உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/அத்தியாயம் 25

விக்கிமூலம் இலிருந்து

லைவாணி மூன்று அறைகளையும் பெருக்கி முடித்து விட்டு, கையில் துடைப்பத்தோடு வராண்டாவிற்கு வந்தாள். குண்டும், குழியுமாய், தூசியும், தும்புமாய் உள்ள தரையைக் கவனிப்பதற்கு முன்பு, மேல் கூரையையும், நான்கு சுவர்களின் முக்கடிகளையும் துப்புரவு செய்ய வேண்டும் போல் தோன்றியது. அவற்றில் சிலந்தி வலைகளும், தூசி, துப்பட்டைகளும் இன்னொரு மருத்துவ மனை போல் தோன்றியது. அண்ணாந்து பார்த்தவள், ஒட்டடைக் கம்பைக் கொண்டு வந்து, பாதங்களின் பின் பகுதியைத் தூக்கி, கால் விரல்களில் நின்றபடி, அவற்றைச் சாடினாள். அப்படியும் எட்டாத வலைகளை, இளக்காரம் செய்த கருந்திட்டுக்களை, இரண்டு கையாலும் ஒட்டடைக் கம்பைப் பிடித்தபடியே, குதித்துக் குதித்து சாய்த்தாள். இன்னும் எட்டாத இடத்தைத் தொட்டுத் துலக்குவதற்காக, ஒரு முக்காலியைக் கொண்டு வந்து, அதில் ஏறி, வெண் சாமரம் போலான அந்த ஒட்டடைக் கம்பைத் தூக்கிய போது, அவளையும் அந்தக் கம்பின் அடிவாரத்தையும் சேர்த்து, ஒரு கரம் பிடித்தது. அப்படி பிடித்த கையோடு கீழே குனிந்து பார்த்த கலைவாணியிடம், சந்திரா சாடினாள்.

“நான் ஒன்னைத் தோழியாய்த்தான் கூட்டி வந்தேனே தவிர… வேலைக்காரின்னு இல்ல… என் பாவத்துக்கு கங்கையில் மூழ்கிறதுக்குப் பதிலாய்… அந்தக் கங்கையையே இங்கே கொண்டு வந்தது மாதிரி… கொண்டு வந்திருக்கேன்…”

“அப்போ… கங்கை, வீட்டைக் கழுவி விடுறதுல தப்பில்லயே… என்னை விடுங்க.. இன்னைக்கு… தரையைக் கழுவி விடணும். கழுவாமல் துடைக்கிறது, டாக்டர் முஸ்தபா காப்பர்-டியை எடுக்காமல், ஆபரேஷன் செய்தது மாதிரி…”

“ஒன் கிட்ட பேசிப் பிரயோசனம் இல்ல… எம்மா இங்கே வாங்கம்மா…?”

சமையலறையில், தட்டு முட்டுச் சத்தங்களை உண்டாக்கிக் கொண்டிருந்த அம்மாக்காரி ராசலட்சுமி, ஈரக் கரங்களை முந்தானைக்குள் விட்டுத் துடைத்தபடியே வந்தாள். அன்று, முதல் தடவையாகப் பார்ப்பவர்களுக்கு, அவள் மொக்கையான கையை மறைத்து வைத்திருப்பது போல் தோன்றலாம்…

“ஏம்மா… இந்தப் பொண்ண வேலை செய்ய விடுறீங்க..”

“நல்லா இருக்கே கூத்து… நான் எதுக்கு வேல வாங்குறேன்”

“வாங்குறீங்கன்னு சொல்லல… இப்படி அரக்கப் பரக்க வேலை செய்யும் போது… நீங்க தடுக்கலாமே…”

ராசலட்சுமி, மகளையும், முக்காலியில் வளைந்து நின்ற கலைவாணியையும் ஏற்ற இறக்கமாய் பார்த்தாள். மகளை எரிச்சலாகவும், மற்றவளை எரிப்பது போலவும் மாறி, மாறிப் பார்த்தாள். கலைவாணி, சந்திராவின் மோவாயைப் பிடித்தபடி, ஏதோ சொல்லப் போனாள். அதற்குள் ராசலட்சுமியம்மா, எக்காளமாகக் கேட்டாள். மகளைத்தான்.

“இப்பல்லாம்… ஒன் கண்ணுக்கு நான் ஆகாமப் போயிட்டேன்… நானும் பார்த்துட்டுத்தான் இருக்கேன்… பத்து நாளாவே ஒன் பேச்சு, ஒரு மாதிரி தான் இருக்குது”

ராசலட்சுமி, மீண்டும் சமையலறைக்குள் போய் விட்டாள். தட்டுக்களும், தம்ளர்களும், ஒன்றோறொடன்றாய் சண்டை போடும் சத்தம். கரண்டியும், செம்புகளும் கராத்தே போடும் ஒசை… பேயோசை… பெருவோசை..

சமையலறைக்குள் கோபமாய்ப் போகப் போன சந்திராவை, கலைவாணி கீழே குதித்துப் பிடித்துக் கொண்டாள். ஒருத்திக்கு ஒருத்தி அனுதாபம் தெரிவிப்பது போல், சிறிது நேரம் தலை குனிந்து நின்றார்கள். டாக்டரம்மாவின் தாய், கடந்த எட்டு நாட்களாகவே, கலைவாணியை சாடைமாடையாகத் திட்டுகிறாள்… மகள் வந்ததும், பெட்டிப் பாம்பாகிறாள். அவள் போனதும், வட்டியும், முதலுமாய் வாய்க்கு வந்தபடி, இவளுக்காக, தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் பேசுகிறாள். ‘இது என்ன சத்திரமா சாவடியா… கரையான் புத்தெடுக்க கருநாகம் குடியேறிச்சாம்…’

சு.சமுத்திரம் 231

கலைவாணி, சந்திராவை நினைத்து, அவள் அம்மாவைக் கழித்தாள். பிறகு மீண்டும் முக்காலியில் ஏறப் போனாள். சந்திரா, அந்த முக்காலியை தூக்கிப்பிடித்தபடியே கேட்டாள்.

‘நீ என்தங்கைமாதிரியம்மா... வேலைக்காரி இல்ல’

‘தங்கை தான் இந்த மாதிரி வேலைகளை செய்வாள். வேலைக்காரி எங்கே செய்வாள்?”

“எங்கம்மா... பேசுறதை பெரிசாஎடுத்துக்காதம்மா... இது மென்டல்...”

‘நம்ம அம்மான்னு சொல்லுங்க”

“அப்படின்னா...அக்காவும், தங்கையோடவீட்டு வேலையை கூடமாட செய்யலாம் பாரு’

கலைவாணி தடுக்கும் முன்பே, சந்திரா கைபிடித்த முக்காலியை கீழே வைத்துவிட்டு, அதில் ஏறிநின்றாள். கீழே நின்றவளிடம் இருந்து, ஒட்டடைக் கம்பை வலுக்கட்டாயமாக வாங்கப் போனாள். இடையிடையே, சமையலறை வாசல்வழியாக எட்டிப்பார்த்தராசலட்சுமி, இனிப் பொறுத்தது போதும் என்பது போல கூடத்திற்கு வந்து கத்தினாள்.

‘ஏய்... சந்திரா கீழே இறங்கு.. ஒனக்கு ஏன் இந்த தலையெழுத்து... கலைவாணி, ஒனக்காவது புத்தி வேண்டாம். ஆஸ்பத்திரி, நோயாளியின்னு அல்லாடுறாள். வீட்லதண்டச்சோறாசாப்பிட்டுட்டு இருக்காள்?”

கீழே குனிந்து துடைப்பத்தை எடுக்கப் போன கலைவாணி, துடைப்பத்தையும் எடுக்காமல், மேலேயும் நிமிராமல், இடைப்பட்டு நின்றாள். அம்மாவின் பேச்சில் உள்ள உட்பூச்சை புரிந்து கொண்ட சந்திரா, ஏறி நின்ற முக்காலி அங்கும் இங்குமாய் ஆடும்படிக்கத்தினாள்.

‘எம்மா... ஒங்களுக்கு கொஞ்சமாவது மேனேர்ஸ் இருக்குதா...? மொதல்ல, பிறத்தியார் மனசை நோகடிக்காம பேசுறதுக்கு தெரிஞ்சிக்கணும்”.

டாக்டரம்மாவின் தாய்க்காரி, முணுமுணுத்தபடியே, மீண்டும் சமையல் வாசம் செய்யப் போய்விட்டாள். சந்திரா, கலைவாணியை நோட்டம் போட்டுப் பார்த்தாள். அவளோ, தான் இயல்பாக இருப்பதாய் காட்டிக் கொள்ளவோ என்னவோ, ஒரு சிலந்தி வலையை நான்கைந்து பூச்சிப் பிணங்களோடு, துடைப்பத்தால் கீழே தட்டிப் போட்டாள். ஆணி கழன்ற சுவர்ப் பொந்துகளில் அப்பிக் கிடந்த பூச்சிகளை, கீழே தட்டிவிட்டாள். ஆனாலும் அவற்றை, துடைப்பத்தில் பின் முனையில் அடித்துக் கொல்ல யோசித்தாள்... 232 பாலைப்புறா

இரண்டு பெண்களும் பம்பரமாய் இயங்கினார்கள். சந்திரா பெருக்கிய தரையை, கலைவாணி ஈரத்துணியால் துடைத்துவிட்டு, அந்தத் துணியை கசக்கிப் பிழிவதற்காக, வீட்டுக்குப் பின்பக்கமாய் உள்ள கிணற்றடிக்குப் போய்விட்டாள். சமையலறையில் உள்ள வாஷ் பேசினில் கை கழுவிக் கொண்டிருந்த சந்திரா, அழைப்பு மணி சத்தம் கேட்டு அம்மாவைப் பார்த்தாள். அவளோ, பதிலுக்கு ஒரு தகர டப்பாவை தலைகீழாய் கவிழ்த்து, தட்டினாள்... சந்திராதான், அந்த அறையில் இருந்து விடுபட்டு, இடுப்பில் செருகிய புடவை முனையை இழுத்துவிட்டு, அதைக் கால்வரைக்கும் பரப்பிவிட்டு கதவைத் திறந்தாள்.

“ஹாய் சங்கர்”

சந்திரா, சமையலறைப் பக்கமாய் திருட்டுத்தனமாய் ஒரு தினுசான பார்வையை வீசிவிட்டு, சங்கரன் தலையில் ஒரு குட்டு போட்டாள். பிறகு, அவன் கையில் இருந்த சூட்கேசை வாங்கி வைத்துக் கொண்டு, அந்த தாய் மாமா மகனும்தன்னை அப்படிக் குட்ட வேண்டும் என்பதுபோல்தலையைக் குனிந்தாள். ஆனால், அவனோ எந்தக் கையால் குட்ட வேண்டுமோ, அந்தக் கையின் பெருவிரலை ஆட்டினான். இப்போது அதில் பிளாஸ்டருக்குப் பதிலாய் ஒரு சின்னக் கட்டுப் போட்டிருந்தது. சந்திரா, பழைய கதையை மறந்து கேட்டாள்.

‘கையில் என்னத்தான்?’

‘என்ன இது.. தெரியாதது மாதிரி கேட்கறியே...? அதுதான் அதான் கலையோ கொலையோ...’

‘என்னத்தான் நீங்க. துருபைப் போய்துரணாய் ஆக்கிறிங்களே...” ‘துரும்பாய் இருந்தால்... இந்நேரம் ஆறி இருக்கணுமே’

‘நீரிழிவாய் இருந்தாலும் ஆறாது. இப்படிக் கட்டுப்போட்டு... காற்று போகாட்டாலும் ஆறாது. அப்படியே வந்திருந்தாலும், நிச்சயம் இது அவளாலயோ அதாலயோஆறாமல் இருக்காது”

‘பார்த்தியா... பார்த்தியா... நீயே... அப்படியே வந்தாலும் முன்னு இக்கன்னா போட்டு பேசுற பாரு...’

‘அய்யோ... ஒங்க கிட்டே ஒரு பேச்சுக்கு சொன்னேன். இப்பவும் டாக்டர் என்கிற முறையில் சொல்றேன். ஒங்களுக்கு அது வராது... வராது... வரவே வராது.. போதுமா?”

‘டாக்டருக்கு டாக்டரே... குழப்புறீங்க... மெட்ராஸ் நர்சிங் ஹோம் டாக்டர் நிச்சயமாய் வந்திருக்குமுன்னு சொல்றார்” சு.சமுத்திரம் 233

‘சரி... அசோகன் ஆஸ்பத்திரியிலே டெஸ்ட் செய்வோம்’

‘அய்யோ... அவனா... இதுதான் சமயமுன்னு, இருக்குன்னு சொல்வான். சரியான வில்லன்...’

‘இதுக்கே ஒங்களை நான் அடிக்கணும். சரி பரவாயில்ல... பேசாம மாவட்ட மருத்துவமனையில டெஸ்ட் செய்திடுவோமா...?”

‘'வேண்டாம்... எனக்குப் பயமா இருக்குது. நீ சொல்றதைப் பார்த்தால், ஒனக்கே சந்தேகம் வந்துட்டு. எனக்கும், இருந்தாலும் இருக்கலாமுன்னு சந்தேகம் வந்துட்டு...’

‘அய்யோ... கடவுளே... ஒங்களை நான் எப்படித்தான்காதலிச்சேனோ... சரி... எந்தப் பொண்ணும், அவள் உயிருக்கு உயிரான காதலியாய் இருந்தாலும், எந்த எய்ட்ஸ் நோயாளியையும் கட்டிக்கமாட்டாள். காரணம், கல்யாணம் என்கிறது சந்தோஷத்திற்காகவும், சந்தோஷப்படுத்தவும் செய்கிற ஏற்பாடு... ஆனாலும், நான் இப்போ ஒங்களுக்கு ‘ஹெச்.ஐ.வி. இல்லை என்கிறதை நிரூபிப்பதற்காவது, உடனடியாய் ஒங்களை கல்யாணம் செய்யத் தயார். இங்கேயே ரிஜிஸ்டர்மேரேஜ் செய்யலாமா... இல்லாட்டி... இன்னம் பதினைந்து நாளையிலே மெட்ராஸ்ல ஜாம் ஜாமுன்னு வச்சுக்கலாமா? எதுக்கும் நான் ரெடி... நீங்க ரெடியா...?”

சங்கரன், பேசாமல் நின்றபோது, அதுவரை சமையல் அறையில் அவர்கள் பேசுவதை முகம் சுழித்துக் கேட்டுக் கொண்டிருந்த ராசலட்சுமிக்கு மகிழ்ச்சி, வேகமாக நடந்துவந்தாள். அண்ணன் மகன் வழக்கம் போல் தன்னை சமையலறையில் வந்து, கைகளைப் பற்றிக் குசலம் விசாரிக்க வேண்டும் என்று நினைத்து அங்கே நின்ற அந்தம்மா, அப்புறம் வாசலுக்கு வந்து, இப்போது அவர்கள் பக்கமாய்ப் போய்விட்டாள். போனதும் போகாததுமாய், அண்ணன் மகனைப்பார்த்துக் கேட்டாள்.

‘சந்திரா சொல்றதுதான் சரி... ஆனால் திருட்டுத்தாலி கட்டுறது மாதிரி.. ரிஜிஸ்டர் தாலி வேண்டாம். எங்கண்ணாவுக்கு, இப்பவே லட்டர் போடுறேன். அடுத்த மாதம் வச்சிக்கலாம். மெட்ராஸ்லே எல்லாரும் சுகந்தானே...’

“சுகத்துக்கு என்ன... நல்ல சுகம்...”

‘கையில என்னது...’

‘நகச்சுத்தியாம்மா... கட்டே தேவையில்ல... எந்த டாக்டரோ, நர்சிங் ஹோம்ல நல்லா. இவரை ஏமாத்திட்டான்...”

‘சரி... ரூமுக்குள்ளே போய் பேசுங்களேன்..." 234 பாலைப்புறா

அந்த மூவரும், கூடத்தில் இருந்து சமையல் கட்டுக்கு அப்பால் உள்ள அறைக்குள் போகப் போனபோது, கலைவாணி பின் பக்கத்துக் கதவை மூடிவிட்டு, அவர்கள் கண்ணில் பட்டாள். சங்கரனைப் பார்த்து, தன்னையறியாமலே பின் வாங்கினாள். பிறகு, நின்ற இடத்திலேயே நின்றாள்... சங்கரனும், அவளைத் திடுக்கிட்டுப் பார்த்தான். தீவிரமாகப் பார்த்தான். பிறகு சந்திராவைப் பார்த்து, கலைவாணியை மோவாயால் சுட்டிக் காட்டி'இவள். இவள் என்று இழுத்தான். ஆள்காட்டிப் பெருவிரலையும் பார்த்துக் கொண்டான். சந்திரா...திட்டவட்டமாகவே பேசினாள்...

‘அதே கலைவாணிதான். என்னால சீரழிஞ்சு போனவள்...” சங்கர், அத்தையைப் பார்த்தான். ‘பார்த்தீங்களா அத்தே ஒங்க மகளை என்று சொல்லாமல் சொல்வது போல் பார்த்தான். கலைவாணியை முறைத்தான். பெருவிரலை, இன்னொரு கையால் பிடித்தான். கோபங் கோபமாய்க் கேட்டான்.

‘ஒரு எய்ட்ஸ் நோயாளியை எப்படி நீவீட்டுக்குள்ளே சேர்க்கலாம்?”

‘ஏன் சேர்க்கப்படாது...?”

‘முதல்ல...ஒனக்கு ஆபத்து... அப்புறம் ஒங்கம்மாவுக்கு ஆபத்து... அதோட எனக்கும் ஆபத்து...’

‘ஒரு டாக்டருக்கே நீங்க சொல்லிக் கொடுக்கீங்களா...”

‘எவளால நான் பாதிக்கப்பட்டனோ, அவளை நீ வீட்டுக்குள்ளே சேர்த்திருப்பது, என்னை இன்சல்ட் செய்யுறது மாதிரி’

‘சரி... அப்படியே வச்சிக்கங்க.. அப்புறம்?”

‘எய்ட்ஸ். நோயாளி கலைவாணியா... இல்ல நானா. ரெண்டு பேர்லே ஒருத்தரை நீதான் தீர்மானிக்கணும்’

‘மனதுல இருக்கிற எய்ட்சை விட ஒடம்பிலே இருக்கிற எய்ட்ஸ் எவ்வளவோ தேவல’

‘அப்போ’

‘அப்போதான்’

சந்திராவும் சங்கரனும், ஒருவரை ஒருவர் புதிதாய்ப் பார்ப்பது போல், பார்த்தார்கள். ஒவ்வொருவர்க்குள் இருக்கிற இன்னொருத்தரை, புதிதாய்க் கண்டுபிடித்ததுபோல், பகைப் பார்வையாய்ப் பார்த்துக் கொண்டார்கள். கலைவாணி நின்ற இடத்திலே நின்று, குன்றி போய் நின்றாள். அத்துவானக் காட்டில் கார் வெளிச்சத்தாலோ அல்லது பேட்டரி லைட்டாலோ கண்கூசி சு.சமுத்திரம் 235

நின்ற இடத்திலேயே நிற்கும் முயல்குட்டிபோல் நின்றாள். உடல் முழுவதும் உறைந்து போனது. காதுகள், கண்ணுக்கத் தெரியாமல் மூடிக் கொண்டன. ஏதோ ஒன்று, வாளிலும் வலிமையாய், மனதை அறுத்து அறுத்து, ரணமாக்கிக் கொண்டிருந்தது.

இதற்குள், ராசலட்சுமி விழித்துக் கொண்டதாக நினைத்துக் கொண்டாள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்த ஹெச்.ஐ.வி. பற்றி தெரியப்படுத்த வேண்டும் என்று புதுடில்லி பயிற்சி முகாமில் கூறப்பட்டதற்கு ஏற்ப, சந்திரா அம்மாவிடம் எய்ட்ஸ் பற்றி முழுமையாக எடுத்துச் சொல்லி இருந்தாள். எய்ட்ஸ் வேறு... ஹெச்.ஐ.வி. வேறு. என்று எடுத்துரைத்திருக்கிறாள்... ரத்தம் தவிர்த்து, தொட்டாலோ, பட்டாலோ, பழகினாலோ அது தொற்றாது என்றும் சொல்லி இருக்கிறாள். அப்போது தலையாட்டிவள்தான் இந்த அம்மா! ஆனாலும், இப்போ பாதிக் கிணறுதான் தாண்டினாள்... அதுவும் முன் பாதி...”

ராசலட்சுமி, கலைவாணியை கண்கொத்திப்பாம்பாய் பார்த்தாள். பீடை ஒழியுது என்பது மாதிரி சந்தோஷமாகக் கூடப் பார்த்தாள். அவள் குன்றிப் போய் நிற்பதை, தனக்கு விடப்பட்ட சவாலாக நினைத்தாள். இந்த பத்து நாளைக்குள், தனக்கும் ஏதாவது ஆகி இருக்குமோ என்று சந்தேகமாகக் கூட தன்னைப் பார்த்தாள், பிறகு கலைவாணியின் பக்கமாய் நடந்து, எச்சரிக்கையான இடைவெளியில் நின்றபடியே கேட்டாள்.

‘எவ்வளவு நாளாடி... எங்க குடியைக் கெடுக்க திட்டம் போட்டிருக்கே... ஒனக்கு வந்தது எங்களுக்கு எதுக்கடி வரணும்? வெளியே போடி... போயும் போயும் என் மகள்தானாடி... ஒனக்கு கிடச்சாள். போடி வெளியே...”

கலைவாணி, சந்திராவை மருண்டு பார்த்தாள். அதற்குள், சந்திரா கலைவாணியின் முன்னால் போய் நின்று கொண்டு, சபதமிடுவது போல் பேசினாள்.

“கலைவாணி இங்கதான் இருப்பாள்... என்னோடதான் இருப்பாள்’

ராசலட்சுமி, சிறிது விக்கித்து நின்றாள். சந்திராவை, வெறித்துப் பார்த்தாள். அண்ணன் மகனை மெளனமாக நோக்கினாள். கீழே வைத்த சூட்கேசைத் தூக்கிக் கொண்டு நின்றவனைப் பார்த்து, தீர்மானமாகச் சொன்னாள்.

‘அஞ்சு நிமிஷம். பொறுப்பா.. கட்டுறதுக்கு மாற்று சேலை எடுத்துட்டு, நானும் ஒன்னோடயே வாறேன். அப்பவே காப்பாத்துன அண்ணன், கடைசிக்காலத்துலயுமா காப்பாற்றமாட்டார்?" 236 பாலைப்புறா

‘அண்ணன் எதுக்கு அத்தே. நான் இருக்கேன்’

ராசலட்சுமி, அண்ணன் மகன், அடிக்கடிதங்கும் அறைக்குள் போனாள். டிரங்க் பெட்டியை உருட்டும் சத்தம் கேட்டது. மகளால் பொறுக்க முடியவில்லை. அம்மாவைப் பற்றித் தெரியும். முன் காலை வைக்கும் போதே, பின் காலைப் பிடித்துக் கொள்ள வேண்டும்... இல்லையானால், போய் விடுவாள். நான்கடி நடக்க விட்டால், நானுறு கிலோமீட்டர்பாய்ந்து போவாள்.

சந்திரா, அந்த அறைக்குள் ஒடியபோது, சங்கரன், கலைவாணியிடம் கையெடுத்துக்கும்பிட்டே கேட்டான்.

‘நாங்க கெளரவமான குடும்பம்... எங்கள வாழ விடும்மா... வாழவிடு’

கலைவாணி, சங்கரனையே உதடுகள் துடிக்கப் பார்த்தாள். பிறகு, அவனுக்கு முதுகைக் காட்டியபடியே நடந்தாள். கொல்லைப் புறக்கதவை மெள்ளத் திறந்து, அந்த வீட்டை ஒரு சுற்றுச்சுற்றி, அருகே அவளை அழைக்க வந்ததுபோல் முடிந்துபோய்க் கிடந்த பாதை வழியாக நடந்தாள்... சந்திராவிடம் பிடிபடக் கூடாது என்ற வைராக்கியத்துடன், கண், மண் தெரியாமல் முதலில் ஓடினாள். மூச்சிரைத்த போது மட்டும் நின்றாள். பிறகு, அது முடிவது வரைக்கும், நடக்கப் போவது போல் நடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_25&oldid=1639245" இலிருந்து மீள்விக்கப்பட்டது