உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொன் விலங்கு


போடுகிறார்கள் அல்லவா ? இக்கூக்குரல் நியாயம் என்பதற்கு ஏதாவது உண்மை உண்டா? இதுவரையில் கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளி விவரங்களைப் பார்க்கிறவர்கள் யாராவது பிராமணருக்கு வசதி மறுக்கப்படுகிறது என்று யோக்கியமாக சொல்ல முடியுமா ?

மெடிகல் காலேஜ், இன்ஜினீரியங் காலேஜ்களில் பிராமணருக்கு இடம் மறுக்கப்படுகிறது என்று தான் ரொம்ப ரொம்ப பலமாக கூக்குரல் போடுகிறார்கள். அந்த காலேஜ்களைப் பற்றிய புள்ளி விவரங்களை கவனித்தால் அவற்றிலுள்ள மொத்த இடங்களில் 25 சதவிகிதம் பிராமணருக்கு கொடுக்கப்படுகிறது என்பது நன்கு விளங்கும். இவ்விதம் பிராமணருக்கு ஒதுக்கியளிக்கப் பட்டிருக்கும் இவ்வளவு ஸ்தானங்களில் பாதி கூட வேறு எந்த சமூகத்திற்கும் இல்லை என்பதும் கவனிக்கவேண்டியதாகும்.

கல்வித்துறையில் இந்திய கிறிஸ்தவர் சமூகம் முன்னேற்றமுள்ள சமூகம் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். இம்மாகாணத்தின் மொத்த ஜனத்தொகையில் 3.7. சத விகிதத்தினர் இந்திய கிறிஸ்தவர். ஆனால் பிராமணர் 2.7 சத விகிதத்தினரே, எனினும் காலேஜ்களில் பிராமணருக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஸ்தானங்களில் மிகக் குறைவான ஸ்தானங்களையே இந்திய கிறிஸ்தவர் பெற்றிருக்கிறார்கள். மெடிகல் காலேஜ்களில் படிக்கும் மாணவர்களில் 16.6 சத விகிதத்தினரே கிறிஸ்தவர்கள். ஆனால் 24.4 சத விகித மாணவர்கள் பிராமணர்கள்.


88