், அவ்: வியப்புக்கு இடமில்லாது போய்விட்டது.

நோன் பிறந்த குடியின் பெருமை யென்ன? வளர்ந்த அருமை யென்ன? சீராட்டு பாரட்டு என்ன செல்வச் சிறப் பென்ன! அவை யெல்லாம் இப்போதென்ன வாயின. பணச் செருக்கு எங்கே? கெம்பிரிட்ஜ் யூனிவர்ஸிடி படிப்பு எங்கே? னன்னே இமை காப்பது போன்று என்னைப் பாது, காத்த பெற்ருேர் எங்கே? உற்ருர் உறவின்ர் சிநேகிதர் எங்கே? எனது செல்வ வாழ்க்கையெல்லாம் இப்போது கனவில் கண்ட பொருள்களைப் போன்றல்லவோ மாயமாய். மறைந்தன? கையில் பணமிருந்தால்தான் எல்லா வைபவங் களும். இல்லையேல் இவ்வுலகில் ஒருவரை பொருவர் உண் மையாக நேசிப்பது என்பது சிறிதுமில்லை. ஒரு மனிதன் தனது செல்வ நிலையிலிருந்து வழுக்கி விழுந்துவிட்டாகு யின், பிறர் அவனே எவ்வளவு துச்சமாகக் கருதுகின்றனர்? மனித வாழ்க்கையின் இவ்வுண்மை நிலையை, தேலையின் இழிந்த மயிா?னயர் மாந்தர்

கிலேயின் இழிந்தக் கடை!! * - என்ற திருக்குறளால் திருவள்ளுவர் எவ்வளவு அழகாக எடுத்து விளக்கி யிருக்கிருர்? இவ்வனுபவ மொழியைப் பொன்னெழுத்துக்களா லன்ருே பொறித்து வைக்கவேண் டும்? ஆ என்ன உலகம்! என்ன வாழ்க்கை இவ்வகித்திய வாழ்க்கையைக் கண்டுதான மக்கள் மயங்கிப் போகின்ற னர் இறுமாப்புக் கொள்ளுகின்றனர்............ ’ என நீள கினைந்த வண்ண்ம் போய்க்கொண்டிருக்கையில், திடீரென்ற ஏற்பட்ட பூம் பூம்" என்ற மோட்டார் ஹார்ன் பெரு முழக்கமும் "கிரீச்” என்ற சக்கரங்களின் சப்தமும் எனது ஜன சமூகத்தை விட்டு வெளியேற்றம் 257

ஆழ்ந்த யோசனையைச் சிதைத்துத் திகைத்து நிற்கச் செய்து

விட்டது. ஆனல் அடுத்த கணம் மோட்டார்காரின் முன் பக்கம் என்மீது மோதவே, நான் பொறி கலங்கிக் கீழே விழுந்தேன். - -

நான் உணர்ச்சி பெற்றெழுந்தபோது என் பக்கத்தில் நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்மணி அமர்க் திருக்கக் கண்டேன். அந்தம்மாள், குழந்தாய்! கடவுள் கிருபையால்தான் நீ கப்பிப் பிழைத்தாய்! நான் கவனியாது. ஒட்டி வந்திருந்தால் நீ இந்நேரம் என் மோட்டாருக்குப் பலியாயிருந்திருப்பாய் சிறிது துரத்திலேயே பார்த்து விட் டுத் திடீரென பிரேக் போட்டு காரை நிறுத்தியதால் தான் அவ்வித அசம்பாவிதம் எதுவும் நேராமல் போய்விட்டது. அப்படியிருந்தும், கார் நின்ற வேகத்தில் உன்னைக் கீழே தள்ளிவிட்டது. மற்றப்படி உனக்கு ஒன்றும் அபாயமில்லை” என்று கூறி என்னைத் தேற்ற முயன்ருர். -

'அம்மா! தங்களது தயாள குணத்துக்கு மிகவும் வர் தனம். தங்கள் மோட்டாருக்கு கான் இரையாயிருந்தால் எவ்வளவோ நன்ரு யிருந்திருக்கும். எனது பலநாள் தொல்லேயும் ஒரே நாளில் ஒழிந்துபோ யிருக்கும். என்னே இன்னுஞ் சில நாட்கள் துன்பத்தில் வாட்டிப் பார்க்க வேண்டுமென்பது கடவுளின் எண்ணம் போலும் கான் உயிர்பிழைத்து இருந்து யாருக்கு என்ன பயன்? தங்க ளுக்குச் சிரமங் கொடுத்தது தான் மிச்சம். கிராதாவான எனக்கு இயற்கை மரணமோ, இவ்விதம் தற்செயலாய் கிக ழும் செயற்கையர்ன கோர மாண்மோ கூடிய சீக்கிரம் சம்பவிக்க வேண்டுமென்றுதான் எதிர்பார்த்துக்கொண் டிருக்கிறேன். நான் எவ்வளவோ கஷ்டப்பட்டும், மான மிழந்தும் தற்கொலை செய்துகொள்ளமட்டும் மனம் வர 258 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

வில்லே. இல்லாவிடில், கடலிலோ, குளத்திலோ விழுந்தாயி அம் மற்றெதன் மூலமாக வாயினும் உயிரை இழந்திருப் பேன். ஒரு சிறு உயிரையும் என்னல் உற்பத்தி செய்ய முடியாதபோது ஒரு உயிரை அழிக்க மட்டும் எனக்கு என்ன உரிமையிருக்கிறது? இவ்வுடல், உயிர், உலகம் எல் லாம் ஆண்டவனது உடைமை. அவ்வுடைமையைச் சொங் தக்காரணுகிய அவனே எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது தான் எனது விருப்பம். அவனது திருவுள்ளக் குறிப்பையே நான் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். மற்றப்படி இவ்வுலகில் நானிருந்து என்ன வாரிக்கொள்ளப்போகி றேன்.?” என்று நான் விரக்தியாகப் பேசினேன்.

இவ்வுலகின்மீது எனக்குள்ள வெறுப்புணர்ச்சியைக் கண்டு அந்தம்மாள் ஆச்சரியங்கொண்டார். எனவே, எனது விரக்திக்குக் காரண மென்னவென அறிய என் வர லாற்றை அந்தம்மாள் மெதுவாகக் கேட்டார். நான் ஆதி போடந்தமாக ஒன்றையும் விடாது கூறினேன், முடிவில் அந்தம்மாள் என்மீக பச்சாதாபங்கொண்டு, புவன இவ் வளவு இளம் பருவந்திலேயே உன் வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள் எற்பட்டது பரிதபிக்கத்தக்கது. மக்கள் வாழ்வில் இதெல்லாம். இயற்கைதான். எனினும், உன் விஷ் யம் சகிக்கக்கூடிய அளவுக்கு மேல் போய்விட்டது. போனது போகட்டும். இனி, நீ அநாதைப் பெண் என்ற எண்ணத்தை விட்டு விடு. இன்றிருந்து நீ எனது மகள். நான் பிராமண குலத்தில் 'பிறந்தும் நர்ஸ் தொழிலை மேற் கொண்டதால், கன்னியாகவே காலத்தைக் கழித்து வந் திருக்கிறேன். பிள்ளைப்பேறு பார்ப்பதில் எனக்கு நல்ல பெயருண்டு. இதல்ை பெருஞ் செல்வஞ் சேர்ந்திருக்கிறது. ராஜம்டிாள் என்ருல், இவ்வூரில் எல்லாருக்குக் தெரியும். நீ என் ஆதரவிலேயே கவலையின்றி இருந்து வரலாம்; வேற். ஜன சமூகத்தை விட்டு வெளியேற்றம் 259.

அறுமையாக ஒன்றும் கினைக்காதே" என்று கூறி எனக்குத் தஞ்சங் கொடுத்தார். \ -

போக்கிட மில்லாமையாலும், வேறு வழி யில்லாமை யாலும், நானும் அந்தம்மாளுடன் வசிக்கச் சம்மதித்தேன். அவ்வீட்டில் ராஜம்மாளைத் தவிர, ஒரு பெண்ணும், ஒரு கிழ வனும் இருந்தனர், அப்பெண் சமையல் வேலை முதலிய வைகளைச் செய்து வந்தாள். கிழவன் மற்ற வெளி வேலை களைக் கவனித்து வந்தான். ராஜம்மாள் தம் தொழில் சம் பந்தமாக அடிக்கடி காரில் வெளியே செல்வதுண்டு. அவ ரைத் தேடிக்கொண்டு ஆடவரும், மகளிருமாகப் பலர் வரு வர். ஆனல், நான் என் அறையைவிட்டு வெளியே செல்வ தில்லை. ராஜம்மாளிடக் தவிர, மற்ற யாருடனும் அநாவசிய மாகப் பேசுவதில்லை.

இவ்வாறு காலங் கழித்து வருகையில், என் கர்ப்பமும் பூரணத்துவமடைந்தது. ஒருநாள் காலை நான் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானேன். சிறிது கஷ்டப் பிரசவமா யிருந்ததால் ராஜம்மாள், என்னை மிகக் கவலையாகக் கவ னித்து வந்தார். பிரசவத்தை யொட்டிய அபாயங்களையெல் லாம் கடந்து பூரண செளக்கியத்தை யடைந்தேன். குழந்தையும் சோப் முதலிய எதுவுமின்றி நல்ல கிலேடிைபி லிருந்தது. இதுவரை உடல் நலத்தில் அக்கரையின்றி யிருந்த நான் குழந்தைக்காகவாயினும் என் உடம்பை நல்ல முறை யில் பாதுகாக்க வேண்டியது அவசியம் என உணர்ந்து, அதன்படி நடந்துவந்தேன். குழந்தையின் அழகிய வதனம் என் மன நிலையைப் பெருமாறுக லடையச் செய்துவிட்ட தென்றே சொல்லவேண்டும். உலக பாசம் என்னை மறு படியும் பற்றிவிட்டது என்று கூறினல் மிகையாகாத். ன்னது புண்பட்ட மனதுக்கு என் அருமைக் குழந்தையின் 260 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

களங்கமற்ற முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது பெரிய ஆறுதலாயிருந்தது. குழந்தையைப் பாராட்டுவதிலும், சீராட்டுவதிலும் என் கவன முழுதுஞ் சென்றுகொண் டிருந்ததால், என் துன்பத்தையெல்லாம் மறந்திருந்தேன். ஆனல் சில சமயங்களில் குழந்தை அம்மா! அம்மா!" என்று மழலை மொழியால் கூப்பிட்டுக்கொண்டே என்னை நோக்கித் தவழ்ந்து வருகையில் எனக்குத் துக்கம் மிகுவ துண்டு. ஏன்? அம்மா' என அழைக்கும் என் அருமைக் குழந்தை நாளே அப்பா' என்று யாரை அழைக்கும்: அதற்க் அறிவு வந்த காலத்தில், அம்மா! என் அப்பர் எங்கே?' என்று கேட்டால் நான் என்ன பதில் சொல் வேன்? உன் தகப்பன் கொலை பாதகன் துரோகி நீ வயிற்றிலிருக்கும்போதே என்னே எமாற்றி நடுத்தெருவில் அலேய விட்டுவிட்டான்” என என் கதையை அளந்தால் அது சமாதான மடையுமா?-என்னேயுங் குழந்தையையும் பார்க்கும் பிறர், 'உன் கணவன் எங்கே? இக்குழந்தையின் தகப்பன் எங்கிருக்கிருர்?' எனக் கேட்பின் நான் எவ்வாறு தலே குனியாது பதில் சொல்ல முடியும்? என்றிவ்வாறெல் லாம் நினைவுண்டானல் என் கேவல கிலேமைக்காக கண்ணிர் விட்டுக் கதருமலிருக்க முடியுமா? இந்து சமூகக் கட்டுப்பாட் டின்படி எனது நெறிகெட்ட வாழ்க்கை தூய்மையடையப் பரிகாரங் தேட முடியாதாகையால், நடந்ததைப்பற்றி கினைந்து வருந்துவதில் பயனில்லை எனக் கண்டு மனம் தேறினேன்.

குழந்தைக்கும் ஒரு வயது பூர்த்தியாயிற்று. ராஜம் மாள் எனது குழந்தைக்குக் குமுதவல்லி என்ப் பெயரிட் டார். அவர் என்னிடமும் குழந்தையிடமும் பிரியமா யிருந்தாா; ஆயினும், சமீபத்தில் சிலகாலமாக, அவரது நடத்தையில் எனக்குச் சந்தேக மேற்பட்டது. அவரிடம் ஜன சமூகத்தை விட்டு வெளியேற்றம் 261

யாராகிலும் ஆடவர்கள் வந்து பேசிக்கொண் டிருக்கும் போது, அந்தம்மாள் காரிய மீெதுவு மின்றியே என்னைக் கூப்பிடுவதும் எனக்கு விரும்பமில்லையெனத் தெரிந்தும் அவர்களுக்கு என்ன அறிமுகஞ்செய்து பேச வைப்பதும் அவர்களைப் பற்றி என்னிடம் பிரமாதமாய்க் கூறுவதுமா யிருந்தார். அவ்வாடவர்களில் சிலர் என்னேக் காமக் குறிப் போடு நோக்கிச் சம்பந்தமில்லாத வார்த்தை யெல்லாம் பேசலாயினர். நான் அவ்விடத்தைவிட்டு அகன்றதும், அந்தம்மாள் அவ்வாடவர்களோடு இரகசியம் பேசலானுர். இந்தம்மாளது அந்தரங்க நோக்கம் ஒரு நாள் எனக்குக் தெரிந்துவிட்டது. என் அழகைக் கண்டு ஆடவர் பலர் மோகங்கொண்டலைவதாகவும், அவர்களில் பணக்காரரா யுள்ளோர் எனக்காக எவ்வளவு பணம் வேண்டுமானுலுங் கொடுப்பார்க ளென்றும், ஆகவே, என்ன விபசாரத் தொழிலுக்குப் பக்குவமாகப் பழக்கிப் பொருள் வரு வாய்க்கு இடம்தேட இதுதான் நல்ல சந்தர்ப்பமென்றும் அந்தம்மாள் வேலைக்காரக் கிழவரிடஞ் சொல்லிச் சதியா லோசனை செய்துகொண்டிருந்ததை மறைவிலிருந்து அறிந்த தும் நான் திடுக்கிட்டேன். எனக்கு உபகாரஞ் செய்த அம்மாளே அபகாரஞ் செய்யவும் கருதிவிட்டால், வேறு நான் என்ன செய்வது? எனவே, இனி இங்கு இருந்தால் மோசந்தான் என எண்ணிக் கைக் குழந்தையோடு யாரு

மறியாமல் வெளிப்பட்டேன்.

புகலிட மறியாது பல நாள் கரைச் சுற்றிப் பல இடங்களிலும் அலேந்தேன். நான் அணிந்திருந்த சாதாரண சிறு சிறு நகைகளை விற்று அப் பணத்தைக்கொண்டு சில நாட்கள் பசிப்பிணியைப் போக்கி வந்தேன். கடைசியாக என் நிலையைக் கண்டு மனமிரங்கிய கனவான் ஒருவர் சிபார்சு செய்து திருவொற்றியூரிலுள்ள பெண்பாடசாலை 262 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

யொன்றில் என்னே உபாத்தியாயினியாக்கி வைத்தார் அதில் வரும் வருவாயைக் கொண்டு ஒரு சிறு விட்டில் குடியிருந்து என் வாழ்க்கையை நடத்தி வந்தேன். எங்கு போனலும் - பள்ளிக்கூடத்துக்குக்கூட குழந்தையைத் தூக்கிக்கொண்டு திரிந்தேன். இதைக் கண்டு என் சகா உபாத்தியாயினிகள் கேவிகூடச் செய்வதுண்டு. இதை யெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை.

இங்ஙனமிருக்க, ஒரு நாள் எங்கள் பள்ளிக்கூடத்தை கல்வியதிகாரி யொருவர் பார்வையிட வந்தார். பரீrை, முடிந்ததும் அன்று மாலே நான் வீட்டுக்குப் போன சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு ஆள் வந்து என்னேக் கல்வியதி காரி உடனே பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தான். நான் அவனுடன் சென்றேன். அதிகாரி தங்கியிருந்த விட்டை யடைந்ததும் அந்த ஆள் நானெடுத்துச் சென்ற குழந்தை யைத் தான் வைத்திருப்பதாக வாங்கிக்கொண்டான். நான் உள்ளே சென்றதும், அவ்வதிகாரி எனக்கு இல்லாத உப சாரமெல்லாஞ் செய்து பின்னர் ஏதேதோ தாறுமாருகப் பிதற்றினர். அவர் என்னழகில் மயங்கிவிட்டதாகவும், அவர் விருப்பத்தைப் பூர்த்தி செய்தால், உடனே என்னேத் தலைமை உபாத்தியாயினி யாக்கிச் சம்பளத்தை உயர்த்தி விடுவதாகவும், இணங்காவிடில் என்மீது கு |ற்றஞ் சாட்டி உடனே வேலையிலிருந்து நீக்கிவிட முடியுமென்றும் நயமா கப் பயமுறுத்தித் தம் தீய வெண்ணத்தை வெளியிட்டார். எனக்கு ஆத்திரம் பொங்கியது. எனினும், அதை யடக் கிக்கொண்டு, அவர் விருப்பப்படி நடக்கத் தடையில்லை யென்றும், அன்று ஒரு அவசரவேலை யிருக்கிறதென்றும் சாக்கு போக்கு கூறி அக்காமப் பித்தனிடமிருந்து தப்பி வெளிவந்தேன். -. ஜன சமூகத்தைவிட்டு வெளியேற்றம் 263.

வேலையை ராஜிநாமா கூடச் செய்யாமல் மறுநாளே அவ்விடத்தைவிட்டு குழந்தையுே டு தெற்கு நோக்கி கடக் தேன். கையிலோ செல்லாக் கரிசுகூட இல்லை. இங்கிலயில் பல நாட்கள் குழந்தையும் நானும் பட்டினியால் வாடி னுேம். யாரிடமாயினுஞ் சென்று யாசித்தாலன்றி வயிறு பிழைக்க முடியாது. பிச்சை யெடுத்துண்டு உயிர் வாழ நான் விரும்பவில்லை. இனி எங்கு சென்ருலும் யாரை யடுத் தாலும் என் அழகினல் எனக்குக் கட்டாயம் ஆபத்துதான் சேருமென அறிந்தேன். எனவே ஒருவர் உதவியையும் காடாது கால் நடுங்கும்வரை நடப்பதும், சோர்வு நீங்கும் வரை வெறு வெளியில் படுப்பதுமா யிருந்தேன். வற்றிய முலையைப் பற்றியிழுத்து வாயில் பால் வராததைக் கண்டு குழந்தை என் முகத்தை நோக்கி யழ நான் அதன் வாடிய முகத்தைப் பார்த்துக் கண்ணிர்விட்டுக் கதறி யழுவதுமா யிருந்தேன். -

இங்ங்னம் பட்டினியோடு பலநாள் நடந்து நகரை விட்டு வெகுதாரம் வந்துவிட்டேன். பல கிராமங்களைக் கடந்து திருச்சியை யடைந்தேன். அந்தோ அங்கு தான் என் அருமைக் குழந்தை பகிக்கொடுமைக் கிரையாகியது. அகதியான எனக்கு ஆதரவா யிருக்குமென எண்ணிய என் கண்மணி குமுதவல்லி ஒன்றரை வயதுகூட முற்றுப்பெருத: நிலையில் வயிற்றுக் கொன்றுமின்றி இறந்தது எனக்குச் சகிக்கக்கூடாத துன்பத்தைக் கந்தது. குழந்தையின் பிரே தத்தைப் புதைக்கக்கூட வழி தெரியவில்லை. என் மனங் குழம்பியது. இக்குழந்தையின் உடலே ஓரிடத்தில் கிடத்தி விட்டு வெறிபிடித்தவள்போல் ஒடினேன். எனக்கு உண் மையிலேயே சித்தப்பிரமை யுண்டாய்விட்டது. அன்றிருந்து பசியாவது தாக்கமாவது இல்லை. ஒடியும் ஆடியும் கண்ட இடத்தில் சுற்றி யலந்து கிரிந்து கடைசியாக இப் பொதிய மலையை யடைந்தேன். இங்கு வந்து சில நாட்களான பிறகே என் அறிவு நிலை தெளிந்தது. கொடிய மிருகங்களும் விஷ ஜந்துக்களும் நிறைந்த, மலைப்பிரதேசமாயினும், இவ்விடம் எனக்கு நல்ல வாசஸ்தலமா யமைந்துவிட்டது. மிருகங்களும் பாம்பு முதலியவைகளும் கொடிய தன்மை வாய்ந்தனவென்று கூறுவது அடாது. பகுத்தறிவுள்ள மனிதர்களைக் காட்டிலும், இவை கொடியன வல்லவென மறுபடியும் வற்புறுத்திக் கூறுவேன். மனிதர்களிட மிருப்பதுபோல், இவைகள்பால், கபடம், சூழ்ச்சி, பொறாமை, துரோகம் முதலிய கொடுங் குணங்கள் சிறிதும் இல்லை. நம்மால் துன்பமில்லை யெனத் தெரிந்தால் கொடிய புலி பாம்புகூட நம்மை யொன்றுஞ் செய்வதில்லை நாம் அவைகளிடங் கருணையாக நடந்துகொண்டால். அவை நம்மிடம் நன்றியறிதலா யிருக்கின்றன. இச் “சுகநிலையத்”துக்கு. வந்த பின்னர், என்னைப் பிடித்திருந்த துன்பங்களெல்லாம் அறவே அகன்று விட்டன. எனக்கு இப்போது ஒருவித கவலையில்லை. பசியெடுத்தபோது பழம் முதலியவைகளைப் பறித்துண்கிறேன். தாகமெடுத்தால் தண்ணீர் அருந்துகிறேன். மற்ற சமயங்களில் சுகமாய் இம்மலைப் பிரதேசத்தைச் சுற்றி வந்து சுகமாகக் காலங்கழித்து வருகிறேன். இதுதான் எனது வாழ்க்கை வரலாறு” எனக் கூறி முடித்தாள் புவன சுந்தரி.

நரன் விநோதமும் துன்பமும் நிறைந்ததான அவளது வாழ்க்கை வரலாற்றைக் கேட்டு ஆச்சரியத்தர்ல் வாய் பிளந்து நின்றேன்.


முற்றிற்று.


ஜீவா தீட்டிய
எழுத்து ஓவியங்கள்‌

உயிரோவியம்‌

இதுகாறும்‌ தமிழன்னையின் திருமேனியிலேயே கிடையாத ஒரு எழில்‌ வாய்ந்த ஆபரணம் என்றும்‌, இதுவரை எந்த கதாசிரியராலும்‌ காணாத முடிவு என்றும்‌, பல முறை படித்து இன்புற வேண்டிய கதை என்றும்‌ அறிஞர்கள்‌ இக்கதையின் சிறப்பைப் பாராட்டியிருக்கிறார்கள்‌. விலை‌ ௹. 1-8-0

யான்‌ ஏன்‌ பெண்ணாய்ப்‌ பிறந்தேன்‌?

இக்கதையில்‌ வரும்‌ கதாநாயகி காமாட்சியின்‌ சித்திரம்‌ தமிழ்ச் சமூகத்தில் நிலவி வரும்‌ வைதவ்யத்தின்‌ சித்திரமாகும்‌. விலை‌ ௹. 2-0-0

தாசி ரமணி

இந்த நவீனத்தை வாசிப்பவர்கள்‌ உள்ளத்தில்‌, சமூகச்‌ சீர்‌கேட்டுக்கு வித்தாகவுள்ள தேவதாசி முறையை உடனடியாக ஒழிக்க வேண்டும்‌ என்ற உணர்ச்சியை உண்டாக்கும்‌. கதைப் போக்கு அவ்வளவு ருசிகரமாக இருக்கிறது. விலை‌ ௹. 1-8-0

காதலனா? காதகனா?

கலாசாலை மகளிர்‌ சிலரின்‌ சீர்கெட்ட வாழ்க்கையும்‌, போலி நவ நாகரிகத்துக்கு அவர்கள்‌ பலியாகும்‌ கதியும்‌ இதில்‌ படம் பிடித்துக்‌ காட்டப்பட்‌டிருக்கிறது. விலை‌ ௹. 1-4-0

சீமாட்டி கார்த்தியாயினி

லியோ டால்ஸ்டாய் எழுதிய “அன்னா காரினென்னா”வை ஜீவா வெகு அழகாகத்‌ தமிழ்ப்படுத்தியிருக்கிறார்‌. விலை‌ அணா 14


ஆனந்த போதினி காரியாலயம்‌,
தபால்‌ பெட்டி நெ.167, சென்னை-1.