உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

கிறதா? அதேபோல இந்த நப்புன்னையைப் பார்க்கும்போதெல்லாம் அத்தான்மேலே எனக்கு அன்பு பொங்குகிறது' என்று தன் தாயை நோக்கி வள்ளி கூறுகிறாள். எல்லோரும் கலகல என நகைக்கின்றார்கள்.

" 'நப்புன்னையை வள்ளி மறப்பதில்லை. நாள்தோறும் தண்ணீர் ஊற்றுவது யாரும் செய்வதே! தனக்குத் தாயார் தரும் பாலையும் தேனையும் ஊற்றி வள்ளி வளர்க்கின்றாள்; உணவுப் பொருள்களை யாருக்கும் தெரியாமல் அதன் வேரில் புதைத்துவைத்துக்கொண்டே இருக்கின்றாள். பின்னர்த் தோண்டிப் பார்க்கும்போது அவை மண்ணோடு மண்ணாய் மட்கி மறையும் அல்லவோ? 'நப்புன்னை இவற்றை உண்டுவிடுகின்றாள்' என்றே நம்புகின்றாள் வள்ளி. புன்னைமரம் பூக்கும்போதெல்லாம் ஒரு பெரிய திருவிழா! ஒரு பெரிய விருந்து!

" 'ஆண்டுகள் பறக்கின்றன. வள்ளியும் முருகனும் பெரியவர்கள் ஆகின்றனர். இருவருக்கும் திருமணம் நடந்தேறுகிறது. வள்ளியும் தன் குடிக்கு ஒரே குழவி; முருகனும் தன் குடிக்கு ஒரே குழவி. இருவர் செல்வமும் ஒன்றாவதும் உண்மையே! வள்ளி, முருகன் வீட்டுக்குப் போவதே மரபு. ஆனால், நப்புன்னையைவிட்டு எப்படிப் போவாள் வள்ளி? அனைவரும் இதனை உணர்கின்றனர். முருகனை விட இந்த உண்மையை உணர்வார் யார்? ஆதலின், முருகனே வள்ளியின் வீட்டில் வாழவருகின்றான்.

" 'சகுந்தலை நீர் ஊற்றிச் செடிகளை வளர்த்ததனை அறிவோம். வள்ளிபோலப் பால் ஊற்றி வளர்த்ததனை

28