உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

மருமக்கள்வழி மான்மியம்

எனப் பிறிதொரு சாசனம் தெரிவிக்கின்றது. இரண்டாங் குலோத்துங்கன் காலத்தும், மூன்றாம் ராஜராஜன் காலத்தும், சோழரது ஏகாதிபத்தியத்துக்கு இந்நாடு உட்பட்டிருந்ததென்றும் சாசனங்கள் உணர்த்துகின்றன. இங்ஙனம் உட்பட்டிருந்தமையால் கோட்டாற்றிற்கு ‘மும்முடிச் சோழபுரம்’ என்றும் பின்னர் ‘சோழ கேரளபுரம்‘ என்றும், புதிய பெயர்கள் உண்டாயின. கன்னியாகுமரியில் தேவியைக் குறிக்க நேரிடும் சாசனங்களில் ‘ராஜராஜப் பாண்டிநாட்டு உத்தம சோழ வளநாட்டுப் புறத்தாய நாட்டுக் குமரிக் கன்னியா பகவதியார்‘ என வருகின்றது. நாஞ்சினாடு உத்தம சோழ வளநாட்டின் பிரிவாகவே ஒரு சாசனத்தில் (T.A.S. i, 163) கூறப்பட்டிருக்கிறது. சாசனங்களிற் காணும் நாட்டுப் பெயர்களுள் இந்நாஞ்சினாடு என்ற பெயரொழிய அதனோடியைந்த ஏனைப் பெயர்களெல்லாம் இப்பொழுது மறைந்துவிட்டன.

சோழ வம்சம் வலி குன்றியொழியவே, சேர அரசர்கள் மீண்டும் நாஞ்சினாட்டுப் பிரதேசத்தைக் கைப்பற்றியாளத் தொடங்கினர். இங்ஙனம் ஆளத் தொடங்கியது.கி.பி.15-ம் நூற்றாண்டின் முதற் பகுதியாயிருக்கலாமெனத் தோன்றுகிறது. சேர அரசர்கள் தங்கள் உரிமையை நாட்டியபோதிலும். பாண்டிய நாடு முதலியவற்றை ஆண்டு வந்த விஜயநகரப் பேரரசர்களின் பிரதிநிதிகளாலும் மதுரைப் பிரதேசத்தையாண்ட நாயக்க அரசர்களாலும் அடிக்கடி அல்லற்பட்டனர். படையெடுப்புக்கள் நிகழ்ந்த வண்ணமாயிருந்தன. நாஞ் சினாட்டுக்கும்