உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

மருமக்கள்வழி மான்மியம்

பரவுகவென அப்பாண்டியனைக் காரிகிழார் என்ற புலவர் பாடுகிறார் (புறம் 6). பாண்டியனுக்கு உரியதாகவே குமரியைத் அடுத்துள்ள பஃறுளியாறுங் கூறப்பட்டுள்ளது (புறம் 9). தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் குறித்து,

தென்குமரி வட பெருங்கல்
குணகுட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
(70-72)

என மதுரைக் காஞ்சி என்ற நூல் கூறுகிறது. இங்கே ‘தொன்று மொழிந்து‘ என்பது ‘மிகவும் பழங்காலந் தொட்டுத் தொடர்புடையராயுள்ளமையைப் பாராட்டிச் சொல்லி‘எனப் பொருள்படுதலாலே, பாண்டியர்களுக்கு அநாதியாகவே தென்குமரியைச் சார்ந்த நாடு உடைமையாயிருந்ததென்பது விளங்கும்.

பாண்டியர் பரம்பரைக் குரியதாயிருந்த இந்நாடு சங்ககாலத்தில்தானே சேரர்களால் பலமுறை அபகரிக்கப்பட்டதெனப் புறநானூற்றாலும் (17) பதிற்றுப் பத்தினாலும் அறிகிறோம். பிற்குறித்த நூலில்,

ஆரியர் துவன்றிய பேரிசை இமையந்
தென்னங் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே
(11)

எனவும்,

வடதிசை யெல்லை இமைய மாகத்
தென்னங் குமரியொடு ஆயிடை அரசர்
முரசுடைப் பெருஞ்சமந் ததைய ஆர்ப்பெழச்
சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த
போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ
(43)