உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தினசரியா பாட்டு?

உண்மையை உணர்ச்சி நிலையில் உணர்த்தி, நம் மனத்தை நீர்ப் பிண்டமாய் உருக்கி, அந்த உயர்ந்த நிலையே இறுகிநிற்குமாறு செய்வன அல்லவோ? புறப்பாடல்களும் அகப்பாடல்களும் அத்தகையனவே ஆம். புறநானூற்றுப்பாடல்கள் அன்றும் உண்மை, இன்றும் உண்மை, என்றும் உண்மை. தோற்றத்தைக் கண்டு களித்து, அதன் வழியே தோற்றத்தின் அடிப்படையை வெளியிடுவது ஒருமுறை. மாறிமாறி வரும் தோற்றத்தினை அறவே விட்டொழித்து, அடிப்படையான உள்ளூடு நிலையை விளக்கிப் பகருவது மற்றொரு முறை. தோற்றம், புறத்தோற்றம்; ஆதலின், புறப்பாடலாய் வளரும். உள்ளூடு நிலையோ, மனநிலை என்றும் உயிர்நிலை என்றும், உயிர்க்குயிராம் கடவுள் நிலை என்றும் கூறத்தக்க அகநிலையின் ஆழமாம் அகப்பாடலாய் வேரூன்றி நிலைக்கும். தமிழன் கண்ட கடவுள் நிலை என்ன? "அன்பே சிவமாவது ஆரும் அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே" என்பதன்றோ தமிழ்த் திருமூலர் கண்ட திருமந்திரம்! ஆதலின், அகப்பாடல் அன்புப் பாடலாக அமைகிறது. வெறுங்காமமோ காதலோ அன்று அகப்பாடல்கள் பாடுவது. தோற்றத்தின் அடிப்படையான உண்மை நிலையாம் அகத்தினைக் கடவுள் வடிவாம் அன்பின் பலவேறு நிலைகளாகக் கண்டு அக நானூறு முதலியன பாடுகின்றன. இவ்வாறு அகநிலையான அடிப்படையினைப் பாடுவதால் அன்றோ, தேவாரமும் திருக்கோவையாரும் ஆழ்வார்கள் அருளிச் செயலமுதமும் இவ்வகப்பாடல்களைக் கடவுட் பாடலாகக் கொண்டு தம் ஆன்ம அனுபவத்தினை வெளியிடுகின்றன! எனவே, புறம், அகம் என்பனவற்றை Phenomenon and Noumenon என்ற

67