உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

மருமக்கள்வழி மான்மியம்

ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்குச்
சாதல் அஞ்சாய் நீயே
(139)

என இவனது வேந்தனையும் இவனையுங் குறித்து வரும் அடிகளால் அறியலாகும். இவ்வேந்தன் சேரன் என உரைகாரர் கூறுவர். ஆனால் 380ஆம் புறப்பாட்டு இவனைத் ‘தென்னவர் வயமறவன்’ என விசேடிக்கின்றது. ’தென்னவர்’ என்பது பாண்டியரையே சிறப்பாக உணர்த்துமாதலால், பாண்டியனே இவனது வேந்தனெனத் துணிதல் வேண்டும். ’சாதல் அஞ்சாய்’ என்ற தொடரை நோக்கும் போது, பிற்காலத்து அமைக்கப்பெற்ற ’சாவேறு, என்னும் வீரர் தொகுதியினரைப்போல் இவ்வள்ளுவன் சிறந்து மேம்பட்டவனெனக் கருதுதல் தக்கதாகலாம்.

சங்ககாலத்துக்குப் பின் சுமார் 250 ஆண்டுகளாக (கி.பி.650 வரை) நாஞ்சினாட்டுப் பகுதி சேரர்களது ஆட்சிக்குட்பட்டிருந்ததென ஊகித்தற்கிடமுண்டு. ஏனெனின், திருஞானசம்பந்த சுவாமிகளது காலத்தவரான நெடுமாறர் சேர அரசனோடு கோட்டாற்றிலும் விழிஞத்திலும் போர் செய்தனரெனப் பாண்டிக்கோவை அறிவிக்கின்றது. கோட்டாறு மதில் முதலியவற்றால் நன்கு காவல் செய்யப்பட்டு ஒரு தகரமாக முற்காலத்தில் இருந்தது. அங்கே ஒரு பெரும் போர் நிகழ்ந்தது. அதனருகில் விழிஞத்தில் கடலிடையே போரொன்றும் நிகழ்ந்தது. ’விண்டார்பட விழிஞக் கடற் கோடியுள்’ என்று கூறப்படுகின்றது ([1]இறை, உரை, செய்.


  1. இங்கே காட்டுவது பவானந்தர் கழகப் பதிப்பு.