உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

தலைவி: நான் எது சொன்னாலும் நம்பிக்கை இல்லையா? பேச்சுக் கொடுத்துத் துன்பத்தினைப் போக்க எண்ணமா? வேறு போக்குக் காட்டி மாற்ற எண்ணமா? ஐயம் ஏன்? அதோ கேள்! "பாதிரிப்பூ பாதிரிப்பூ!" என்று அவள் விற்று வருவதை.

தோழி: கேட்கிறது. அதோ அந்தப் பெண்ணும் வருகிறாள்.

தலைவி: அவள் ஒருத்தி, நடுவே எங்களுக்கு எனப் பிறந்தாளே?

தோழி: உனக்கெனப் பிறந்து, பூவினைக் கொண்டு வருகிறாளா? பூவினை வாங்கலாமா?

தலைவி: அவள் என்ன நட்பா? பகையா? இரண்டும் கெட்டவள்! அயலாள். பாவம்! அவள் யாரோ? நான்யாரே?

தோழி:

"யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே"

என்று இன்று பாடலாகாதா, அயலாட்டி மலர் கொண்டு மகிழ்வித்து இன்பூட்டுகிறாள் என்று?

தலைவி: அடிப்படையை மறந்து பேசுகிறாய். அன்றோ அன்புப் பசை! இன்றோ வற்றல் மரம்? அன்று வேம்பும் கருப்புக் கட்டியாம்! இன்று அமுதமும் நஞ்சாகிறது!

தோழி: நஞ்சாவது கிஞ்சாவது - நல்ல மணம் தூய வெள்ளை நிறம் - நடுவே சிறிது இளஞ் சிவப்பு.

90