உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

7

எனவும் வரும் அடிகள் குமரியைச் சார்ந்த நாட்டைச் சேரர்கள் வென்று அடிப்படுத்தினர் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

நாஞ்சில் என்ற பெயரும் சங்ககாலத்தில் வழங்கி வந்த தொன்றேயாம். புறநானூற்றிலே.

உயர் சிமைய உழாஅ நாஞ்சிற் பொருந(139)

என வருகின்றது. இங்கே ‘உழாஅ நாஞ்சில்’ என்பது ’பாயா வேங்கை’, ’பறவாக் கொக்கு’ என்பனபோல, உழுதல் செய்யாத நாஞ்சில் அஃதாவது, நாஞ்சில் என்னும் மலையெனப் பொருள் படுகின்றது. இது மலையேயாம் என்பது ’உயர் சிமைய’ (உயர்ந்த சிகரத்தையுடைய) என்ற அடையால் உணரலாகும். இப் பழம் பெருநூலின் உரைகாரரும் ’நாஞ்சில் என்னும் பெயரையுடைய மலைக்கு வேந்தே’ என்று இவ்வடிக்குப் பொருள் கூறினர். நாஞ்சில் மலையைத் தன்னகத்தே கொண்ட நாடு ’நாஞ்சில் நாடு’ ஆகும். இந்நாட்டிலே வீரத்தாற் சிறந்து விளங்கிய வள்ளுவன் என்னும் பெயருடையான் ஒருவன் சங்ககாலத்தில் வாழ்ந்தனன். இவனைக் குறித்துப் புறநானூற்றில் ஐந்து செய்யுட்கள் (137,138,139.140, 380) உள்ளன. இவற்றுள் நான்கு செய்யுட்களில் இவன் ’பொருநன்’ என்றே

சிறப்பிக்கப்படுகிறான். இவன் பெருங்கொடை வள்ளலாகவும் விளங்கியவனென்பது பாணாற்றுப்படையாகப் பாடப்பெற்ற 138ஆம் செய்யுளால் தெளியலாம். இவன் ஒரு வேந்தனுக்குப் படைத் துணையாய் அமைந்தவனென்பது,