உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

9

30). இப்போரில் சேரனைக் காட்டகத்து வெருட்டி யோட்டி (செய். 37) அவனது தென்னாட்டை நெடுமாறர் கைக்கொண்டார் (செய்.239). இங்ஙனம் கொண்ட நாடு எவ்வளவு காலம் வரையில் மீண்டும் பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததென அறியக்கூடவில்லை. ஆனால் நாஞ்சினாட்டுக்கு இயற்கை அரணாக அமைந்த மலைத் தொடராலும் பிற இடையூறுகளாலும் பாண்டியர்களுக்குத் தாம் கைப்பற்றிய நாட்டைக் காப்பாற்றுதல் அரிதாயிருந்திருத்தல் வேண்டும். ஆகவே, அவர்களிடமிருந்து சேர அரசர்கள் தாமதமின்றி நாஞ்சினாட்டை மீண்டும் பெற்றனரென்றுதான் ஊகித்தல் தகும். 10-ம் நூற்றாண்டிலிருந்து 13-ம் நூற்றாண்டு இறுதியாகச் சோழ அரசர்கள் தென்னாட்டரசர்களில் தலைமை பூண்டனர்; அக்காலத்துச் சேர வமிசத்தினரிடமிருந்து சோழரிடம் நாஞ்சினாடு கைம் மாறியது. முதற் பராந்தகன், கேரளாந்தகன் என்னும் விருதுடைய முதல் ராஜராஜன்: இவர்களுடைய சாசனங்கள் நாஞ்சினாட்டில் பல இடங்களிலும் காணப்படுகின்றன. வீர சோழியம் இயற்றுவித்த வீரராஜேந்திர சோழன் (கி.பி.1062) கேரளனை வென்றதாக ஒரு சாசனங் கூறுகின்றது. முதற் குலோத்துங்கன் (கி.பி.1070-1118)

‘கன்னியுங் கைக்கொண்டு புனிதத் தென்னாட்டு
எல்லை காட்டிக் குடமலைநாட் டுள்ள
சாவேறு எல்லந் தனிவிசும்பு ஏற...
குறுகலர் குலையக் கோட்டாறு உட்பட
கெறிதொறும் நிலைகளிட்டு அருளி‘னன்