உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

—தன் நாட்டுத் தலைவன் மகளுக்கு...தூய்மைக்கு...அழகுக்க—அன்புக்கு...அறிவுக்கு...ஆருயிர்க்கு—எதிர்கால வாழ்வுக்குத் தந்த கலைப் பரிசில்! அவை வேறு எங்கே ஒளி பெறும்? ஒலி பெறும்? ஆம்! ஆம்! அவையே! ஐயம் இல்லை!

இந்த வழியே இவன் உள்ளத்தில் ஓர் ஊக்கம் பிறக்கிறது. பாட்டாக, நெஞ்சுடன், பாடாமல் பாடுகிறான். உள் ஆழம் தோன்றுகிறது. தோழியும் தானே கேட்டுக்கொண்டிருக்கிறாள். அவள் உள்ளத்திலும் அந்த ஊக்கம் பிறக்கும் அன்றோ?

இயற்கையின் ஐம்புல விருந்தும்—இல்லை நாற்புலவிருந்தும்—இந்த நாடும்—காதல் வாழ்வும்—எல்லாம் கலையாய் இவளை அழகு செய்வதனையே முடிந்த முடிபாகக் கொண்டுள்ளன! இவளும் இவனும் கூடிய கூட்டம் கடவுட் கூட்டம் ; இயற்கைக் கூட்டம். எல்லாம் இதற்கெனவே படைக்கப்பெற்றுள்ளன. படைப்பின் முடிமணி அவள். இனி ஏன் தயக்கம்?

11

"இதனை அவள் கண்களே, காட்டவில்லையா? என்ன அழகு! நீரில் பூத்த குவளை ஈரமற்று நிற்குமா? அந்தக் குவளையே இந்தக் கண்கள். ஆனால், மையுண்ட கண்கள் விரிந்து பரந்து விளங்குகின்றன. ஈரப் பார்வை ! நிழல்தரும் பார்வை ! களங்கமற்ற பார்வை ! கள்ளைக் குடித்தவன் களிப்புப்போலத் தன்னையும் அறியாது இன்பமும் அன்பும் பொங்கும் பார்வை! என்னைக் கண்ட களிப்பில் எல்லாவற்றையும் மறந்துநிற்கும் மகிழ்ச்சிப் பார்வை !

44