உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

"என்னிடமும் அன்பில் குழைந்து உருகினாள்; தனக்கு என ஒரு தனி நிலை இல்லாதபடி என்னோடு ஒன்றாயினாள். என் கல்மனம் இதனுயர்வை அறியாது போயிற்றே! அறியாது போயிற்றே! அந்தோ அறியாது போயிற்றே!" என்று துடிதுடித்துப் புலம்புகின்றான் அவன்.

நீராடப் புகுகின்றனர் இப் பெண்கள். தோழியரே முன் செல்கின்றனர். நீரோட்டத்தோடு செல்லும் புல்போல அவர்களோடு அவளும் போகின்றாள். அவள் அவனோடு கூடியதும் அப்படித்தானே!

அவள் எண்ணம் எல்லாம் அவனே. அவள் உயிர் எல்லாம் அவனிடமே ஓடி வந்து புகுந்துகொண்டது. வெற்றுடலாக அசைகிறாள் அவள்; அவர்கள் இயக்க இயங்குகிறாள். அவர்களது அன்பின் ஆற்றல் அவளை நகையாடச் செய்கிறது; அருவியாடச் செய்கிறது. உயிர் கொடுக்கும் ஒப்பற்ற சமுதாயம் அன்றோ, அந்த ஆயம்! அவளுடைய மனமோ வேறோர் இடத்தில்—அவன் உள்ளத்தில்—சிறையுண்டுகிடக்கின்றது. "அவள் அருவியாடுவதிலும் அந்த உண்மை இப்போது நன்றாக விளங்குகிறது; நேற்று விளங்கவில்லையே!" என்று நைகிறான் அவன்.

இந்தப் பெண்களோ அருவிகளையும் தோழிமாராகக் கொண்டு எதிரே துள்ளிக் குதித்து விளையாடுகிறார்கள்;

நீர்வீழ்ச்சியை அணைத்துக்கொள்கின்றனர்; தெறிக்கின்றனர்; தலைமேல் தாளம் கொட்டச் செய்கின்றனர்; உடல் எல்லாம் வீழ நிற்கின்றனர்; நீர் அரமகளிராய் நிலவுகின்றனர்; நீரை வாரி ஒருவர்மேல் ஒருவர் வீசுகின்றனர்;

4